Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சூப்பர் ஸ்டாரின் மனதை கவர்ந்த முண்டாசுபட்டி

Posted: 15 Jun 2014 05:38 AM PDT

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி.வி.குமாரின் திருகுமரன் என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'முண்டாசுபட்டி' திரைபடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார். படத்தை பார்த்த பின், 'முண்டாசுபட்டி' தன் மனதை கவர்ந்ததாகவும், மனம் விட்டு பல இடங்களில் சிரித்ததாகவும் கூறினார்.

வில்லனாகிறார் பாய்ஸ் மணிகண்டன்

Posted: 15 Jun 2014 05:32 AM PDT

2014-ம் ஆண்டில் உருவாகும் காதல் எப்படிப்பட்டது. இன்றைய காதலர்கள் சந்திக்கும் நல்லது, கெட்டது பற்றி அலசும் படமாக உருவாகி வருகிறது 'காதல் 2014'. இப்படத்தை சுகந்தன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் இயக்குனர் சேரனிடம் 'ஆட்டோகிராப்' படம் வரை உதவியாளராக பணியாற்றியுள்ளார். அத்துடன் பாலசேகரன், ஆர்.கண்ணன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்தி பட நாயகன் தமிழில் அறிமுகமாகும் காதல் பைத்தியம்

Posted: 15 Jun 2014 05:24 AM PDT

இந்தியில் 'ஏ தில் ராம்தா ஜோகி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த ஆதர்ஷ் என்பவர் தமிழில் அறிமுகமாகும் புதிய படத்திற்கு 'காதல் பைத்தியம்' என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜீவிகா நடிக்கிறார். இவர் கன்னடத்தில் 'பிரம்மா விஷ்ணு மகேஷ்வரா' என்ற படத்தில் நடித்தவர். மேலும், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், பிரியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இனியா வீட்டில் கொள்ளை: சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட காதலன் கைது

Posted: 15 Jun 2014 12:09 AM PDT

தமிழில் வாகை சூடவா, மவுன குரு, மாசாணி, நான் சிகப்பு மனிதன், போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இனியா. இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க்க கடவு ஆகும். மலையாளத்தில் 'சைரா' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இனியா அதன் பிறகு தமிழ் பட உலகில் பிரபலமானார். நடிகை இனியாவுக்கு சுவாதி என்ற அக்கா உள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online