Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


கோர்ட்டில் நடிகர் சல்மான்கானை அடையாளம் காட்டிய 'பார் வெயிட்டர்'

Posted: 19 May 2014 04:14 AM PDT

மும்பை,

காரை ஏற்றி கொன்ற வழக்கில் நடிகர் சல்மான்கானை 12 ஆண்டுகளுக்கு பிறகு 'பார் வெயிட்டர்' ஒருவர் அடையாளம் காட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 2002-ம் வருடம் மும்பையின் பந்த்ரா பகுதியில் அமெரிக்கா எக்ஸ்பிரஸ் பேக்கரி அருகே குடிபோதையில் வேகமாக கார் ஓட்டியதில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்த ஒருவர் மீது கார் மோதி அவர் பரிதாபமாக பலியானார். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

விஷால்-சுருதிஹாசன் நடிக்கும் பூஜை படம் குடும்ப சென்டிமெண்ட்- ஆக்‌ஷன் கலந்த படம்- டைரகடர் ஹரி

Posted: 19 May 2014 12:35 AM PDT

கோவை,

பூஜை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஷால். அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறாராம்.தமிழகத்தில் உள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ் போலீஸ் அதிகாரிகளிடம் நேரில் சென்று அவர்களது அனுபவத்தை கேட்டு தெரிந்து வருகிறார் விஷால். இந்த கேரக்டருக்காக மிகவும் சிரமப்பட்டு இயல்பாக நடிக்க முயற்சி செய்வதாக கூறுகிறார்.

இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கோயமுத்தூர் பெண்ணாக நடிக்கிறார்.

கோவை 100 அடி ரோட்டில் உள்ள கங்கா, யமுனா, காவேரி தியேட்டரில்  பூஜை பட சூட்டிங் நடந்து வருகிறது.

முன்னாள் காதலன் மற்றும் 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யபட்டதாக பமீலா ஆண்டர்சன் தகவல்

Posted: 18 May 2014 11:10 PM PDT

1992-ல் வெளிவந்த 'பேவாட்ச்'  தொடர் மூலம் புகழ் பெற்றவர் பமீலா ஆண்டர்சன்  பின்னர் அவர் ஹாலிவுட்டிலும் பல படங்கள் நடித்தார். பமீலா  மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து செய்து உள்ளார். இவரது முதல் கணவர் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் மோட்லே டாமி லீ. இவர்களுக்கு பிரான்டன் (12), டைலன் (11) என இரண்டு குழநதைகள் உள்ளனர் இவரை தொடர்ந்து நடிகரும்,ராப் பாடகர் கிட் ராக் மற்றும் சமூக சேவகருமான, ரிக் சாலமனை 2007 இல் திருமனம் செய்து கொண்டார் ஆகியோர் மணந்து பின்னர் விவகாரத்து பெற்றார்.  

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online