Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


பிசியான ஒளிப்பதிவாளராக வலம் வரும் பி.சி.ஸ்ரீராம்

Posted: 13 Jun 2014 03:37 AM PDT

இந்திய சினிமாவில் புதுபுது யுக்திகளை கடைபிடித்து ஒளிப்பதிவில் பல சாதனைகளையும் பிரம்மாண்டத்தையும் படைத்துக் கொண்டிருப்பவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். ஒளிப்பதிவாளராக மட்டுமன்றி கமல் நடித்த 'குருதிப்புனல்' படத்தின் மூலமாக சிறந்த இயக்குனர் என்பதையும் நிருபித்தவர். இயக்குனர் மணிரத்னம் படத்தில் இவர் செய்த ஒளிப்பதிவு இன்றளவிலும் வெகுவாக பேசபடுகிறது. தமிழ் மட்டுமன்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் நடிக்க தடை?

Posted: 13 Jun 2014 03:19 AM PDT

ஜெயப்பிரகாஷ் நடிக்க தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது. பசங்க படத்தில் நடித்து பிரபலமானவர் ஜெயப்பிரகாஷ். நாடோடிகள், நான் மகான் அல்ல, மங்காத்தா, எதிர்நீச்சல், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஜெயப்பிரகாஷ் மீது பட அதிபர் ஞானவேல் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

மஞ்சப்பை திருட்டு சி.டி. தயாரிப்பு: போலீஸ் கமிஷனரிடம் புகார்

Posted: 13 Jun 2014 03:08 AM PDT

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, 'மஞ்சப்பை' சினிமா டைரக்டர் ராகவன் உள்பட 10 பேர் இன்று சென்னை போலீஸ் கமினரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், 'மஞ்சப்பை' திருட்டு சி.டி. சாத்தூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரசிகர் மன்றம் துவக்கியுள்ளேன்: ஜி.வி.பிரகாஷ் அறிக்கை

Posted: 13 Jun 2014 03:01 AM PDT

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இன்று தனது பிறந்த நாளையொட்டி ரசிகர் மன்றம் தொடங்கினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– என்னுடைய ரசிகர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் என பரவி கிடக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒரு அமைப்பாக மாற்றவே இந்த நற்பணி மன்றம் துவக்கினேன்.

கையில் பச்சை குத்திய பிரபுதேவா பெயரை அழிக்கிறார் நயன்தாரா

Posted: 13 Jun 2014 02:46 AM PDT

கையில் பச்சை குத்திய பிரபுதேவா பெயரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழிக்க நயன்தாரா திட்டமிட்டுள்ளார். விரைவில் இதற்கான அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாம். பிரபு தேவாவை காதலித்த போது இந்த பச்சையை அவர் குத்தி இருந்தார். இடது கையில் 'பிரபு' என்று பச்சை குத்தி வைத்து இருந்தார். பொது நிகழ்ச்சிகளில் அந்த பெயரை மறைக்காமலேயே கலந்து கொண்டார். சில படங்களிலும் பச்சை குத்தி இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. தற்போது பிரபுதேவாவுடனான காதல் முறிந்து மீண்டும் படங்களில்

கூலிங்கிளாஸ் அணியும் ஆண்களை பிடிக்காது: அனுஷ்கா

Posted: 13 Jun 2014 02:39 AM PDT

கூலிங்கிளாஸ் அணியும் ஆண்களை பிடிக்காது என்று நடிகை அனுஷ்கா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. எனவே அவருக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர். புரோக்கர்கள் வைத்து பொருத்தமான மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். அனுஷ்கா தற்போது ரஜினி ஜோடியாக லிங்கா படத்திலும், அஜீத் ஜோடியாக ஆயிரம் தோட்டாக்கள் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில்

மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பற்றிய படம் வெற்றிச்செல்வன்

Posted: 13 Jun 2014 12:22 AM PDT

நடிகர் அஜ்மல், பாடகர் மனோ, ஷெரிப் மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் 'வெற்றிச்செல்வன்'. இப்படத்தின் நாயகியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். மேலும், அழகம் பெருமாள், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ருத்ரன். இவரே இப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். மணி சர்மா இசையமைக்கிறார். லோகநாதன், ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவை கவனிக்கின்றனர். இப்படம் குறித்து இயக்குனர் ருத்ரன் கூறும்போது, இது மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பற்றிய படம். பொதுவாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று, அவர்கள் சகஜ நிலைக்கு வந்த பிறகும் அவர்களை மருத்துவமனையில்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online