Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


திருமணம் குறித்த எண்ணம் இல்லை: நடிகை ரம்யா பேட்டி

Posted: 06 Apr 2014 04:10 AM PDT

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் இளம் வயதில் எம்.பி. ஆன நடிகை ரம்யா.  அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தற்பொழுது திருமணம் செய்து கொள்வதற்கு நான் தயாராக இல்லை.  வருங்காலத்திலும் திருமணம் செய்து கொள்வதாக இல்லை.

அருள்நிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நகைச்சுவை படம்

Posted: 06 Apr 2014 03:11 AM PDT

அருள்நிதி அடுத்து கதாநாயகனாக நடிக்க இருக்கும் படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்.  நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் என்.ஜே. ஸ்ரீகிருஷ்ணா படம் குறித்து கூறும்போது, அனைவரும் நல்லவர்களாக வசிக்கும் கிராமத்தில் இருந்து படம் நகருகிறது.  அங்கு ஒரு குற்றமும் நடைபெறுவது இல்லை.  ஆனாலும் அங்கு ஒரு காவல் நிலையம் இருக்கிறது.  படத்தின் கதாநாயகன் ஒரு போலீஸ் அதிகாரியாக அந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.

கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்த் பாணியிலேயே கதை இருக்கும் இயக்குனர் சவுந்தர்யா பேட்டி

Posted: 05 Apr 2014 12:26 PM PDT

மும்பை

கோச்சடையானில் நவீன தொழில்நுட்பம் இருந்தாலும், ரஜினிகாந்த் பாணியிலேயே கதை இருக்கும் என்று இயக்குனர் சவுந்தர்யா கூறினார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இயக்குனரும் ரஜினிகாந்தின் மகளுமான சவுந்தர்யா மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

உயர் தொழில்நுட்பம்

கோச்சடையான் படத்தில் நடிக்க கதையை பார்த்து தான் எனது தந்தை ஒப்புக் கொண்டார். அவரது மகளான நான் இயக்கும் காரணத்திற்காக அவர் ஒப்புக் கொள்ளவில்லை. படத்தில் நல்ல கதை இருந்தது. இந்த படம் உயர் தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டேன் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் தரிசனம் செய்த நடிகர் விஷால் பேட்டி

Posted: 05 Apr 2014 10:23 AM PDT

ஸ்ரீகாளஹஸ்தி,

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், நிருபர்களிடம் பேசியபோது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டேன் என கூறினார்.

சாமி தரிசனம்

இந்தியாவின் நம்பர்-1 தலைவர் மோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர்-நடிகை சமந்தா

Posted: 05 Apr 2014 07:44 AM PDT

ஐதராபாத்,

இந்தியாவின் நம்பர்-1 தலைவர் மோடி. அவர்தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று நடிகை சமந்தா கூறினார்.

சமந்தா

பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து இருப்பவர், சமந்தா. நான் ஈ படத்தின் மூலம் பிரபலமானார். இப்போது, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்யும் புதிய படத்தில் விஜய் ஜோடியாகவும், லிங்குசாமி டைரக்டு செய்யும் அஞ்சான் படத்தில் சூர்யா ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

நடிப்பை வென்றது படிப்பு..

Posted: 05 Apr 2014 06:15 AM PDT

இவரது பெயரைக் கேட்டாலே, 'நல்ல நடிகை ஆச்சே..       கொஞ்ச காலமாக காணலையே எங்கே போனாங்க..?' என்று கேட்பார்கள். உண்மையில், இவர் நடிப்பை வென்ற படிப்பாளி. நடிப்பில் இருந்து விலகி எம்.பி.ஏ. படித்தார். அதில் தங்கப்பதக்கம் வென்றார். அடுத்து ஆசிரியை ஆனார். கலையில் வாழ்க்கையை தொடங்கிய இவர், கல்வியில் இப்போது உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.

அவரிடம் சில கேள்விகள்:

நீங்கள் நடிப்பில் இருந்து விலகி, கல்விப் பணியில் இறங்கிவிட்ட காரணம் என்ன?

‘ஐஸ்வர்யாராயைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்’ –அமிதாப்பச்சன்

Posted: 05 Apr 2014 06:08 AM PDT

இந்திய மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நிரந்தர சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்! திரை உலகின் சகாப்தமாக திகழும் அவர், மனம்விட்டுப் பேசும்போது நிறைய விஷயங்களை கொட்டுவார்.

அவரிடம் உரையாடலாமா..!

உங்களோடு நடித்தவர்களில் கிட்டத்தட்ட எல்லோரும் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்கள். நீங்கள் மட்டும் இன்றும் நிலைத்திருக்கிறீர்களே..?

நான் நடிக்கும்போது மட்டுமே உயிரோடு இருப்பதாக கருதுகிறேன். நடிப்பிற்காக உயிர் வாழ்கிறேன். கலையோடு ஒன்றியவர்களால் தனித்து வாழ முடியாது. மற்ற பணிகளைப்போல் நடிப்பிற்கு ஓய்வு இல்லை.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online