Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஜூன் 12-ல் வெளியாகும் அஞ்சான் டிரெய்லர்

Posted: 05 Jun 2014 08:49 AM PDT

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் 'அஞ்சான்'. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார்.

ஜெயம் ரவி-ஷாமுக்கு வாய்ப்பு கொடுக்க பாலா சம்மதம்

Posted: 05 Jun 2014 08:16 AM PDT

'சலீம்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. விஜய் ஆண்டனி, ஷாம், பாலா, 'ஜெயம்' ராஜா மற்றும் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். அப்போது 'ஜெயம்' ராஜா பேசும் போது, "என் தம்பி 'ஜெயம்' ரவிக்கு உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு தரவேண்டும்" என்று பாலாவிடம் வாய்ப்பு கேட்டார். அதே போல் ஷாம் பேசும் போது, பாலா படத்தில் நடிப்பது என் பெருங்கனவு

வில்லி வேடத்தில் நடிக்கும் பூனம் பஜ்வா

Posted: 05 Jun 2014 07:51 AM PDT

தமிழில் 'சேவல்' படம் மூலம் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. அதன் பிறகு 'தெனாவட்டு', 'கச்சேரி ஆரம்பம்', 'துரோகி', 'தம்பிக்கோட்டை' போன்ற படங்களில் நடித்தார். தமிழில் வாய்ப்புகள் கிடைத்தாலும் தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப்

செல் முருகனை தனி காமெடியனாக்கிய விவேக்

Posted: 05 Jun 2014 06:09 AM PDT

விவேக்குடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கியவர் செல் முருகன். இவர்கள் இருவரும் இணைந்து கலக்கிய சாமி, மின்னலே, திருமலை, மாப்பிள்ளை, பவானி ஐபிஎஸ், அந்தோணி யார்? போன்ற பல படங்களில் இவர்களது காமெடிக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. கிட்டத்தட்ட

நான் இஸ்லாம் மதத்துக்கு மாறமாட்டேன்: விஜய் ஆண்டனி

Posted: 05 Jun 2014 04:50 AM PDT

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வெளிவரவுள்ள படம் 'சலீம்'. இப்படம் குறித்து விஜய் ஆண்டனி பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 'நான்' படத்தில் சலீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த கதாபாத்திரத்தின் பெயரைத்தான் இந்த படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறோம். மற்றபடி, இப்படம் 'நான்' படத்தின் இரண்டாம் பாகமா? இல்லையா?

என் சினிமா வாழ்க்கையில் மஞ்சப்பை திருப்புமுனை படம்: விமல் பேட்டி

Posted: 05 Jun 2014 01:14 AM PDT

விமல்–லட்சுமிமேனன் ஜோடியாக நடித்த 'மஞ்சப்பை' படம் நாளை ரிலீசாகிறது. இதில் ராஜ்கிரணும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்படத்தை லிங்குசாமி, என்.சுபாஷ்சந்திரபோஸ் தயாரித்துள்ளனர். என்.ராகவன் இயக்கியுள்ளார். 'மஞ்சப்பை' படம் குறித்து விமல் கூறியதாவது:– மஞ்சப்பை படம் சிறப்பாக வந்துள்ளது. என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை படமாக இது இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படமாக வந்துள்ளது. பொழுதுபோக்குகள் நிறைந்த குடும்ப கதை.

சினிமாவை காப்பாற்ற யாரும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை: நடிகர் பார்த்திபன் ஆதங்கம்

Posted: 05 Jun 2014 01:09 AM PDT

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள 'சலீம்' படத்தின் ஆடியோ வெளியீடு இன்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் பேசும்போது, சினிமாவை அழிப்பதற்காகத்தான் இங்கே நிறைய வழிகள் இருக்கிறதே தவிர, அதை காப்பாற்ற எந்த வழியும் இல்லை என தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். இதற்காக கதை ஒன்றை உதாரணமாக கூறினார். அதாவது, அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிப்பதற்காக ஒரு மெஷினை கண்டுபிடித்தார்கள். அந்த மெஷினை அமெரிக்காவில் வைத்தார்கள். அங்கு அது 10 ஆயிரம் பேரை பிடித்துக் கொடுத்தது. அதேபோல் ஜப்பானில் கொண்டுபோய் அந்த மெஷினை வைத்தார்கள். அங்கு அது 8 ஆயிரம் பேரை பிடித்துக் கொடுத்தது. ரஷ்யாவில் கொண்டுபோய் அந்த மெஷினை

என்னுடைய மனைவிதான் எனக்கு உயிர்: படவிழாவில் விஜய் ஆண்டனி பெருமிதம்

Posted: 05 Jun 2014 12:00 AM PDT

'நான்' படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் 'சலீம்'. அவருக்கு ஜோடியாக அக்ஷா பர்தஷ்னி நடிக்கிறார். என்.வி.நிர்மல் இயக்குகிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கேயார், இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா, ஆர்.வி.உதயகுமார், பார்த்திபன், சதீஷ், ஆர்.கே.செல்வமணி, எம்.ராஜா, நடிகர் ஷாம் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், சலீம் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் விஜய் ஆண்டனி பேசும்போது,

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online