Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


கமலுடன் நடித்தது என் பாக்கியம்: பார்வதி மேனன்

Posted: 01 Jun 2014 06:33 AM PDT

தமிழில் 'பூ' படம் மூலம் நாயகியாக அறிமுகமானர் பார்வதி மேனன். இப்படத்தை சசி இயக்கியிருந்தார். இப்படத்தில் பார்வதி மேனன் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. சென்ற வருடம் தனுசுடன் ஜோடியாக மரியான் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு மலையாளப் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார்.

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி

Posted: 01 Jun 2014 04:19 AM PDT

ஜெயம் ரவி தற்போது அவருடைய அண்ணன் எம்.ராஜா இயக்கும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில், 'எங்கேயும் காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்து 'ரோமியோ ஜூலியட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவ்விரு படங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

1 கோடி ரூபாய் அரங்கில் ஜெயம்ரவி-ஹன்சிகா குத்துப் பாட்டு

Posted: 01 Jun 2014 12:25 AM PDT

ஜெயம் ரவி-ஹன்சிகா மொத்வானி மீண்டும் ஜோடியாக இணைந்து நடிக்கும் புதிய படம் 'ரோமியோ ஜுலியட்'. இப்படத்தை லட்சுமண் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார். மற்றும் வி.டி.வி.கணேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்காக புரசைவாக்கம் அருகே பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். மேலும், ஒரு கோடி ரூபாய் பொருட்செலவில் அமைக்கப்பட்ட வீட்டில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் ஜெயம் ரவியும்,

களவு தொழிற்சாலை படத்துக்காக 150 கால்பந்து வீரர்கள் பங்கேற்ற பாடல்

Posted: 31 May 2014 11:47 PM PDT

சர்வதேச சிலை கடத்தலை மையப்படுத்தி உருவாகி வரும் புதிய படம் 'களவு தொழிற்சாலை'. இப்படத்தில் ஜெய்ருத்ரா (கதிர்) – வம்சி கிருஷ்ணா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகியாக மும்பையை சேர்ந்த குஷி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மு.களஞ்சியம் நடிக்கிறார். மற்றும் நட்ராஜ்பாண்டியன், செந்தில், ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ணசாமி. ஹாரிஸ் ஜெயராஜிடம் பணியாற்றிய ஷியாம் பெஞ்சமின் இசையில் இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெறும் 'ஒரு நொடியிலே உன்னை மாற்றலம்' என்று தொடங்கும் பாடல் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையும், உத்வேகத்தையும் ஏற்படுத்த வகையில் அமையும் என படக்குழுவினர்

லிங்கா படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கே.எஸ்.ரவிக்குமார்

Posted: 31 May 2014 10:51 PM PDT

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வந்து கொண்டிருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார். 'புரியாத புதிர்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, 'நாட்டாமை', 'முத்து', 'படையப்பா', 'ஆதவன்' என பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவர் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் நடிப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, விஜய், அஜீத், சிம்பு உள்பட பல ஹீரோக்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான கோச்சடையான் படத்தின் வெற்றியிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பாலிவுட்டை கலக்கவரும் லாரா தத்தா

Posted: 31 May 2014 10:24 PM PDT

கடந்த 2000-ம் ஆண்டு 'மிஸ் யுனிவர்ஸ்' அழகி பட்டம் வென்றவர் லாரா தத்தா. 2003-ம் ஆண்டு 'அந்தாஸ்' என்ற இந்திப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்த இவர், தமிழில் அர்ஜுனுக்கு ஜோடியாக 'அரசாட்சி' என்ற படத்திலும் நடித்தார். இந்நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு பிரபல டென்னிஸ் வீரரான மகேஷ் பூபதியை திருமணம் செய்துகொண்ட இவர், ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார். அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த லாரா தத்தா, தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online