Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


நரேந்திர மோடியை பாராட்டி லாரன்ஸ் இசை ஆல்பம்

Posted: 19 May 2014 10:56 AM PDT

நரேந்திர மோடியை பாராட்டி இசை வீடியோ ஆல்பம் உருவாக்குகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் கடந்த வருடம் ரஜினி பிறந்த நாளையொட்டி வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட்டார். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது

சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த படம் பூஜை: டைரக்டர் ஹரி பேட்டி

Posted: 19 May 2014 04:55 AM PDT

கோவை 100 அடி ரோட்டில் உள்ள கங்கா, யமுனா, காவேரி தியேட்டரில் டைரக்டர் ஹரி இயக்கும் பூஜை பட சூட்டிங் நடந்து வருகிறது. சூட்டிங்கில் நடிகர் சத்தியராஜ் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தியேட்டரில் இருந்து வெளியே வருவது போலவும், சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யாவை வில்லன்கள் தாக்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் நடிகர் சத்தியராஜ் போலீஸ் வேடத்தில் தோன்றினார்.

ஹாரிஸை கழட்டிவிட்ட உதயநிதி

Posted: 19 May 2014 03:24 AM PDT

உதயநிதி கதாநாயகனாக நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்கள் அவருக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தன. இந்நிலையில் தற்போது 'நண்பேன்டா' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த இந்த மூன்று படங்களையும் இவரே தயாரித்தார். மேலும் இந்த மூன்று படங்களிலும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், உதயநிதி 'என்றென்றும் புன்னகை' படத்தை இயக்கிய ஏ.எச்.அஹமது இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு கல்தா கொடுத்துவிட்டு அனிருத்தை

அமராகாவியம் படம் பார்த்து அழுத ஆர்யா!

Posted: 19 May 2014 02:57 AM PDT

நடிகர் ஆர்யா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் 'அமரகாவியம்'. இப்படத்தில் அவருடைய தம்பி சத்யா கதாநாயகனாகவும், மியா ஜார்ஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். 'நான்' படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். இப்படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை ஆர்யா மற்றும் அவரது நண்பர்களுக்காக பிரத்யேகமாக திரையிட்டுள்ளனர். படம் பார்த்து முடிந்தவுடன் கண்களில் கண்ணீர் துளிகளுடன் யாருடனும் பேசமால் திரையரங்கை விட்டு வெளியேறிய ஆர்யா, நேராக அவர் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். தனது உதவியாளரை அழைத்து 143 கேக் வாங்கி வரச்சொல்லி தனது படக்குழுவினருக்கு கொடுத்து மகிழ்ந்துள்ளார். இதுகுறித்து ஆர்யா கூறும்போது,

திருமணத்திற்காக அமலாபால் புடவை, நகைகள் வாங்கினார்

Posted: 19 May 2014 02:16 AM PDT

அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் வருகிற 12–ந்தேதி சென்னை சாந்தோமில் உள்ள ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. முன்னதாக 7–ந்தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதம், எனவே இரண்டு மத முறைப்படியும் திருமண சடங்குகளை நடத்த உள்ளனர். நிச்சயதார்த்தத்தை கிறிஸ்தவ முறையில் நடத்துகிறார்கள். இது குறித்து அமலாபால் தாய் கூறும்போது, கிறிஸ்தவ பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தத்தில் அமலாபால் வெள்ளை நிற கவுன் அணிவார். இந்த கவுனை டிசைனர் அனிதா தயார் செய்துள்ளார். அத்துடன் வைர நெக்லசும் அணிந்து கொள்வார் என்றார். திருமணம் இந்து பாரம்பரிய முறையில் நடக்கிறது. இதில் அமலாபால் சிவப்பு நிற காஞ்சீபுரம் பட்டுபுடவை அணிந்து கொள்கிறார். திருமணத்துக்கான ஆடைகள் நகைகள் வாங்கும் பணியில் அமலாபால் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். நிச்சயதார்த்தம், திருமணம் மற்றும் திருமண வரவேற்புக்கு என தனித்தனி நகை மற்றும் ஆடைகள் வாங்குகிறார்.

இசைப்பிரியா வாழ்க்கை திரைப்படமாகிறது

Posted: 19 May 2014 02:01 AM PDT

இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய டெலிவிஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இசைப்பிரியா. ஈழத்தமிழர் விடுதலைக்கான எழுச்சி பாடல்களையும் பாடிவந்தார். இசைப்பிரியாவை இறுதிக் கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக படுகொலை செய்தனர். அவரது வாழ்க்கை கதை 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற பெயரில் படமாகிறது. இதில் இசைப்பிரியா வேடத்தில் பிரியா நடிக்கிறார். நாயகனாக பாலாஜி நடிக்கிறார். பிரபாகரன், சுமந்தனி, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி கு.கணேசன் இயக்குகிறார்.

டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் உருவாகும் பர்மா

Posted: 19 May 2014 01:29 AM PDT

ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்ஷன் வெம்புட்டி தயாரிக்கும் புதியபடம் 'பர்மா'. இதில் நாயகனாக மைக்கேல், நாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்கிறார்கள். மேலும் 'சரோஜா' சம்பத் மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை தரணிதரன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் சுசிகணேசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். யுவா ஒளிப்பதிவை கவனிக்கிறார். சுதர்சன் எம்.குமார் இசையமைக்கிறார். பர்மா திரைப்படம் கிரைம் மற்றும் திரில்லர் வகையில் டெக்னிக்கல்லாக மிரட்டும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. நடிகை ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். மேலும், காதலன் படத்தில் 'பேட்டா ரப்' என்ற பாடலை பாடிய சுரேஷ் பீட்டர்ஸ் நீண்ட

முழுக்க முழுக்க கிராமிய கலைஞர்கள் நடிக்கும் திருடு போகாத மனசு

Posted: 19 May 2014 12:09 AM PDT

அஜந்தா கலைக்கூடம் என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'திருடு போகாத மனசு'. ஒரு கிராமிய கலைஞன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வருகிறான். பிறகு அதில் எழும் பிரச்சினைகளையும் சந்திக்கிறான். இதோடு சொந்த பிரச்சினையும் சேர்ந்து விடுகிறது. இதிலிருந்து விடுபட்டு சினிமாவில் வெற்றி பெற்றானா? என்பதே படத்தின் கதை. இப்படத்தில் முழுக்க முழுக்க கிராமியக் கலைஞர்களான செந்தில் கணேஷ், சாய் ஐஸ்வர்யா ஆகியோர் கதாநாயகன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் சத்யா, ராஜேஷ், ராஜலட்சுமி, கனகாமணி, ஆறுமுகம், தேன்மொழி போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online