Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


சகாபதம் படத்தில் விஜயகாந்த் மகனுக்கு ஜோடி ஸ்ரீதேவி மகள் ஜான்வி இல்லை மும்பை அழகி

Posted: 06 May 2014 05:13 AM PDT

சென்னை

கடந்த இரண்டு மாதங்களாக பாராளுமன்ற தேர்தலில் பிசியாக இருந்த நடிகர் விஜயகாந்த், தற்போது தனது மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் "சகாப்தம்" திரைப்படத்தை தொடங்குவதில் பிசியாக உள்ளார். பூஜை போடப்பட்ட தனது மகன் படத்தின் படப்பிடிப்பு குறித்த ஆலோசனையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

நான் பாண்டே என்பதால் துன்புறுத்தப்படுகிறேன், என்னுடன் இருந்தது சகோதரர்-சர்ச்சை ராணி பூனம் பாண்டே

Posted: 06 May 2014 04:15 AM PDT

மும்பை,

பிரபல இந்தி நடிகை பூனம் பாண்டே சமீபத்தில் மும்பை மிரா ரோட்டில் உள்ள பூங்கா அருகே தனது காரை நிறுத்தி பாட்டு கேட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடை ஆபாசமாக இருந்தது. இதனால் அவரை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். சிலர் நடிகையை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ரசிகர்கள் கூட்டத்தினரை அப்புறப்படுத்தினார்கள்.

நடிகர் சல்மான் கான் மீதான வழக்கு: சாட்சிகள் சல்மான் கானை அடையாளம் காட்டினர்

Posted: 06 May 2014 02:52 AM PDT

மும்பை,

கடந்த 2002 ஆம் ஆண்டு வேகமாக கார் ஓட்டிசென்று விபத்தை ஏற்படுத்திய வழக்கில் இரண்டு அரசு தரப்பு சாட்சிகள் இருவர் இன்று சல்மானை அடையாளம் காட்டினர்.

இந்தி நடிகர் சல்மான் கடந்த 2002–ம் ஆண்டு மும்பை பாந்திராவில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 64 பேரை போலீசார் சாட்சிகளாக குறிப்பிட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

நடிகை கங்கானா ரனாவத்தின் கவர்ச்சி போஸ் பெண்கள் அமைப்பு கண்டனம்

Posted: 06 May 2014 02:43 AM PDT

மும்பை

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட் பத்திரிகை ஒன்றுக்கு கவர்ச்சியான உடையுடன் மது குடிப்பது போன்றும் சிகரெட் புகைப்பது போன்றும் கொடுத்துள்ள போஸ் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது.

ரசிகர்களுக்கு நன்றி:ட்விட்டரில் இணைந்த ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

Posted: 05 May 2014 10:02 PM PDT

சென்னை,

‘வாலு’ படம் முடிவடைந்ததும் ‘இது நம்ம ஆளு’ தொடங்கும் டி.ராஜேந்தர் சொல்கிறார்

Posted: 05 May 2014 11:04 AM PDT

சிலம்பரசன் நடித்து வரும் படங்களை பற்றி டைரக்டர் டி.ராஜேந்தர் கூறியதாவது:–

''சிலம்பரசன் நடித்து வரும் 'வாலு' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெறுகிறது. படமாக்கப்பட வேண்டிய 2 பாடல் காட்சிகளில், ஒரு பாடல் காட்சி படமாக்கி முடிக்கப்பட்டு விட்டது. இன்னொரு பாடல் காட்சியையும் படமாக்கினால், அந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து விடும்.

மன்சூர் அலிகானின் ‘அதிரடி’ கழைக்கூத்தாடிகளின் வாழ்க்கையை சொல்லும் படம்

Posted: 05 May 2014 11:02 AM PDT

ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவாராய கிருஷ்ண காமராஜன், ராவணன், வாழ்க ஜனநாயகம், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு, என்னைப்பார் யோகம் வரும், லொள்ளுதாதா பராக் பராக் ஆகிய படங்களை தயாரித்த நடிகர் மன்சூர் அலிகான் தனது ராஜ் கென்னடி நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள புதிய படம், 'அதிரடி.'

படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, டைரக்ஷன் பொறுப்புகளை மன்சூர் அலிகான் கவனித்திருப்பதுடன் கதை நாயகனாகவும் நடித்து இருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:–

பிரபு சாலமன் நடித்த படம் ‘தவமின்றி கிடைத்த வரமே’ ‘பேரழகி’ என பெயர் மாறியது

Posted: 05 May 2014 11:00 AM PDT

'நம்ம அண்ணாச்சி,' 'அன்பு' ஆகிய படங்களை டைரக்டு செய்த எஸ்.ஜே.தளபதிராஜ் அடுத்து இயக்கிய புதிய படத்துக்கு, 'தவமின்றி கிடைத்த வரமே' என்று பெயர் சூட்டியிருந்தார். இந்த பெயரை அவர், 'பேரழகி' என்று மாற்றி விட்டார்.

படத்தில், திருப்புமுனையான ஒரு கதாபாத்திரத்தில் முதல்முறையாக டைரக்டர் பிரபு சாலமன் நடித்து இருக்கிறார். நகைச்சுவை கலந்த முக்கிய பாத்திரத்தில் லிவிங்ஸ்டன் நடிக்க, புதுமுகங்கள் சிவபிரதீப், சுனுலட்சுமி, அமிதா ஆகியோரும் நடித்துள்ளனர். சாணக்கியா இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

‘‘மும்பையில் இருந்து நடிகைகளை வரவழைப்பதா?’’ நடிகை சவுகார்ஜானகி வேதனை

Posted: 05 May 2014 08:00 AM PDT

சென்னை,

'தமிழ் பட உலகில், 'அம்மா–பாட்டி வேடங்களுக்கு கூட மும்பையில் இருந்து நடிகைகளை வரவழைக்கிறார்கள்'' என்று நடிகை சவுகார்ஜானகி வேதனையுடன் குறிப்பிட்டார்.

சினிமா படவிழா

கிருஷ்ணா–மோனல் கஜ்ஜார் நடித்து, ராஜமோகன் டைரக்டு செய்துள்ள 'வானவராயன் வல்லவராயன்' படத்தில் பழம்பெரும் நடிகை சவுகார்ஜானகி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழாவில் சவுகார்ஜானகி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

கதாநாயகர்களுக்கு நான் போட்டி அல்ல ‘‘மக்களை சிரிக்க வைக்க கடுமையாக உழைக்கிறேன்’’ நடிகர் சந்தானம் பேட்டி

Posted: 05 May 2014 07:49 AM PDT

சென்னை,

''கதாநாயகர்களுக்கு நான் போட்டி அல்ல. ஜனங்களை சிரிக்க வைக்க கடுமையாக உழைக்கிறேன்'' என்று நடிகர் சந்தானம் கூறினார்.

பேட்டி

நகைச்சுவை நடிகர் சந்தானம், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதொடர்பாக சந்தானம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சந்தானம் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– கதாநாயகனாக ஒரு கதாநாயகியுடன் டூயட் பாடி நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online