Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சூர்யா-வெங்கட்பிரபு இணையும் புதிய படம் பூச்சாண்டி?

Posted: 12 Jun 2014 12:40 AM PDT

நடிகர் சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் 'அஞ்சான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு பிறகு சூர்யா, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான பூஜை ஏற்கெனவே போடப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா அல்லது எமி ஜாக்சன் இரண்டு பேரில் ஒருவரை நடிக்க வைக்க தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

காமெடி நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம்

Posted: 12 Jun 2014 12:13 AM PDT

காமெடி நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. கொடுக்காபுளி செல்வராஜுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை 2 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். கொடுக்காபுளி செல்வராஜின் உடல் மாங்காட்டில் உள்ள பரணிபுத்தூர் வெங்கடேஷ்வரா நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நாளை காலை இறுதி சடங்கு நடக்கிறது.

நடிகை அமலாபால்-டைரக்டர் விஜய் திருமணம்: நடிகர்-நடிகைகள் வாழ்த்து

Posted: 11 Jun 2014 11:36 PM PDT

நடிகை அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் சென்னையில் இன்று திருமணம் நடந்தது. மணமக்களை நடிகர்-நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள். அமலாபால்,'மைனா' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 'தெய்வத்திருமகள்', 'வேட்டை', 'காதலில் சொதப்புவது எப்படி', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'தலைவா', 'நிமிர்ந்து நில்' உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். டைரக்டர் விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக உள்ளார். 'கிரீடம்', 'மதராசபட்டனம்', 'தெய்வத் திருமகள்', 'தாண்டவம்', 'தலைவா' படங்களை இயக்கியுள்ளார். 'தெய்வத்திருமகள்' படத்தில் அமலாபால் நடித்தபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகினர்.

நடிகர் ரஞ்சித்-நடிகை பிரியா ராமன் விவாகரத்து

Posted: 11 Jun 2014 08:05 PM PDT

'பொன் விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி' உள்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். 'பீஸ்மர்' என்ற படத்தை இவர் டைரக்டு செய்து, கதாநாயகனாக நடித்தார். இவரும், 'வள்ளி, சூரியவம்சம்' உள்பட பல படங்களில் நடித்த பிரியா ராமனும் 'நேசம் புதுசு' என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online