Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


தெனாலிராமன் பட விவகாரம்: சீமான் மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம்-தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை

Posted: 09 Apr 2014 05:21 AM PDT

சென்னை,

'தெனாலிராமன்' பட சர்ச்சையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை நிறுவனர் தலைவர் ஆர்.பாலகுருசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வடிவேலு ஒன்றும் எங்களின் எதிரி அல்ல. எங்கள் உணர்வுகளை ஜனநாயக வழியில் வெளிபடுத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக படம் இல்லாமல் வடிவேலு இருந்தபோது சீமான் ஏன் அவரை வைத்து படம் எடுக்கவில்லை.

ஜி.சேகரன் தலைமையில் டிஜிட்டல் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு புதிய அமைப்பு

Posted: 09 Apr 2014 03:56 AM PDT

சென்னை,-

டிஜிட்டல் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக, 'தமிழ் இலக்க திரைப்பட, குறும்பட மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர்கள் நல சங்கம்' என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் தொடக்க விழா, சென்னை தியாகராயநகரில் உள்ள பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது.

அமைப்பின் தலைவராக பட அதிபர்– வினியோகஸ்தர்– டைரக்டர் மற்றும் நடிகர் 'கலைப்புலி' ஜி.சேகரன், துணைத்தலைவராக பூபதிராஜா, செயலாளராக ஆறுமுகம், துணைச்செயலாளராக செல்வகுமாரன், பொருளாளராக அன்பழகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

ரஜினிகாந்தின் கோச்சடையான் மே 1-ந்தேதி 3850 தியேட்டர்களில் வெளியாகிறது

Posted: 09 Apr 2014 01:04 AM PDT

சென்னை,

ரஜினியின் கோச்சடையான் படம் ரிலீசுக்கு தயாராகிறது. வருகிற 11-ந் தேதி இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலாலும், பிற படங்களுக்கு வழிவிடும் நோக்கோடும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 16-ம் தேதி அன்று 'கோச்சடையான்' படத்தினை வெளியிடலாமா என குழப்பம் இருந்த நிலையில், மே 1-ம் தேதியே வெளியிடலாம் என இறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்-கவுதம் மேனன் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது

Posted: 09 Apr 2014 12:53 AM PDT

சென்னை

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

'வீரம்' படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க நடிகர் அஜித்  ஒப்பந்தமானார் . அஜித்துக்கு இது  55-வது படம். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து படத்தினைப் பற்றிய பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தமாகி இருப்பதாகவும். அரவிந்த்சாமி, அருண்விஜய் மற்றும் பலர் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொள்கிறார்?

Posted: 08 Apr 2014 10:32 PM PDT

சென்னை,

விக்ரம், ஏமி ஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் 'ஐ' படத்தினை ஷங்கர் இயக்கி இருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.இப்பட வேலைகள்  இறுதிக்கட்டத்தில் உள்ளன

ஆஸ்பத்திரியில் இருந்து நடிகை மனோரமா வீடு திரும்பினார்

Posted: 08 Apr 2014 07:23 PM PDT

சென்னை,

பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30–ந் தேதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். 6 நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டு இருந்தார்.

மனோரமாவின் உடல்நிலை சீரானதும், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகும் அவர் 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.
 

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online