Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


பொது இடத்தில் புகைப்பிடித்த சக்தி கபூர் மீது வழக்கு

Posted: 04 Jun 2014 08:35 AM PDT

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சங்கானர் விமான நிலையத்தில் பொது இடத்தில் புகைப்பிடித்ததாக பாலிவுட் நடிகர் சக்தி கபூர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொது இடத்தில் சக்தி கபூர் புகைப் பிடிக்கும் புகைப்படம் நேற்று பத்திரிகையில் வெளியானது. இதனை ஆதாரமாக வைத்து அவர் மீது நடவடிக்கை

நடிகை மனோரமாவுக்கு மூச்சுத்திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 04 Jun 2014 07:35 AM PDT

நடிகை மனோரமா மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவுக்கு 77 வயது ஆகிறது. 2 வருடங்களுக்கு முன்பு அவருடைய முழங்காலில் பயங்கர வலி ஏற்பட்டது.

என்ன சத்தம் இந்த நேரம் எனக்கு பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கிறது: ஜெயம் ராஜா

Posted: 04 Jun 2014 06:19 AM PDT

இயக்குனர் ஜெயம் ராஜா நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் புதிய படம் 'என்ன சத்தம் இந்த நேரம்'. படத்தின் சிறப்பம்சம் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் நடித்திருப்பதுதான். இந்த குழந்தைகளின் அப்பாவாகத்தான் இயக்குனர் ஜெயம் ராஜா நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் குரு ரமேஷ். மேலும் இப்படத்தில் நிதின் சத்யா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மாளவிகா

ஜெனிலியாவை ரொம்ப பிடிக்கும்: நடிகர் சாந்தனு பேட்டி

Posted: 04 Jun 2014 05:43 AM PDT

திரைப்பட இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– தற்போது 'வாய்மை' என்னும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். கதாநாயகன் நான்தான். ஆனால் முக்கிய நபர்கள் 12 பேர் நடித்துள்ளனர். தியாகராஜன், ஊர்வதி, பூர்ணிமா ஜெயராம், கவுண்டமணி, மனோஜ்குமார் உள்பட முன்னணி

கடவுள் இல்லைன்னு நான் சொன்னதே கிடையாது: விவேக் பேட்டி

Posted: 04 Jun 2014 04:44 AM PDT

கடந்த 25 வருடங்களாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்த விவேக், முதன்முறையாக கதாநாயகனாக, குணச்சித்திரத்தில் முத்திரை பதித்திருக்கும் படம் 'நான்தான் பாலா'. இப்படத்தை இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆர்.கண்ணன் இயக்குகிறார்.

கும்பகோணத்தில் நண்பேன்டா சினிமா படப்பிடிப்பு: உதயநிதி, நயன்தாரா பங்கேற்பு

Posted: 04 Jun 2014 02:57 AM PDT

கும்பகோணம் பகுதிகளில் ரெட்ஜெயன்ட் மூவி சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் நண்பேன்டா என்ற புதிய சினிமா படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். நேற்று உதயநிதி ஸ்டாலின்–நயன்தாரா தொடர்பான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன.

கோச்சடையான் 2–ம் பாகம் தயாராகிறது

Posted: 04 Jun 2014 02:13 AM PDT

'கோச்சடையான்' படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. இதிலும் ரஜினியே நடிக்கிறார். கோச்சடையான் படம் கடந்த மாதம் 23–ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளிவந்தது. மூன்று நாட்களில் இப்படம் ரூ.40 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. ஆறு மொழி சேட்டிலைட் உரிமைகள் மற்றும் ரிங்டோன் ஒப்பந்தங்களையும்

சினிமா லைட்மேன் குழந்தைகளுக்கு கலைப்புலி தாணு ரூ.1 லட்சம் கல்வி உதவி

Posted: 04 Jun 2014 02:06 AM PDT

கலைப்புலி தாணு வி.கிரியேஷன்ஸ் சார்பில் அரிமா நம்பி என்ற படத்தை தயாரிக்கிறார். விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கின்றனர். இம்மாதம் இப்படம் ரிலீசாகிறது. ஆனந்த் சங்கர் இயக்குகிறார். அரிமாநம்பி படம் ரிலீசையொட்டி கலைப்புலி தாணு திரைப்பட தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கினர். சினிமா லைட்மேன்கள் குழந்தைகள் 100 பேருக்கு புத்தங்கள் வாங்க ரூ.1

தமிழில் வருகிறது: 2 மலையாள படம் ரீமேக்கில் கமல்

Posted: 04 Jun 2014 01:58 AM PDT

தமிழில் தயாராகும் இரண்டு மலையாள படங்கள் ரீமேக்கில் கமல் நடிக்கிறார். திரிஷ் மலையாள பட ரீமேக்கில் கமல் நடிப்பது ஏற்கனவே முடிவாகியுள்ளது. இப்படம் மோகன்லால் மீனா ஜோடியாக நடித்து கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. வசூலையும் வாரி குவித்தது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கனடா மொழிகளில் ரிமேக் ஆகிறது. தமிழ் பதிப்பில் கமல் நடிக்கிறார். இதை தொடர்ந்து மோகன்லால்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ திருமணத்தில் நிதி திரட்டும் அமலாபால்

Posted: 04 Jun 2014 01:14 AM PDT

சமூக சேவை பணிகளில் நடிகைகள் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். ஹன்சிகா ஆதரவற்ற 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த குழந்தைகளின் படிப்பு செலவு, தங்குமிடம், உணவு அனைத்தையும் சொந்த செலவில் கவனித்துக் கொள்கிறார். நடிகை திரிஷா பிராணிகள் நலனில் அக்கறை காட்டுகிறார். தெருவோர நாய்களை வளர்த்து தத்து கொடுக்கிறார். நமீதா உள்ளிட்ட மேலும் பல நடிகைகளும் சமூக சேவைகளில் ஓசையில்லாமல் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாய்பாபா பக்தையான நடிகை சினேகா

Posted: 04 Jun 2014 01:07 AM PDT

நடிகை சினேகா தீவிர சாய்பாபா பக்தையாக மாறியுள்ளார். படங்களில் பிசியாக நடித்த போது ஆன்மீகத்தில் அவருக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. ஆனால் தற்போது அவரிடம் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆன்மீக பணிகளில் அக்கறை காட்டுகிறார். குறிப்பாக சாய்பாபா மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு அடிக்கடி செல்கிறார். சிறப்பு

எனக்கு திருமணம் நடக்கவில்லை: நடிகை பூஜா

Posted: 04 Jun 2014 12:59 AM PDT

நடிகை பூஜாவுக்கு ரகசிய திருமணம் நடந்ததாக இரு தினங்களுக்கு முன் செய்திகள் பரவின. இளைஞர் ஒருவருடன் திருமண மாலையுடன் பூஜா நிற்பது போன்று படங்களும் வெளியானது. பூஜாவுடன் இருப்பதுதான் மாப்பிள்ளை என்றும் கூறப்பட்டது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. யாரை திருமணம் செய்தார். தொழில் அதிபரா? நடிகரா? என்று அறிந்து கொள்ள பலரும் ஆர்வப்பட்டனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online