Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நட்சத்திரங்கள்

Posted: 26 May 2014 08:05 AM PDT

நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள், தேசிய தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான், தர்மேந்திரா, அனுபம் கெர் மற்றும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த ஹேமமாலினி, சத்ருகன் சின்கா, கிரன் கெர், விவேக் ஓபராய், ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

சண்டை காட்சியில் தசை பிடிப்பு: அனுஷ்காவுக்கு தைலம் தேய்த்து சிகிச்சை

Posted: 26 May 2014 04:23 AM PDT

'ருத்ரமாதேவி', 'பாகுபலி' என இரு சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் அனுஷ்கா நடித்து வருகிறார். 'ருத்ரமாதேவி'யில் ராணி வேடம் ஏற்கிறார். இப்படத்தில் அனுஷ்காவுக்கு வாள் சண்டை போடும் காட்சிகளும் குதிரை சவாரி செய்யும் காட்சிகளும் உள்ளன. இதற்காக அவர் ஸ்டண்ட் நடிகர்கள் வைத்து வாள் சண்டை மற்றும் குதிரையேற்றம் பயிற்சிகள் பெற்றார். இதைடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. அனுஷ்கா வாள் சண்டை போட்டு கஷ்டப்பட்டு நடித்தார். இதில் அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. உடல் வலியால் அவதிப்பட்டார். இதனால்

கோச்சடையானை பாராட்டிய கமல்

Posted: 26 May 2014 04:23 AM PDT

ரஜினி நடித்த 'கோச்சடையான்' படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இது மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் இந்திய படம் என்பதால் இப்படத்தை பார்க்க நடிகர் – நடிகைகள் ஆரவமாக இருக்கிறார்கள். கமலஹாசன் 'உத்தம வில்லன்' படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருந்தார். தற்போது சென்னை திரும்பியுள்ள அவருக்கு கோச்சடையான் படம் பிரத்யோகமாக திரையிட்டு காட்டப்பட்டது. ராயப்பேட்டையில் உள்ள ரியல் இமேஜ் பிரிவியூ தியேட்டரில் இப்படம் திரையிடப்பட்டது. கமலஹாசன் படத்தை பார்த்தார். அவருடன் நடிகர்கள் ரமேஷ் அரவிந்த், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் ஊர்வசி, கவுதமி, பூஜாகுமார், லிசி பிரியதர்ஷன் போன்றோரும் படம் பார்த்தனர்.

மணிரத்னம் படத்தில் நடிக்கிறேன்: ஐஸ்வர்யாராய்

Posted: 26 May 2014 04:23 AM PDT

மணிரத்னம் படத்தில் நடிக்கப் போவதாக ஐஸ்வர்யாராய் அறிவித்து உள்ளார். ஐஸ்வர்யாராய்க்கு 2011–ல் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர் சினிமாவில் நடிக்க வில்லை. குழந்தையை வளர்ப்பதிலேயே முழு நேரத்தையும் செலவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காகவே கேன்ஸ் பட விழாவில் பங்கேற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்தார்.

வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தின் குழந்தையை குஷிபடுத்திய விஜய்

Posted: 26 May 2014 01:36 AM PDT

கடந்த ஏப்ரல் 25-ந் தேதி காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு இந்து என்ற மனைவியும், அர்ஷயா என்ற பெண் குழந்தையும் உள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்கூற நடிகர் விஜய் பலமுறை முயற்சி செய்தார். ஆனால், இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் பிற காரணங்களால் அவரால் முடியாமல் போனது.

காதல் மலர்ந்தது எப்படி?: விஜய், அமலாபால் பேட்டி

Posted: 26 May 2014 12:29 AM PDT

நடிகை அமலாபாலுக்கும், டைரக்டர் விஜய்க்கும் வருகிற ஜூன் 12–ந் தேதி திருமணம் நடக்கிறது. இது காதல் திருமணம் ஆகும். விஜய் இயக்கிய 'தெய்வதிருமகள்', 'தலைவா' ஆகிய படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது, இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்ததால் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. சாந்தோம் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளது. திருமணம் குறித்து விஜய், அமலாபால் இருவரும் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, விஜய் கூறும்போது, ''அமலாபாலும் நானும் முதலில்

நடிகர் அம்பரீஷ் மீது நடிகை ரம்யா புகார்

Posted: 26 May 2014 12:16 AM PDT

தமிழில் 'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்', 'சிங்கம்புலி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா. கர்நாடகாவை சேர்ந்தவர். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாண்டியா தொகுதியில் ரம்யா போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் புட்டராஜுவிடம் தோல்வி அடைந்தார்.

ராஜபக்சேவை அழைத்தது தமிழ் உணர்வை இழிவுபடுத்தும் செயல்: சத்யராஜ்

Posted: 26 May 2014 12:00 AM PDT

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வேடர் காலனியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்குள்ள குழந்தைகள் கல்வி பயில்வதற்காக ஆலத்தி வச்சினம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. முகாமை சேர்ந்த 150–க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு இலவச காலணி வழங்கும் விழா நடைபெற்றது. நடிகர் சத்யராஜ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலவச காலணிகளை வழங்கினார்.

இந்தி படப்பிடிப்பில் பிபாசா பாசு, தமன்னா மோதல்

Posted: 25 May 2014 11:36 PM PDT

தமன்னா, பிபாசாபாசு இடையே இந்தி படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் 'ஹம்சகல்' என்ற இந்தி படத்தில் நடிக்கின்றனர். சயீப் அலிகான், ரிதேஷ் தேஷ்முக் நாயகர்களாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் தமன்னா எல்லோரிடமும் சகஜமாக பழகினார். சிரித்து பேசினார். இது படக்குழுவினரை கவர்ந்தது. தமன்னாவுக்கு அவர்கள் மரியாதை கொடுத்தனர். அவருக்கு தேவையான உதவிகளையும் செய்தார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online