Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


அரசியல் குறித்து விஜய்யின் சூசக பதில்!

Posted:

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதும் தெரிந்ததும் விஜயகாந்த் களமிறங்கினார். அவரைத் தொடர்ந்து விஜய்க்கும் அந்த ஆசை பிறந்தது. அதனால் தனது படங்களில் ரஜினி ஒரு காலகட்டத்தில் நடித்தது போன்று பஞ்ச் டயலாக் பேசி நடித்தார். அதோடு, விஜய் மக்கள் இயக்கம் என்றொரு கட்சியை தொடங்கினார். ஆனால், பின்னர் அதை மீண்டும் ரசிகர் மன்றமாக்கினார். ...

அஜீத்தை முற்றுகையிட்ட மலேசிய ரசிகர்கள்!

Posted:

எனக்கு ரசிகர் மன்றங்களே வேண்டாம் விட்டு விடுங்கள் என்று அஜீத் ஓடி ஒழிந்தாலும் அவரை ரசிகர்கள் விடுவதாக இல்லை. நாளுக்கு நாள் அவருக்கான ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதோடு, விஜய் ரசிகர்களுடன் அவ்வப்போது பலப்பரீட்சையும் நடத்துகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியாவிலும் ...

எதிர்ப்புக்கு பணிந்து சிகரெட்டை கைவிட்ட விஐபி!

Posted:

நடிகர் தனுஷ், தனது வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, நடிக்கும் படம் ''வேலையில்லா பட்டதாரி (விஐபி)''. அமாலாபால் ஹீரோயின். அனிருத் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குகிறார். இந்தப் படம் அடுத்த மாதம் (ஜூலை) வெளிவருகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பத்திரிகைகளில் விளம்பரமும் ...

'கோச்சடையான்' படக்குழுவுக்கு விருந்து கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

Posted:

ரஜினி நடிப்பில், அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த படம் கோச்சடையான். இந்தியாவிலேயே முதன்முறையாக மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. கடந்த மே 23-ம் தேதி உலகெங்கும் ரிலீஸான கோச்சடையான் படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்துள்ளன.

இந்நிலையில், கோச்சடையான் ...

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாணா' பெயர் மாற்றம் ?

Posted:

சிவகார்த்திகேயன் தற்போது தனுஷ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'டாணா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தக் காலத்தில் போலீசாரை 'டாணாகாரன்' என்று சொல்லித்தான் அழைப்பார்கள். படத்தில் சிவகார்த்திகேயன் போலீசாக நடிப்பதால் 'டாணா' என பெயர் வைத்தார்கள். ஆனால், தற்போது படத்தின் பெயரை மாற்றிவிடலாம் என ...

முத்தக்காட்சிக்கு தனி சம்பளம் வாங்கும் அலியா பட்!

Posted:

பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களெல்லாம் நடுத்தர வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் 21 வயதாகும் ஆலியா பட் வேகமாக வளர்ந்து வருகிறார். இன்றைக்கு இருக்கும் டாப் ஹீரோயின்கள் பத்து படங்களுக்கு பிறகுதான் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்தார்கள். ஆனால் ஆலியா முதல் படத்திலிருந்தே லிப் லாக் முத்தக் காட்சியில் தைரியமாக நடித்து ...

மீண்டும் டி.வி., சீரியலில் நடிக்கிறார் எஸ்.பி.பி.சரண்!

Posted:

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி சரண். இவரும் பாடகர்தான். சில படங்களிலும் நடித்துள்ளார். சென்னை 28, குங்குமபூவும் கொஞ்சும் புறாவும், ஆரண்ய காண்டம் உள்பட சில படங்களை தயாரித்தார். சினிமா வாய்ப்பில்லாத காலகட்டத்தில் சரண் ஊஞ்சல், அண்ணாமலை தொடர்களில் நடித்தார். அதன்பிறகு டி.வியில் நடிப்பதை நிறுத்திவிட்டு, தீவிர படத் ...

4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் ரேகா

Posted:

1966ம் ஆண்டு முதல் நடித்து வருகிறவர் ரேகா. நம்ம ஊர் ஜெமினி கணேசனின் மகள். எவர்கிரீன் ஹீரோயின் என்று அழைக்கப்படுகிறவர், 2010ம் ஆண்டு சைத்தான் படத்தில் நடித்ததோடு சினிமாவைவிட்டு கொஞ்சம் விலகினார். இப்போது 4 வருட இடைவெளிக்குப் பிறகு ஃபித்தூர் என்ற படத்தில் நடிக்கிறார்.

புராண கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தில் அவர் அரசியாக ...

கேரள அரசு திரைப்பட விருதுகள் விவகாரம் - பாரதிராஜா மீது குற்றச்சாட்டு

Posted:

கேரள அரசு திரைப்பட விருதுகள் அந்த மாநிலத்தில் உயர்ந்த மதிப்புக்குரிய விருதுகளாக கருதப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவுக்கு தமிழ்த் திரைப்பட இயக்குனரான பாரதிராஜா தலைவராக நியமிக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு முன் இந்தத் திரைப்பட விருதுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது பலத்த சர்ச்சையை ...

மீண்டும் சட்டை இல்லாமல் நடிக்கும் ஷாரூக்கான்…!

Posted:

இந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஷாரூக்கான் மீண்டும் சட்டை அணியாமல் தோன்றி நடிக்கப் போகிறார். நடிகைகளுக்கு மட்டும்தான் கிளாமரா நடிகர்களுக்கு இல்லையா எனக் கேள்வி கேட்பவர்களுக்கு உருவாக்கப்பட்டதுதான் ஆண் நடிகர்கள் 'சட்டை' அணியாமல் நடிப்பது. பல பெண் ரசிகைகளை இதன் மூலம் கவர முடியும் என்கிறார்கள். அதனால்தான் பெண் இயக்குனரான ...

கிரிக்கெட் வீரருடன் ஊர் சுற்றும் இலியானா!

Posted:

சினிமா நடிகர்களுடன் நடிகைகள் ஊர் சுற்றிய காலமெல்லாமல் மலையேறி விட்டது. இப்போது விளையாட்டு வீரர்களுடன் நடிகைகளை ஊர் ஊராக சுற்றிக்கொண்டு திரியும் சம்பவங்கள் தான் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வீராட் கோஹ்லியுடன் அனுஷ்கா சர்மா சமீபகாலமாக ...

ஜெயம் ரவி ஜோடியாக அஞ்சலிக்கு பதில் காஜல் அகர்வால்!

Posted:

பூலோகம், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் படங்களில் நடித்து வரும் ஜெயம்ரவி, அடுத்து சுராஜ் இயக்கத்தில், முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியை அணுகினார்கள். அவரும் ஓகே சொன்னார். ஆனால் அஞ்சலி தமிழில் நடிக்க பிரச்னை இருக்கிறது. இயக்குனர் களஞ்சியம் பிரச்னை செய்வதால் அவரை நடிக்க வைத்தால் ...

கொம்பன் படப்பிடிப்பு பரமக்குடியில் தொடங்கியது: கார்த்திக்கு வில்லன் சூப்பர் சுப்புராயன்

Posted:

கார்த்திக், லட்சுமிமேனன் நடிக்கும் கொம்பன் படத்தை குட்டிப்புலி இயக்குனர் முத்தையா இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் இன்று (ஜூன் 18) பரமக்குடியில் தொடங்கியது. காலையில் நடந்த பூஜைக்கு பிறகு முதல் காட்சி படமாக்கப்பட்டது. குட்டிப்புலி போன்றே இதுவும் வில்லேஜ் காமெடி லவ் சப்ஜெக்ட்.

இதில் கார்த்திக்கிற்கு வில்லனாக பிரபல ...

நடிகை பிரியங்காவை கன்னத்தில் அறைந்த களஞ்சியம்! மயங்கி விழுந்தார்-படப்பிடிப்பு ரத்து

Posted:

இயக்குனர் களஞ்சியம் இயக்கும் ஊற்சுற்றி புராணம், அஞ்சலி பிரச்னையால் முடங்கிப்போனதால் இப்போது அவர் நடிக்க கிளம்பி விட்டார். லாரா, கோடைமழை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கோடைமழை படத்தின் படப்பிடிப்புகள் சங்கரன் கோவில் பகுதியில் நடந்து வருகிறது. நேற்று ஒரு வீட்டில் படபிடிப்பு நடந்தது. கதைப்படி தங்கையாக நடிக்கும் ...

கங்கை அமரன் வீட்டில் ரெய்டு!

Posted:

பிரபல இசை அமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன் வீட்டில் திடீர் ரெய்டு நடந்தது. இது வருமானவரித்துறை நடத்திய ரெய்டு அல்ல. குழந்தைகள் நல அமைப்பினர் நடத்திய ரெய்டு. கங்கை அமரன் தனது வீட்டில் சிறுவர், சிறுமிகளை வேலைக்கு வைத்திருப்பதாகவும், குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழந்தைகள் நல ...

மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க வெளிநாடு செல்கிறார் குஷ்பு

Posted:

நடிகை குஷ்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திடீரென அரசியலில் குதித்தார். தி.மு.கவில் சேர்ந்த அவர் அந்தக் கட்சிக்காக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். குஷ்பு அந்தக் கட்சியில் இருப்பது கட்சியின் ஒரு சாராருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு ...

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்...! வாரஇதழ் கணிப்பு

Posted:

பிரபல தமிழ் வார இதழ் ஒன்று தமிழ் நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஓட்டெடுப்பை மக்களிடம் நடத்தியது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் தங்களது டீமை அனுப்பி மக்களை ஓட்டளிக்க வைத்தது. அதோடு தபால் மற்றும் இணையதளங்கள் வாயிலாகவும் ஓட்டெடுப்பு நடத்தியது.

இந்த ஓட்டெடுப்பில் நேரடியாக 18 லட்சத்து 13 ஆயிரத்து 298 பேரும், ...

டைரக்டர் ராஜாவின் வேல் செண்டிமென்ட்!

Posted:

மேக்னஸ் சினி பிரைம் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள படம் கார்த்திகேயன். தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தில் நிகில், ஸ்வாதி, கிஷோர், ஜெய பிரகாஷ், துளசி உள்பட பலர் நடித்துள்ளனர். சந்து இயக்கியுளள இப்படத்துக்கு சேகர் சந்திரா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னை ...

முதல் படத்திலேயே மொட்டையடித்து நடித்த ஜெமினி பேரன் அபினய்!

Posted:

ஞானராஜசேகரன் தற்போது இயக்கியுள்ள படம் ராமானுஜன். கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக்கொண்டு தயாராகியுள்ள இந்த படத்தில் ஜெமினிகணேசன்-சாவித்ரியின் மகள் வழிப்பேரன் அபினய் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவரை நடித்த முதல் நாளில் இருந்தே அவருக்கு மொட்டையடித்து விக் வைத்துதான் படம் முழுக்க படமாக்கினாராம் ...

தேர்தலில் தோற்றாலும் எனது மக்கள் சேவை தொடரும் - 'குத்து' ரம்யா

Posted:

'பொல்லாதவன்' படத்தில் நடித்த 'குத்து' ரம்யா, வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு தமிழில் பட வாய்ப்பு இல்லாததால் தனது தாய்மொழியான கன்னட படங்களில் நடித்து வந்தார். அதோடு, தனது தாத்தா வழியில் தானும் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் சூறாவளி பிரசாரம் செய்தார்.

அதையடுத்து, ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online