Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சிம்புவை மீண்டும் காதலிக்கவில்லை: நயன்தாரா பேட்டி

Posted: 12 May 2014 05:49 AM PDT

நடிகை திரிஷா சமீபத்தில் அளித்த பிறந்த நாள் விருந்தில் சிம்புவும், நயன்தாராவும் பங்கேற்றனர். இருவரும் அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசியபடி விருந்து சாப்பிட்டதாக கூறப்பட்டது. பின்னர் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்த படங்கள் இன்டர் நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஏற்கனவே வல்லவன் படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்டனர். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் வரை வந்தார்கள். ஆனால் நடக்கவில்லை. இந்த காதலும் முறிந்தது. இதுபோல் சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. அதுவும் சில மாதங்களிலேயே முறிந்து போனது.

கன்னடர்கள் எதிர்ப்பு எதிரொலி: ரஜினி படப்பிடிப்பு ஐதராபாத்துக்கு மாற்றம்

Posted: 12 May 2014 04:32 AM PDT

கன்னடர்கள் எதிர்ப்பால் ரஜினி நடிக்கும் 'லிங்கா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை ஐதராபாத் துக்கு மாற்றப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 'கோச்சடையான்' படத்தை தொடர்ந்து 'லிங்கா' படத்தில் ரஜினி நடிக்கிறார். நாயகியாக சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2–ந்தேதி மைசூரில் துவங்கியது. ரஜினி, சோனாக்சி சின்ஹா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. ரஜினிக்கு மைசூர் ராசியான இடம் ஆகும். ஏற்கனவே அங்கு படமாக்கப்பட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி உள்ளன. எனவே மைசூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் மைசூர் அரண்மனையிலும் பெரும் பகுதி காட்சிகளை படமாகக் திட்டமிட்டு இருந்தனர்.

கோச்சடையானுடன் போட்டியிடும் சந்தோஷ் சிவனின் அப்சரஸ்

Posted: 12 May 2014 03:48 AM PDT

கடந்த 2011-ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த படம் 'மரகமஞ்சு'. இப்படம் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மனுக்கும், அவருக்கு மாடலாக இருந்த ஊர்வசி என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட காதலை மையமாக கொண்டு வெளிவந்தது. இதில் ராஜா ரவிவர்மனாக சந்தோஷ் சிவனும், பழைய நடிகை ராதாவின் மகள் கார்த்திகா ஊர்வசியாகவும் நடித்திருந்தனர். கார்த்திகா இதுவரை எந்த படங்களிலும் காட்டாத கவர்ச்சியும், சந்தோஷ் சிவனுடன் நெருக்கமாகவும் நடித்திருந்த இந்த படம் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை லெனின் ராஜேந்திரன் என்பவர் இயக்கியிருந்தார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். நித்யா மேனன், மல்லிகா கபூர், பூர்ணா

போலி நம்பர் பிளேட்டுடன் காரில் சுற்றவில்லை: இலியானா

Posted: 12 May 2014 03:44 AM PDT

இலியானா தமிழில் 'நண்பன்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவை மும்பை போலீசார் சமீபத்தில் கைது செய்ததாக செய்திகள் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் அவர் சுற்றியதாகவும் இதனால் இலியானாவை போலீசார் கைது செய்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்பட்டது. போலி நம்பர் பிளேட் பொருத்தியது பெரிய குற்றம் என்றும் நடிகை என்பதால் போலீசார் கடுமையாக எச்சரித்து விடுவித்து விட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு இலியானா பதில் அளித்துள்ளார்.

ரகசிய திருமணம்?: சித்தார்த் வீட்டில் குடியேறிய சமந்தா

Posted: 12 May 2014 02:35 AM PDT

'நான் ஈ', 'நீதானே என் பொன்வசந்தம்' படங்கள் மூலம் சமந்தா பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது விஜய் ஜோடியாக 'கத்தி', சூர்யா ஜோடியாக 'அஞ்சான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த்தும் சமந்தாவும் 'ஜாபர்தஸ்த்' என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. கோவில்களில் இருவரும் ஜோடியாக சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். இதன் மூலம் அவர்கள் காதல் விவகாரம் பகிரங்கமானது. ஆனாலும் காதலை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் சமந்தா தற்போது சித்தார்த் வீட்டில்

அம்புலி படக்கூட்டணி மீண்டும் இணையும் திகில் படம்

Posted: 12 May 2014 02:29 AM PDT

உலக தரத்துக்கு இணையாக தொழில் நுட்பத்தில் முன்னேறி வரும் தமிழ் சினிமாவில், மிக பன்மையான ஆவி உலகை பற்றிய படங்கள் வருவது விந்தையோ விந்தை. அம்புலி 3டி படம் மூலம் தமிழ் திரை படஉலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே.ஆர்.டி. கிரியேட்டிவ் பிரேம்ஸ் நிறுவனமும், இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் புதிய படம் 'ஆ'. இப்படம் குறித்து இயக்குனர்கள் கூறும்போது, 'ஆ' என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும்

ஒரு முத்தத்துக்கு ரூ.10 லட்சம் வாங்கிய லட்சுமிமேனன்

Posted: 12 May 2014 02:09 AM PDT

'கும்கி', 'சுந்தரபாண்டியன்', 'பாண்டியநாடு' என தொடர் ஹிட் படங்களில் நடித்த லட்சுமிமேனன் 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் விஷாலுடன் முத்த காட்சியில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். முன்னணி நடிகைகளே முத்த காட்சிக்கு மறுப்பு சொல்லும் சூழலில் லட்சுமிமேனன் துணிச்சலாக நடித்தது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. இதில் எப்படி நடிக்க சம்மதித்தார் என்று பலரும் பேசினார்கள். இதற்கான காரணம் தற்போது கசிந்துள்ளது. முத்தம் காட்சியில் நடிக்க லட்சுமி மேனனை அணுகியபோது முதலில் மறுத்தாராம். பிறகு அவரது தாய் சம்மளம் தவிர முத்த காட்சிக்கு மட்டும்

ஒரே படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் அக்கா-தங்கை

Posted: 11 May 2014 11:19 PM PDT

சூர்யா-ஜோதிகா நடித்த 'பேரழகன்' படத்தை இயக்கிய சசிசங்கர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் புதிய படம் 'பகடை பகடை'. இப்படத்தில் 'ஜெயம்' உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த திலீப் குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக திவ்யா சிங் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் புதிய முகம் ரிச்சு நடிக்கிறார். இவர் திவ்யா சிங்கின் உடன்பிறந்த தங்கை. அத்துடன் கோவை சரளா, இளவரசு, மயில்சாமி, சந்தானபாரதி, சிங்கமுத்து ஆகியோரும் நடிக்கிறார்கள். பணம் எப்படியெல்லாம் ஒருவன் வாழ்க்கையில் விளையாடுகிறது

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online