Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


டுவிட்டரில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி

Posted: 05 May 2014 05:34 AM PDT

சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்லாது உலக அரசியல் தலைவர்களும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இணைந்து, தங்களை பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த சமூக வலைத்தளம் மூலம் தாங்கள் நடிக்கும் படங்கள், தாங்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். ரசிகர்களும் தங்களது அபிமானவர்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள டுவிட்டர் தளத்தையே பெரிதும் பின்பற்றி வருகிறார்கள். இந்நிலையில், தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், தற்போது டுவிட்டர் தளத்தில் இணைந்துள்ளார். @SuperStarRajini என்ற பெயரில் அவர் டுவிட்டர் கணக்குத் தொடங்கியுள்ளார். முதன்முதலாக டுவிட்டரில் இணைந்தது குறித்து ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இன்று பிறந்த நாள்: 1950–ல் கலக்கிய கனவு கன்னி டி.ஆர்.ராஜகுமாரி

Posted: 05 May 2014 03:16 AM PDT

தமிழ் திரையுலகில் 1940 மற்றும் 50 களில் முன்னணி கதாநாயகியாக கலக்கிய டி.ஆர்.ராஜகுமாரிக்கு இன்று பிறந்த நாள். அப்போதைய இளைஞர்களுக்கு இவர்தான் கனவுகன்னி. சுண்டி இழுக்கும் பார்வையாலும், போதை ஏற்றும் குரலாலும் தமிழக வாலிப பட்டாளங்களையெல்லாம் கட்டி போட்டு இருந்தார். திரையுலகின் முதல் கவர்ச்சி நடிகையும் இவர்தான். 1939–ல் குமாரகுலோத்துன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தியாகராஜ

தமிழ்நாடு முழுவதும் கோச்சடையான் படம் 420 தியேட்டரில் ரிலீஸ்

Posted: 05 May 2014 03:10 AM PDT

ரஜினியின் கோச்சடையான் படம் வருகிற 9–ந்தேதி ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் 420 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுகிறது. மேலும் தியேட்டர்கள் ஒதுக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் பேச்சு நடந்து வருகிறது. எனவே இந்த எண்ணிக்கை அடுத்த ஓரிரு நாட்களில் மேலும் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 39 தியேட்டர்களில்

லிங்கா படத்தில் ரஜினிகாந்துடன் நடிப்பது பெருமை: சோனாக்சி சின்ஹா

Posted: 05 May 2014 03:03 AM PDT

'லிங்கா' படத்தில் ரஜினியுடன் நடிப்பது பெருமையாக உள்ளது என்று சோனாக்சி சின்ஹா கூறினார். இவர் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். 'லிங்கா' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரஜினி, சோனாக்சி சின்ஹா நடிக்கும் காட்சிகளை மைசூர் அருகே படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படமாக்கி வருகிறார். ரஜினியுடன் நடிப்பது குறித்து சோனாக்சி சின்ஹா அளித்த பேட்டி

தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பேன்: சந்தானம்

Posted: 05 May 2014 02:56 AM PDT

காமெடி நடிகர் சந்தானம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இப்படத்தை ஸ்ரீநாத் இயக்கியுள்ளார். பி.வி.பி. சினிமா தயாரித்துள்ளது. கதாநாயகனானது குறித்து சந்தானம் அளித்த பேட்டி வருமாறு:– இதுவரை மற்ற ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடம் செய்தேன். அறை எண் 305ல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்களில் பிரதான கேரக்டரில் வந்தேன். இப்போது முதல் தடவையாக 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் கதாநாயகனாகியுள்ளேன். இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் உள்ளிட்ட அனைவரும் என்னை ஹீரோ தோற்றத்துக்கு கொண்டு வர மிகவும் கஷ்டப்பட்டனர். படம் நன்றாக வந்துள்ளது. இம்மாதம் ரிலீஸ் செய்ய

நடிகை திரிஷா பிறந்த நாள்: கேக் வெட்டி கொண்டாடினார்

Posted: 05 May 2014 12:51 AM PDT

நடிகை திரிஷா தனது பிறந்த நாளை 'கேக்' வெட்டி கொண்டாடினார். வெளியூர் படப்பிடிப்பில் இருந்த அவர் பிறந்த நாள் கொண்டாடுவதற்காகவே சென்னை வந்தார். அடையாறில் உள்ள வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து 'கேக்' வெட்டினார். அவர்கள் திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். திரிஷாவுக்கு கடைசியாக என்றென்றும் புன்னகை படம் ரிலீசானது. ஜீவா ஜோடியாக நடித்து இருந்தார். இதில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online