Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


இளையராஜா பிறந்தநாள் மரக்கன்று நட்டார்

Posted: 02 Jun 2014 05:01 AM PDT

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 71–வது பிறந்த நாளை கொண்டாடினார். சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் தனது பிறந்த நாளையொட்டி மரக்கன்று நட்டார். பின்னர் இளையராஜா எழுதிய புத்தகங்கள் தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது. டைரக்டர் பாலா இதில் பங்கேற்று புத்தகங்களை வெளியிட்டார். இளையராஜா பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அவரது ரசிகர்கள் அறிவித்து

நமீதா வாங்கிய நாய்க்குட்டி

Posted: 02 Jun 2014 04:25 AM PDT

நமீதா புதிதாக நாய்க்குட்டி வாங்கியுள்ளார். ஏற்கனவே ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார். அதற்கு 'சாக்லெட்' என பெயரிட்டார். தற்போது புதிதாக இன்னொரு நாய்க்குட்டி வாங்கி இருக்கிறார். இதற்கு 'கேரமல்' என பெயர் வைத்துள்ளார் நமீதா ஆக்ஷன் படமொன்றில் நடிக்க தயாராகிறார்.

இந்தி டைரக்டர் சாஜித்கானுடன் காதலா?: தமன்னா மறுப்பு

Posted: 02 Jun 2014 02:03 AM PDT

தமன்னா, இந்தி டைரக்டரை காதலிப்பதாக செய்திகள் பரவி உள்ளன. 'ஹம்சகல்ஸ்' என்ற இந்தி படத்தில் தமன்னா நடிக்கிறார். இந்த படத்தை சாஜித்கான் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பில் தமன்னாவுக்கும் சாஜித்கானுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் அடிக்கடி இருவரும் தனியாக சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின. இதுகுறித்து தமன்னாவிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:– சாஜித்கானை நான் காதலிப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. எங்களுக்குள் அப்படி உறவு எதுவும் கிடையாது. சாஜித்கான் எனக்கு சகோதரர் போன்றவர். யாரையும் நான் காதலிக்கவில்லை. தற்போதைய நிலையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். அதனை குலைக்க மாட்டேன். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். எனது முழு கவனமும் நடிப்பில்தான் இருக்கிறது.

பாலு மகேந்திராவை பற்றி ஆர்.எஸ்.பிரசன்னா உருவாக்கியுள்ள டி.வி.டி

Posted: 02 Jun 2014 01:53 AM PDT

தமிழ் சினிமாவில் மகத்தான திரைப்படங்களையும் திறமையான இயக்குனர்களையும் உருவாக்கியவர் பாலுமகேந்திரா. அவரது பட்டறையில் இருந்து தான் பாலா, ராம் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இயக்குனர்களாக உருவாகி வந்தார்கள். அவர் இருக்கும் போதே மூன்று பேரும் தமிழ் சமூகம் கண்டிராத சிறப்பான படங்களை உருவாக்கி தாங்கள் கேமிரா கவிஞரின் சிஷ்யர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். பாலு மகேந்திரா கடைசியாக எடுத்த தலைமுறைகள் படம் தாய்க்கும் மகனுக்கும், தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையேயான பாசப்பிணைப்பின் அழுத்தத்தை உணர வைத்தது. அசத்தலான ஒளிப்பதிவால் ரசிகர்களின் நெஞ்சங்களில் புகுந்த பாலு மகேந்திரா தற்போது நம்முடன் இல்லை. அவர் இல்லை என்றாலும் அவரது புகழ், அவரால் உருவாக்கப்பட்டுள்ள இயக்குனர்களாலும், அவரது திரைப்படங்களாலும் பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும்.

தனது வாழ்க்கையை படமாக எடுக்க நயன்தாரா எதிர்ப்பு

Posted: 02 Jun 2014 01:43 AM PDT

நயன்தாரா வாழ்க்கை கதையை படமாக எடுக்க முயற்சிகள் நடக்கிறது. திரையுலகில் நிகழ்த்திய சாதனைகள், காதல் சர்ச்சைகள் அனைத்தையும் உள்ளடக்கிய படமாக இது இருக்கும் என்கின்றனர். நயன்தாரா 2005–ல் ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சந்திரமுகி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். ஸ்ரீராமராஜ்ஜியம் தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். நிறைய ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

மரக்கன்று நட்டு பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜா

Posted: 02 Jun 2014 01:11 AM PDT

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, 'அன்னக்கிளி' படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்தவர், இளையராஜா. தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை கொண்டு விட்ட இளையராஜா உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்று, தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார். நமது நாட்டின் மிகச் சிறந்த இசையமைப்பாளராக மட்டுமின்றி, வாத்தியக் கலைஞராகவும், இசைக் குழுவை நிர்வகிப்பவராகவும், பாடகராகவும்,

முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சமந்தா

Posted: 02 Jun 2014 12:32 AM PDT

விஜய், சூர்யா என இரு முன்னணி கதாநாயகர்களுடன் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, விக்ரம் நடிக்கும் 'பத்து எண்றதுக்குள்ள' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை 'கோலி சோடா' இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார். இப்படத்தில் சமந்தா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். கிராமத்து பெண்ணாகவும், நகரத்து பெண்ணாகவும் மாறுபட்ட இரண்டு வேடங்களில் நடிக்கவிருக்கிறாராம். இந்த படத்திற்காக இந்தி படவாய்ப்பையும் உதறி தள்ளியுள்ளாராம்.

என் படத்தில் சித்த வைத்தியர்களை இழிவுப்படுத்தவில்லை: பரத் பேட்டி

Posted: 01 Jun 2014 11:20 PM PDT

பரத், நந்திதா ஜோடியாக நடிக்கும் படம். ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி. எம்.ஜி.ரவிச்சந்தர் இயக்குகிறார். படத்தில் சேலம் சித்த வைத்தியர்களை விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் பரவின. இதற்கு பதில் அளித்து பரத் அளித்த பேட்டி வருமாறு:– ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி எனது 25–வது படம். நிறைய கதைகள் கேட்டு இந்த கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். டைரக்டர் என்னிடம் கதை சொன்னதுமே பிடித்தது. பிறகு அவரை தயாரிப்பாளர்கள் மோகன், புஷ்பா கந்தசாமி போன்றோரிடம் அனுப்பினேன். அவர்களுக்கும் பிடித்தது. முழு நீளகாமெடி படமாக வந்துள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online