Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தெலுங்கில் ரீமேக் ஆகும் நேரம்

Posted: 08 May 2014 08:24 AM PDT

நஸ்ரியா, நிவின் பாலி ஜோடியாக நடித்து தமிழில் வந்த படம் நேரம். நகைச்சுவை மற்றும் பரபரப்பு பாணியில் அல்போன்சு புதரன் இப்படத்தை இயக்கியிருந்தார். ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருந்தார். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவை செய்திருந்தார். இப்படத்துக்கு பிறகுதான் நஸ்ரியாவுக்கு படங்கள் குவிந்தது. 2013-ல் வெளிவந்த

நடிகை அனுராதா மகன் நாயகனாக நடிக்கும் என்ன பிடிச்சிருக்கா

Posted: 08 May 2014 07:03 AM PDT

பிரைட் பியூச்சர் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.ஏ. பிரகாசம் தயாரிக்கும் படம் என்ன பிடிச்சிருக்கா. இதில் நாயகனாக நடிகை அனுராதாவின் மகன் கெவின் அறிமுகமாகிறார். நாயகியாக பிரீத்தி விஜ் அறிமுகமாகிறார். ரவிமரியா, ஜெரால்டு, சின்ராசு, டயானா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், ஸ்ரீதேவி, அணில் ஆகியோரும் நடிக்கின்றனர். நாயகி தாத்தவாக தயாரிப்பாளர் பி.ஏ.பிரகாசம் நடிக்கிறார்.

மகேந்திரன்-இளையராஜா இணையும் படத்தை தயாரிக்கிறார் பிரகாஷ்ராஜ்

Posted: 08 May 2014 06:39 AM PDT

'முள்ளும் மலரும்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகேந்திரன். தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'மெட்டி' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் கடைசியாக 2006-ஆம் ஆண்டு 'சாசனம்' என்ற படத்தை எடுத்தார். அதையடுத்து சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் மகேந்திரனை நேரில் சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ், இந்த சந்திப்புக்கு

சரத்குமார் இருவேடங்களில் நடிக்கும் சண்ட மாருதம்

Posted: 08 May 2014 06:20 AM PDT

சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும் புதிய படத்துக்கு சண்ட மாருதம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த நிறுவனம் சென்னையில் ஒரு நாள், புலிவால் படங்களை எடுத்து உள்ளது. சண்ட மாருதம் படத்தில் டைரக்டர் சமுத்திரக்கனியும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.

சந்தானம் படத்தை வாங்கிய ஸ்டூடியோ கிரீன்

Posted: 08 May 2014 04:32 AM PDT

சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. சந்தானத்தின் நண்பரான ஸ்ரீநாத் இயக்கியுள்ளார். அஸ்னா சவேரி என்ற புதுமுகம் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். பி.வி.பி. நிறுவனமும், சந்தானத்தின் சொந்த நிறுவனமான ஹோம் மேட் பிலிம்சும் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. 'கோச்சடையான்'

அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கும் சுந்தர்.சி

Posted: 08 May 2014 03:41 AM PDT

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'சத்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், கௌதம் மேனன் படத்திற்கு பிறகு அஜீத், இயக்குனர் சுந்தர்.சி இயக்கும்

விஷாலுடன் ஆட்டம் போடும் ஆண்ட்ரியா

Posted: 08 May 2014 02:16 AM PDT

விஷால் நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு தற்போது பூஜை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹரி இயக்குகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தில் தற்போது ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளார். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து ஒரு பாட்டுக்கு நடனமாடவிருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஆடும் அந்த பாடல் காட்சியை

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online