Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


நந்தா–அனன்யா வாழ்க்கையில் நுழைந்த விருந்தாளி

Posted: 29 May 2014 11:41 AM PDT

நந்தா–அனன்யா ஜோடியாக நடித்துள்ள படம், 'அதிதி.' இந்த படத்தின் திரைக்கதை–வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பவர், பரதன். இவர், விஜய் நடித்த 'அழகிய தமிழ்மகன்' படத்தை இயக்கியதுடன் கில்லி, தூள், மதுர, ஒஸ்தி, தில், வீரம் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியவர். 'அதிதி' படத்தை பற்றி இவர் கூறிய
தாவது:–

நடிகர் ஜெயப்பிரகாஷ் மகன்களுடன் ‘ஐவராட்டம்’

Posted: 29 May 2014 11:40 AM PDT

சுபசெந்தில் பிக்சர்ஸ் என்னும் பட நிறுவனம், 'ஐவராட்டம்' என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் ஜெயப்பிரகாசின் மகன்கள் நிரஞ்சன் ஜெயப்பிரகாஷ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடங்களில் அம்ருத் கலாம், ஜெயப்பிரகாஷ், சி.கே.செந்தில்குமார், நித்யா ஷெட்டி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இளையராஜா இசையில் ‘போர்க்களத்தில் ஒரு பூ’

Posted: 29 May 2014 11:38 AM PDT

இளையராஜாவின் இசையில், 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற படம் தயாராகி இருக்கிறது. இது, இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் கதை. இசைப்பிரியாவாக புதுமுகம் பிரியா நடித்துள்ளார். கதைநாயகனாக பாலாஜி நடித்து இருக்கிறார். பல கன்னட படங்களை இயக்கியுள்ள கு.கணேசன் இந்த படத்தின் கதை–திரைக்கதை–வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார். படத்தை பற்றி இவர் சொல்கிறார்:–

''இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் குழந்தைப்பருவம் முதல் இளமைப்பருவம், குடும்ப வாழ்க்கை மற்றும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வரை கதையாக்கப்பட்டு இருக்கிறது.

பிரசாந்துடன் இணைந்து இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி நடனம்

Posted: 29 May 2014 05:36 AM PDT

பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்களை அடுத்து பிரஷாந்த், 'சாஹசம்' என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் நடந்தது.

இதில், வேலை தேடும் இளைஞராக பிரஷாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க சில முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரஷாந்தின் அம்மாவாக துளசியும், அப்பாவாக நாசரும், தங்கையாக லீமாவும் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், சோனுசூது, கோட்டா சீனிவாசராவ், தேவதர்ஷினி ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

நடிகை மஞ்சு வாரியாரை புகழ்ந்து தள்ளிய கேரள சபாநாயகர்

Posted: 29 May 2014 12:30 AM PDT

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் அருகே விதுராவில் நடந்த ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியில் நடிகை மஞ்சு வாரியர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கேரள சட்டசபை சபாநாயகர் கார்த்தி கேயனும் கலந்து கொண் டார்.அவர் பேசும் போது நடிகை மஞ்சு வாரியரை புகழ்ந்து தள்ளி னார்.மஞ்சுவாரியர் சிறந்த நடிகை. அவர் கேரளாவுக்கு கடவுள் கொடுத்த பரிசு. சில சூழ்நிலை காரணமாக அவர் 14 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது துரதிருஷ்டமானது. அவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து உள்ளது. கேரள மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். என்று  பேசினார்.

பாதுகாவலரை தகாத வார்த்தையில் திட்டியதால பிரபல பாலிவுட் நடிகருக்கு அடி உதை

Posted: 29 May 2014 12:03 AM PDT

மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் பாபிதியோல் மும்பையில் நடந்த பார்ட்டி ஒன்றில் பாதுகாவலர்களிடம் அடிவாங்கிய சம்பவம் பாலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகனும் நடிகருமான பாபிதியோல்,  மும்பையில் உள்ள இரவு பார்ட்டியில் கலந்து கொண்டார். மிக அதிக அளவில் மது அருந்தியதால் போதையில் தள்ளாடிய பாபிதியோல், மீண்டும் மது குடிக்க விரும்பினார். ஆனால் அவரால் மதுவை கிளாஸில் ஊற்ற முடியவில்லை.

டெல்லி விமான நிலையத்தில் சக பயணி நடிகர் பிரகாஷ்ராஜுடன் மோதல்

Posted: 28 May 2014 11:17 PM PDT

ஹைதராபாத்

நடிகர்   பிரகாஷ் ராஜுக்கும் விமான பயணிக் கும் டெல்லி விமான நிலை யத்தில்   திடீர் மோதல் ஏற்பட்டது.  இருவரும் சட்டையை பிடித்து இழுத்து சண்டை போட்டனர்.

சினிமா படபிடிப்புக்காக டெல்லி சென்ற நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை திரும்புவதற்காக  டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு ஏர் இந்தியா கவுண்டரில் பயணிகள் கியூவில் நின்று கொண்டு இருந்தார்கள். பிரகாஷ்ராஜும் அவர்களுடன் நின்றார்.

கோச்சடையான் படம் குறித்து ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா அஸ்வின் சிறப்பு பேட்டி

Posted: 28 May 2014 10:38 PM PDT

 

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை தீபிகா படுகொனே நடிப்பில் கோச்சடையான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்நிலையில், படத்தை இயக்கியுள்ள இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் படம் குறித்து அளித்துள்ள பேட்டி வருமாறு:-

உங்களது தந்தை சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து முதல் முறையாக படம் இயக்கியுள்ளீர்கள்.  இது கனவு நனவான நிகழ்வு போன்றதா?

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online