Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் மீண்டும் நடிக்கும் சோனாக்ஷி சின்ஹா

Posted: 11 Jun 2014 05:34 AM PDT

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் மீண்டும் நடிக்கும் சோனாக்ஷி சின்ஹா

நடிகை சமந்தாவை மணப்பதாக வதந்தி: சித்தார்த்

Posted: 11 Jun 2014 02:37 AM PDT

நடிகை சமந்தாவை மணப்பதாக வதந்தி பரவி உள்ளது என்று சித்தார்த் கூறினார். சமந்தாவும் சித்தார்த்தும் காதலிப்பதாக செய்தி பரவின. இருவரும் தெலுங்கு பட மொன்றில் ஜோடியாக நடித்த போது நெருக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இருவரும் ஜோடியாக கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டனர். பட விழாக்களுக்கும் சேர்ந்தே வந்தார்கள்.

பிரியாஆனந்த்– அனிரூத் காதல்?

Posted: 11 Jun 2014 02:35 AM PDT

பிரியாஆனந்த், அனிரூத் இடையே காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியாஆனந்த், வாமனன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 'நூற்றி என்பது', வணக்கம் சென்னை, எதிர் நீச்சல் படங்களில் நடித்துள்ளார். தற்போது வை ராஜா வை அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

மருதநாயகம் படத்தை விரைவில் எடுப்பேன்: கமலஹாசன்

Posted: 11 Jun 2014 02:35 AM PDT

கமலின் லட்சியப்படம் மருதநாயகம். அவரே இதில் கதாநாயகனாக நடித்து இயக்குவதாகவும் அறிவித்தார். தனது சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்க தயாரானார். இதன் படபூஜை 1997–ல் நடந்தது. இங்கிலாந்து ராணி எலிசபெத் இதில் கலந்து கொண்டார். உடனடியாக படப்பிடிப்பு துவக்கப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீர் பண நெருக்கடி ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து படப் பிடிப்பை நடத்த முடியவில்லை. படம் நின்று போனது. மருதநாயகம் படப்பிடிப்பை மீண்டும் துவக்க கமல் பலமுறை முயன்றும் நடக்கவில்லை. அதிக முதலீடு செய்ய தயாரிப்பாளர் கிடைத்தால் மட்டுமே படப்பிடிப்பை துவக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.

வீட்டு வேலையாட்களுக்கு அஜீத் கட்டிய 10 வீடுகள்

Posted: 11 Jun 2014 02:27 AM PDT

வீட்டு வேலையாட்களுக்கு அஜீத் வீடு கட்டி கொடுத்துள்ளார். இதன் கிரஹப்பிரவேசம் விரைவில் நடக்கிறது. அஜீத் தனது வீட்டில் வேலை பார்க்கும் சமையல் காரர், தோட்டக் காரர், டிரைவர் உள்ளிட்ட 10 பேருக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுக்க திட்டமிட்டார். இதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் ஐந்து கிரவுண்ட் நிலம் வாங்கினார். அந்த இடத்தை பணியாளர்கள் பெயரிலேயே ஆளுக்கு அரை

விஜய், அஜித், கார்த்திக் நடிக்கும் கண்டுபிடி கண்டுபிடி

Posted: 11 Jun 2014 12:27 AM PDT

மூவி பஜார் நிறுவனம் சார்பில் கல்கி யுவா தயாரிப்பில் ராம்சுப்பாராமன் இயக்கியுள்ள படம் 'கண்டுபிடி கண்டுபிடி'. இதில் விஜய், அஜித், கார்த்திக் நடித்துள்ளார்கள். என்னடா இவர்கள் எப்படி சேர்ந்து நடித்தார்கள் என்று யோசிக்கிறீர்களா? இவர்கள் புதுவரவு மாஸ்டர்கள். மாஸ்டர் விஜய், மாஸ்டர் அஜித், மாஸ்டர் கார்த்திக், மாஸ்டர் பழனி என்ற நால்வர்தான் இப்படத்தின் நாயகர்கள். படத்தை ராம்சுப்பராமன் என்பவர் இயக்குகிறார். கல்கி யுவா என்பவர் இசையமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படம் குறித்து இயக்குனர் கூறும்போது, திரைப்படங்களில் திருமணம் என்பது படத்தின் கடைசியில் சில மணித்துளிகள் வரும் காட்சியாகவே

விஷயம் வெளியே தெரியக்கூடாது படம் மூலம் ஹீரோவான செண்ட்ராயன்

Posted: 11 Jun 2014 12:02 AM PDT

'பொல்லாதவன்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான செண்ட்ராயன், தொடர்ந்து 'மூடர்கூடம்', 'ரம்மி', 'போங்கடி நீங்களும் உங்களும் காதலும்' உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக அவதாரம் எடுத்தார். தற்போது கைவசம் 10-க்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளார். அனைத்திலும் காமெடி கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார். இந்நிலையில், செண்ட்ராயன் நாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவர் நாயகனாக நடிக்கும் படத்திற்கு 'விஷயம் வெளியே தெரியக்கூடாது' என்று பெயர் வைத்துள்ளனர். இவருடன் ஆர்யன், குபேரன், நங்கன், அம்பா சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் அமிதா என்பவர் நடித்துள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online