Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தமிழ் நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர பேட்மிண்டன் போட்டி

Posted: 26 Jun 2014 06:31 AM PDT

இந்திய சினிமா உலகைச் சேர்ந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து 'நட்சத்திர கிரிக்கெட்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதேபோல், தமிழ் நடிகர்களை ஒன்று திரட்டி, பேட்மிண்டன் போட்டிகளை நடத்த இந்தியன் பேட்மிண்டன் செலிபிரட்டி லீக் என்ற அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதாக தமிழின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி,

சூப்பர் ஸ்டார் கெட்டப்பில் நடிக்கும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்

Posted: 26 Jun 2014 06:07 AM PDT

தமிழ் திரை விருட்சகம் சார்பாக தமிழ்மணி தயாரிக்கும் புதிய படம் 'கிடா பூசாரி மகுடி'. இதில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம் தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். கேரளாவைச் சேர்ந்த நட்சத்திரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சிங்கம் புலி, பவர் ஸ்டார் சீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, செவ்வாளை ராசு, போண்டாமணி, கலைராணி, கம்பம் மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார்: ஆதாரம் கிடைக்காமல் போலீஸ் திணறல்

Posted: 26 Jun 2014 04:34 AM PDT

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மே மாதம் 30–ந்தேதி கடந்த ஐ.பி.எல். போட்டியின்போது தன்னை தொழில் அதிபர் நெஸ்வாடியா பாலியல் தொந்தரவு செய்ததாக நடிகை பிரீத்தி ஜிந்தா போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரீத்தி ஜிந்தா நடந்த சம்பவம் குறித்து

நடிகை அன்சிபாவுக்கு கொலை மிரட்டல்

Posted: 26 Jun 2014 03:54 AM PDT

அன்சிபா ஹாசன் கேரளாவை சேர்ந்தவர். தமிழில் பரஞ்சோதி என்ற படத்தில் நடித்தார். கடந்த வருடம் இது ரிலீசானது. அதன் பிறகு தொடர்ந்து தமிழில் படங்கள் வராததால் மலையாளத்துக்கு போனார். அங்கு திரிஷ்யம் படத்தில் மோகன்லால், மீனா தம்பதியின் மூத்த மகள் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. மலையாள

டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் தற்கொலை

Posted: 26 Jun 2014 03:19 AM PDT

டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் சென்னையில் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54. பாலமுரளி மோகன் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். விவேக்குடன் நடித்த டி.வி. நிகழ்ச்சி செய்தி வாசிப்பாளர் தேர்வு காமெடி பிரபலமானது. ''வாளைப்பழ தோல்

சினிமாவுக்கு இந்தியா முழுவதும் அரசுகள் உதவி செய்யவில்லை: கமல் பேச்சு

Posted: 26 Jun 2014 02:50 AM PDT

சாய் கோகுல் ராம்நாத் இயக்கத்தில் சேது, சந்தானம், விசாகா, நடிக்கும் படம் 'வாலிபராஜா'. இப்படத்தை எச்.முரளி தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னை தேவி தியேட்டரில் நடந்தது. இதில் கமலஹாசன் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு பேசியதாவது:– இளைஞர்கள் இணைந்து இப்படத்தை எடுத்துள்ளனர். திரையுலகுக்கு வரும் புதியவர்களையும் இளைஞர்களையும் பாராட்ட வேண்டும். அதற்காகவே இந்த விழாவுக்கு வந்தேன். அப்படி பாராட்டாதவர்கள் யாரும் பெயர் வாங்க முடியாது. அதற்கு உதாரணம் எனது வாத்தியார் கே.பாலசந்தர். அவரும் இளைஞராகத்தான் இருக்கிறார். எனது 'உத்தமவில்லன்' படத்திலும் நடிக்கிறார்.

ஷாருக்கானுக்கு பிரான்ஸ் அளிக்கும் உயரிய விருது

Posted: 25 Jun 2014 10:54 PM PDT

ஹிந்தித் திரையுலகின் பிரபல நட்சத்திர நடிகரான ஷாருக்கானுக்கு பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருது அளிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. திரைத்துறையில் கானின் பங்களிப்பிற்காக பிரான்ஸ் நாட்டின் ராணுவத்தினர், பொதுமக்கள் பிரிவிற்கு அளிக்கப்படும் உயரிய விருதான 'லெஜன் டி ஹானர்' விருதை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரன்ட் பேபியஸ் அடுத்த வாரம் மும்பைக்கு வந்து ஷாருக்கானுக்கு அளிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online