Maalaimalar Tamil Cinema News
Maalaimalar Tamil Cinema News |
- இயக்குனராக அவதாரம் எடுக்கும் ஜேம்ஸ் வசந்தன்
- திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ திடீர் விலகல்
- சென்னையில் பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா
- பாடகிகளாகும் லட்சுமிமேனன், சினேகா, ரம்யா
- கத்தி படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து
- திரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வெங்கடேஷை சிபாரிசு செய்தேன்: கமலஹாசன்
- படப்பிடிப்புகளில் சுருதி ஹாசனுக்கு பாதுகாப்பு
இயக்குனராக அவதாரம் எடுக்கும் ஜேம்ஸ் வசந்தன் Posted: 16 Jun 2014 07:08 AM PDT 'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட, தொடர்ந்து இசையமைப்பாளராக பல படங்களில் பணியாற்றினார். இந்நிலையில், ஜேம்ஸ் வசந்தன் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். |
திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ திடீர் விலகல் Posted: 16 Jun 2014 06:13 AM PDT திமுகவில் பொறுப்பில் இல்லாவிட்டாலும். அக்கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடுமையாக பிரசாரம் செய்த நடிகை குஷ்பூ, அக்கட்சியில் விலகுவதாக முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர் வரை அனைவரும் |
சென்னையில் பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா Posted: 16 Jun 2014 06:02 AM PDT இந்திய சினிமா துறையில் தேசிய விருதுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மதிப்பு வாய்ந்ததாக கருதப்படும் விருது பிலிம்பேர் விருது. பிலிம்பேர் பத்திரிக்கையால் வழங்கப்படும் இந்த விருதுகள் முதலில் பாலிவுட் சினிமாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரைப்படங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த வருடம் தென்னிந்திய படங்களுக்கான 60-வது ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த வருடம் பிலிம்பேர் விருது |
பாடகிகளாகும் லட்சுமிமேனன், சினேகா, ரம்யா Posted: 16 Jun 2014 04:13 AM PDT நடிகை ஆண்ட்ரியா ஏற்கனவே பிரபல பாடகியாக இருக்கிறார். 'அந்நியன்' படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா' ஹிட் பாடலை பாடினார். துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாட்டையும், வணக்கம் சென்னை படத்தில் எங்கடி பொறந்த பாட்டையும் பாடினார். இவை ஹிட் பாடல்களாக அமைந்தன. சுருதி ஹாசனும், பாடல்கள் பாடி இருக்கிறார். நடிகை ரம்யா நம்பீசன் பாண்டியநாடு படத்தில் பைபை பாடலை பாடி பாடகியாக அறிமுகமானார். |
கத்தி படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து Posted: 16 Jun 2014 03:45 AM PDT 'கத்தி' படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து கொடுத்தார். படப்பிடிப்பு- முடிவடைவதை தொடர்ந்து இந்த விருந்து நடந்தது. 'கத்தி' படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் துவங்கப் பட்டது. மும்பை, ஐதராபாத், சென்னை மற்றும் வெளி நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்தது. வடபழனி புஷ்பா கார்டனில் பெரிய அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. 40 நாட்கள் இங்கு படப்பிடிப்பை நடத்தினர். |
திரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வெங்கடேஷை சிபாரிசு செய்தேன்: கமலஹாசன் Posted: 16 Jun 2014 01:36 AM PDT திரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வெங்கடேஷை நான் தான் சிபாரிசு செய்தேன் என்று கமலஹாசன் கூறியுள்ளார். திரிஷ்யம் படம் மலையாளத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. 150 நாட்களை தாண்டி இப்படம் ஓடியது. வசூலிலும் சாதனை படைத்தது. மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து இருந்தனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடந்தது. இதன் 'ரீமேக்' |
படப்பிடிப்புகளில் சுருதி ஹாசனுக்கு பாதுகாப்பு Posted: 16 Jun 2014 01:21 AM PDT சுருதி ஹாசனுக்கு தொந்தரவுகள் தொடர்வதால் படப்பிடிப்புகளில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார். சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அறை குறை ஆடையில் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார். இந்தியில் டிடே படத்தில் விலை மாது கேரக்டரில் படுக்கையறை காட்சியில் நெருக்கமாக |
You are subscribed to email updates from மாலை மலர் | சினிமா செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment