Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஜப்பானில் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் கோச்சடையான்

Posted: 10 Jun 2014 08:22 AM PDT

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடித்து அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கி வெளிவந்துள்ள 'கோச்சடையான்' மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மோஷன் கேப்சர் எனப்படும் புதிய தொழில்நுட்பம் மூலம் தயாரான திரைப்படம் ஆகும். அமெரிக்காவில் திரையிடப்பட்ட இந்தப் படத்தைப் பார்வையிட்ட சிறப்பு ஒளிப்பதிவில் புகழ் வாய்ந்த முன்னணி ஹாலிவுட் நிறுவனம் ஒன்று இந்தப் படம் இந்தியாவில் தயாரானது என்பதை அறிந்து வியப்பைத் தெரிவித்துள்ளது. படம் பார்த்த அமெரிக்க ரசிகர்கள் எழுந்து நின்று பலத்த கைதட்டலுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆன்மீகத்துக்கு மாறிய நடிகை திவ்யா

Posted: 10 Jun 2014 05:36 AM PDT

தமிழில் 'குத்து', 'கிரி', தனுசுடன் 'பொல்லாதவன்', சூர்யாவுடன் 'வாரணம் ஆயிரம்', ஜீவாவுடன் 'சிங்கம் புலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் திவ்ய ஸ்பந்தனா. கன்னடத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். 2011-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்நாடக இளைஞர் காங்கிரசில் முக்கிய பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. 2013-ல் மாண்டியா தொகுதியில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வி

புது கெட்டப்பிற்கு மாறும் விக்ரம், மாதவன்

Posted: 10 Jun 2014 04:53 AM PDT

ஷங்கரின் 'ஐ' படத்தில் விக்ரம் நடித்து முடித்துள்ளார். அடுத்து விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஜய் மில்டன் ஏற்கனவே 'கோலி சோடா' என்ற ஹிட் படத்தை கொடுத்துள்ளார். படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம் இப்படத்திலும் புது கெட்டப்பில் வருகிறாராம். இதற்காக முடி, தாடி வளர்த்து தனது தோற்றத்தை மாற்றி உள்ளாராம்.

1500 ஆண்டு பழமையான சிவன் கோவிலில் ஆடி, பாடிய சிம்பு-நயன்தாரா

Posted: 10 Jun 2014 04:29 AM PDT

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 'இது நம்ம ஆளு' என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர் சிம்புவும், நயன்தாராவும். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக சிம்பு-நயன்தாரா ஜோடியாக இணைந்து ஆடும் பாடல் ஒன்றை 1500 ஆண்டு பழமையான சிவன் கோவிலில் வைத்து படமாக்கியுள்ளனர். இதனை, இப்படத்தின் ஒளிப்பதிவாளரான பாலசுப்ரமணியன் தனது வலைத்தளத்தில் கூறியுள்ளார். பொதுவாக சண்டைக் காட்சிகளில் பயன்படுத்தப்படும் ஹெலிகாம் காமிராக்களை கொண்டு இப்பாடலை படமாக்கியுள்ளனர்.

மும்பையில் வாங்கிய வீட்டுக்கு உள் அலங்காரம் செய்யும் சுருதிஹாசன்

Posted: 10 Jun 2014 04:08 AM PDT

சுருதிஹாசன் மும்பையில் வாடகை வீட்டில் வசித்தார். அங்கு சுருதியை ஒருவன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கினான். இதனால் அந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை என்றும், எனவே அதை காலி செய்து விடும்படியும் குடும்பத்தினர் நிர்ப்பந்தித்தனர். இதையடுத்து மும்பை மைய பகுதியில் சுருதிஹாசன் புதுவீடு வாங்கி குடியேறியுள்ளார். இது இரண்டு படுக்கையறை கொண்ட வீடு ஆகும். பாதி பணத்தை கையில் இருந்தும், மீதியை பாங்கியில் கடன் வாங்கியும் கொடுத்து வீட்டை வாங்கி இருக்கிறார்.

இனியா வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை: நகைகளும் பறிபோனது

Posted: 10 Jun 2014 03:08 AM PDT

தமிழ், மலையாள படஉலகில் இனியா முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் இவர் நடித்த 'வாகை சூடவா' படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து 'மௌனகுரு' கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒருநாள், 'மாசாணி', 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இனியாவின் வீடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது. இனியாவுக்கு கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு இல்லாததால் குடும்பத்தினருடன் வீட்டில் வசித்து வருகிறார். இவரது சகோதரிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக நகைக்கடைக்கு சென்று நகைகள் வாங்கி வீட்டில் வைத்து இருந்தனர். இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்த தியேட்டர் ஒன்றுக்கு இனியாவும்,

சிம்புவுடன் மோதல் இல்லை: சௌந்தர்யா விளக்கம்

Posted: 10 Jun 2014 03:01 AM PDT

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கிய 'கோச்சடையான்' படம் சமீபத்தில் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் குறித்து டுவிட்டரில் சிம்பு கிராபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லை என்று கருத்து வெளியிட்டு இருந்தார். இதற்கு பதிலடியாக டி.வி.யொன்றில் சௌந்தர்யா பேட்டி அளித்தபோது சிம்பு பாடுவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார். இது சிம்பு ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சௌந்தர்யாவை கண்டித்து இணையதளங்களில் கருத்துக்களை பதிவு செய்தனர். அவர்களை சிம்பு அமைதிப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் கருத்துக்கள் சொல்ல உரிமை இருக்கிறது. எனவே

ஒளிப்பதிவாளர் அசோக்குமார் தொடர்ந்து கவலைக்கிடம்

Posted: 10 Jun 2014 02:53 AM PDT

'உதிர்ப்பூக்கள்' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் அசோக் குமார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவசர பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கிறார்கள். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளது. அசோக்குமார் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.

நல்ல கதைகளில் தொடர்ந்து நடிப்பேன்: சினேகா

Posted: 10 Jun 2014 02:27 AM PDT

சினேகா, பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்த 'உன் சமையலறையில்' படம் கடந்த வாரம் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் நடித்தது குறித்து சினேகா அளித்த பேட்டி வருமாறு:– 'உன் சமையலறையில்' படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்தது. படத்தை பார்த்து நண்பர்களும் குடும்பத்தினரும் என்னை பாராட்டிய வண்ணம் உள்ளனர். எனக்கு இந்த கேரக்டரை கொடுத்த பிரகாஷ்ராஜுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. எனது கணவர் பிரசன்னா எல்லா விஷயங்களிலும் எனக்கு துணையாக இருக்கிறார். உற்சாகப்படுத்துகிறார். என் கணவரால் நான்

இரட்டையர்கள் நடிக்கும் குரு சுக்ரன்

Posted: 10 Jun 2014 12:16 AM PDT

குரு, கமல்நாத் என இரட்டையர்கள் கதாநாயகர்களாக நடிக்கும் புதிய படம் 'குரு சுக்ரன்'. இப்படத்தின் கதாநாயகியாக சாத்னா டைடஸ் நடிக்கிறார். மேலும், சிங்கமுத்து, சண்முகராஜன், 'ஆடுகளம்' நரேன், சென்றாயன், ராஜஸ்ரீ உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பி.ஆனந்த். இவர் சமீபத்தில் வெளியான 'மௌன மழை' என்ற படத்தை இயக்கியவர். இப்படத்திற்கு சந்தோஷ் சந்திரபோஸ் இசையமைக்கிறார். செல்லத்துரை என்பவர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். குரு கமலம் அசோசியேட்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக ஆர்.குமுதவள்ளி படத்தை தயாரிக்கிறார்.

கவிஞர் புலமைப்பித்தனின் பேரன் நாயகனாக நடிக்கும் புதிய படம் எவன்

Posted: 09 Jun 2014 11:35 PM PDT

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், அஜீத், விஜய், சிம்பு என நாலு தலைமுறை நடிகர்களுக்கும் பாடல் எழுதிய பெருமை பெற்றவர் கவிஞர் புலமைப்பித்தன். இவருடைய பேரன் திலீபன் புகழேந்தி தற்போது நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் நடிக்கும் அந்த புதிய படத்திற்கு 'எவன்' என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தீப்தி மானே என்பவர் நடித்துள்ளார். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கே.எம்.துரைமுருகன். இவர் தயா, கருப்பசாமி குத்தகைகாரர், கோலிசோடா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் இயக்கும் புதிய படம் இது.

நடிகை மனோரமாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை

Posted: 09 Jun 2014 08:00 PM PDT

நடிகை மனோரமாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். அவருடைய உடல்நிலையை பரிசோதனை செய்தபோது, 'பொட்டாசியம்' குறைபாடு இருப்பதையும், அதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online