Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


சினிமாவின் மறுபக்கம் : 71. ‘‘பத்மினி தேன்! – சரோஜாதேவி பால்!’’

Posted: 23 May 2014 02:16 PM PDT

1971 ஏப்ரல் 14 அன்று தமிழ்ப்புத்தாண்டு நாள்! காலையில் தொலைபேசி மணி ஒலித்தது. எடுத்தேன்.

குரல்:– தம்பி! கஸ்தூரி பிலிம்ஸ் சுப்பராமன் பேசுகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நான்:– அண்ணே! உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

சுப்பராமன்:– இன்னிக்கு புது வருஷமும் அதுவுமா உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். பத்து மணியைப்போல நம்ம ஆபீசுக்கு வரமுடியுமா?

நான்:– கண்டிப்பாக வர்றேண்ணே.

பாந்திரா குடும்ப நலக்கோர்ட்டில் இந்தி நடிகை கரீஷ்மா கபூர் விவாகரத்து கோரி வழக்கு

Posted: 23 May 2014 10:19 AM PDT

மும்பை,

இந்தி நடிகை கரீஷ்மா கபூரும், அவரது கணவரும் பரஸ்பர விவாகரத்து கோரி பாந்திரா குடும்ப நலக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

நடிகை கரீஷ்மா கபூர்

இந்தி நடிகை கரீஷ்மா கபூர் கடந்த 2003–ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 2010–ம் ஆண்டு கரீஷ்மா கபூர் குழந்தைகளை அழைத்து கொண்டு மும்பை திரும்பி தனது தாயுடன் வசித்து வருகிறார். தம்பதியர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

பதவி ஏற்பு விழா: அமிதாப், ரஜினிக்கு மோடி அழைப்பு

Posted: 23 May 2014 06:15 AM PDT

புதுடெல்லி,

டெல்லியில் (திங்கட்கிழமை), ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் நடக்கிற கோலாகல விழாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கிறார்.
இந்த விழாவுக்கு இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 3 ஆயிரம் பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online