Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


பொருத்தமான ஜோடி யார்? என்பதை சொன்னால் மற்ற கதாநாயகிகள் என்னுடன் நடிக்க தயங்குவார்கள் நடிகர் ஜீவா பேட்டி

Posted: 15 May 2014 02:01 PM PDT

சென்னை,

''எனக்கு பொருத்தமான கதாநாயகி யார்? என்பதை சொன்னால், மற்ற கதாநாயகிகள் என்னுடன் நடிக்க தயங்குவார்கள்'' என்று நடிகர் ஜீவா கூறினார்.

பேட்டி

ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார், ஜெயராமன் ஆகிய இருவரும் தயாரித்து, ரவி கே.சந்திரன் டைரக்டு செய்துள்ள படம், 'யான்.' இதில் ஜீவா கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக துளசி (நடிகை ராதாவின் இளைய மகள்) நடித்துள்ளார்.

‘49–ஓ’ படத்தில் கவுண்டமணி 2 பாட்டுக்கு நடனம் ஆடியிருக்கிறார்

Posted: 15 May 2014 03:26 AM PDT

கவுண்டமணி கதைநாயகனாக நடித்து வந்த '49–ஓ' படத்தின் படப்பிடிப்பு மற்றும் பட வேலைகள் அனைத்தும் முடிவடைந்தன. இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கும்     இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் பி.ஆரோக்கிய தாஸ் கூறியதாவது:–

''தேர்தலுக்கு பிறகு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நகைச்சுவையாக சொல்லும் படம் இது. கவுண்டமணியின் வழக்கமான கேலி–கிண்டல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. 2 பாடல்களுக்கு அவர் நடனம் ஆடியிருக்கிறார்.

நகைச்சுவையுடன் கூடிய திகில் படம் சுந்தர் சி.யின், ‘அரண்மனை’

Posted: 15 May 2014 03:24 AM PDT

சுந்தர் சி. கதை நாயகனாக நடித்து, டைரக்டு செய்துள்ள புதிய படம், 'அரண்மனை.' இது, நகைச்சுவையுடன் கூடிய திகில் படம். படத்தை பற்றி சுந்தர் சி. கூறியதாவது:–

மகேந்திரன் நடித்த ‘என்றுமே ஆனந்தம்’

Posted: 15 May 2014 03:22 AM PDT

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், 'என்றுமே ஆனந்தம்.'

இந்த படத்தில் மகேந்திரன் ஜோடியாக சுவேதா நடித்துள்ளார். இவர், மீராவுடன் கிருஷ்ணா, இதயம் திரையரங்கம் ஆகிய படங்களில் நடித்தவர்.  இவர் களுடன் ராம்ஜி, பாலு ஆனந்த், சார்லி, பாரதி கண்ணன், ராஜேஷ், யுவராணி, பாக்யா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். குங்பூ மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக அறிமுகம் ஆகிறார்.

மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக அதர்வா!

Posted: 15 May 2014 03:20 AM PDT

ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கும் 'இரும்பு குதிரை' படத்தில், அதர்வா மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

இது, உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 'பைக் ரேஸ்' பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள காதல் கதை. படம் பார்ப்பவர்களை இருக்கை நுனிக்கு கொண்டு வரும் படு பயங்கரமான 'பைக் ரேஸ்' படத்தில் இடம்பெற்றுள்ளது. யுவராஜ் போஸ் டைரக்டு செய்கிறார்!

2014 உலக கோப்பை கால்பந்து விளையாட்டு போட்டிகள் விளம்பர பிரசாரத்தில் நடிகர் ஜான் ஆபிரகாம்

Posted: 14 May 2014 11:12 PM PDT

மும்பை,

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் மிக்கவர்.  இந்தியாவில் நடைபெற உள்ள 2014 உலக கோப்பை கால்பந்து விளையாட்டு போட்டிகளை விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சேனலான சோனி சிக்ஸ் ஒளிபரப்புகிறது.

டைட்டானிக் பட நாயகன் டிகேப்ரியோ யானைகள் பாதுகாப்பிற்கு ரூ.5.95 கோடி நிதி உதவி

Posted: 14 May 2014 10:43 PM PDT

லாஸ் ஏஞ்சல்ஸ்,

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டைட்டானிக் படத்தின் வழியே புகழ் பெற்ற நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோ.  இவர், யானைகளை பாதுகாப்பதற்காக 10 லட்சம் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக அளித்துள்ளார்.

லியோனார்டோ டிகேப்ரியோ நல அமைப்பு சார்பில் நடிகர் மார்க் வால்பெர்க் மற்றும் வைல்ட்லைப் கன்சர்வேசன் நெட்வொர்க் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், டிகேப்ரியோ நிதி உதவியை அளித்தார்.  இந்த நிகழ்ச்சியில், திரை பிரபலங்களான பியர்ஸ் பிராஸ்னென், சிண்டி கிராபோர்டு, ரோரி கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online