Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


நானும், சுஜிபாலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம் கொலைமிரட்டல் விடுக்கவில்லை-டைரக்டர் ரவிக்குமார்

Posted: 04 Apr 2014 10:30 AM PDT

சென்னை,

டைரக்டர் ரவிக்குமார்  தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:

நானும், சுஜிபாலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தது உண்மை. உண்மை படத்தை தொடங்கிய போதே எங்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன்பிறகு தான் அவரை நான் பெண் கேட்டேன். நிச்சயதார்த்தம் நடந்தது. சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றதால் நாங்கள் பிரிய வேண்டியதாகிவிட்டது.

முகத்தில் அமிலத்தை வீசி கொன்று விடுவதாக டைரக்டர் பி.ரவிக்குமார் மிரட்டுகிறார் நடிகை சுஜிபாலா உதவி கமிஷனரிடம் புகார் மனு

Posted: 04 Apr 2014 08:39 AM PDT

சென்னை,

நடிகை சுஜிபாலா, டைரக்டர் பி.ரவிக்குமார் மீது, வடபழனி உதவி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். முகத்தில் அமிலத்தை வீசி கொலை செய்துவிடுவதாக, பி.ரவிக்குமார் மிரட்டுகிறார் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை-டைரக்டர் மோதல்

சினிமாவின் மறுபக்கம் : 64 .ஓர் அழகு நட்சத்திரம் ‘அமர தீபம்’ ஆனது!

Posted: 04 Apr 2014 07:53 AM PDT

ஜெமினிகணேசன், 1947 வாக்கில் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் பார்த்து வந்த 'வேதியியல்' பேராசிரியர் (கெமிஸ்ட்ரி புரபசர்) வேலையைவிட்டு ஓர் உறவினர் மூலம் எஸ்.எஸ்.வாசனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதன் மூலம் ஜெமினி ஸ்டுடியோவில் அவர் வேலைக்கு சேர்ந்தார்.

ஜெமினி ஸ்டூடியோ 'கேஸ்டிங் டிபார்ட்மெண்டில்' (நடிகர் – நடிகையரைத் தேர்ந்தெடுக்கும் இலாகா) பணிபுரிந்து கொண்டிருந்த£ர்.

அப்போது, தெலுங்கு நாயுடு இனத்தைச் சேர்ந்த ஒருவர், 12 வயதுடைய ஒரு சிறுமியை சினிமாவில் சேர்ப்பதற்காக அழைத்து வந்து அவரிடம் அறிமுகப்படுத்தி நடிப்பதற்கு 'சான்ஸ்' கேட்டார்.

ஹாலிவுட் நடிகர் ஜானி தெப் 3–வது திருமணம் சக நடிகையை மணக்கிறார்

Posted: 04 Apr 2014 03:59 AM PDT

லாஸ் ஏஞ்சல்ஸ்,

பிரபல ஹாலிவுட் படமான 'பைரேட்ஸ் ஆப் தி கரிபீயன்' திரைப்படம் மூலம் உலகப்புகழ் பெற்றவர், நடிகர் ஜானி தெப் (வயது 50). இவர் கடந்த 1983–ம் ஆண்டு லோரி ஆன் ஆலிசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 1998 முதல் பிரபல பிரெஞ்சு நடிகை வனஸா பரிடிஸ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு வெளிவந்த 'தி ரம் டைரி' என்ற திரைப்படத்தில் நடித்த போது, நடிகை ஆம்பர் ஹெர்ட்டுடன் (27) அவருக்கு காதல் மலர்ந்தது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online