Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


‘‘டைரக்டர் ரவிக்குமார், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்’’ நடிகை சுஜி பாலா பேட்டி

Posted: 03 Apr 2014 10:36 AM PDT

சென்னை,

''எனக்கும், டைரக்டர் ரவிக்குமாருக்கும் திருமணம் நடக்கவில்லை. அவர், எனக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார்'' என்று நடிகை சுஜி பாலா கூறினார்.

சுஜி பாலா

'அய்யா வழி, சந்திரமுகி' கலவரம், முத்துக்கு முத்தாக' ஆகிய படங்களில் நடித்திருப்பவர் சுஜி பாலா. சில வருடங்களுக்கு முன்பு இவர், பி.ரவிக்குமார் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்த 'உண்மை' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். படம் பாதி வளர்ந்த நிலையில், சுஜி பாலாவுக்கும், ரவிக்குமாருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படத்தை தடை செய்ய வேண்டும் தலைமை செயலாளரிடம் மனு

Posted: 03 Apr 2014 09:51 AM PDT

சென்னை,

கிருஷ்ணதேவராயர் ராஜாவை கிண்டல் செய்கிறார் என்பதால், வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளரிடம் தெலுங்கு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

2 கோடி தெலுங்கர்

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் அலுவலகத்தில், தெலுங்கு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி சங்க தலைவர் ஜெகதீஷ்வர ரெட்டி கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழகத்தில் 2 கோடி தெலுங்கு மக்கள் வசிக்கின்றனர்.

உணர்வுகளுக்கு பாதிப்பு

‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தில் அப்பா–மகனாக 2 வேடங்களில் ஜெய் ஆகாஷ்

Posted: 03 Apr 2014 04:26 AM PDT

ஜெய் ஆகாஷ் முதன்முதலாக அப்பா–மகனாக 2 வேடங்களில், ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, 'காதலுக்கு கண்ணில்லை' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கதாநாயகிகளாக அலிஷா தாஸ், நிஷா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

காதல்வசப்பட்டு கெட்டவன் ஒருவருக்கு வாழ்க்கப்படும் ஒருத்தி, அவனால் சீரழிக்கப்படுகிறாள். கெட்டவன் கொடுத்த பரிசாக ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுக்கிறாள். பிள்ளையால் அவன் மேன்மை அடைந்தாளா, அவளை சீரழித்தவன் பழிவாங்கப்பட்டானா? என்பதே இந்த படத்தின் கதை.

சாஜி கைலாஷ் டைரக்ஷனில் ‘என் வழி தனி வழி’

Posted: 03 Apr 2014 04:22 AM PDT

'எல்லாம் அவன் செயல்' படத்தை டைரக்டு செய்த சாஜி கைலாசும், அந்த படத்தின் கதாநாயகன் ஆர்.கே.வும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து இருக்கிறார்கள். அந்த படத்தின் பெயர், 'என் வழி தனி வழி.' இது, ஒரு போலீஸ் கதை. ஒரு போலீஸ் அதிகாரியின் உரிமையையும், கடமையையும் சித்தரிக்கும் படம்.

போலீஸ் அதிகாரியாக ஆர்.கே. நடிக்க, அவருக்கு ஜோடியாக பூனம் கவுர் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக மீனாட்சி தீக்ஷித் நடிக்கிறார். இவர் களுடன் விசு, ராதாரவி, ஆசிஷ் வித்யார்த்தி, விவேக், சூரி, சம்பத், இளவரசு, தலைவாசல் விஜய், ரோஜா, சீதா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘ஓம் சாந்தி ஓம்’, ‘எப்போதும் வென்றான்’ படங்களை வெளியிட இடைக்கால தடை சிவில் கோர்ட்டு உத்தரவு

Posted: 02 Apr 2014 11:53 AM PDT

சென்னை,

எப்போதும் வென்றான், ஓம் சாந்தி ஓம் ஆகிய படங்களை வெளியிட சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 18–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆர்.ரங்கராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

தந்தை மரணம்

ஏ.ஆர்.ஆர்.கிரியேஷன் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் டி.ஜி.எஸ்.ராஜாராம், 'எப்போதும் வென்றான்' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை தயாரிக்க, என் தந்தை ரகுநந்தன குப்தாவிடம், ரூ.95 லட்சத்தை ராஜாராம் பெற்றார்.

உதட்டுடன் உதடு சேர்த்து எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார்-நடிகை லட்சுமி மேனன்

Posted: 02 Apr 2014 10:10 AM PDT

சென்னை,

உதட்டுடன் உதடு சேர்த்து எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று நடிகை லட்சுமி மேனன் கூறினார்.

பேட்டி

நடிகர் விஷாலின் சொந்தப்பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரிÕயும், யு டி.வி. நிறுவனமும் இணைந்து Ôநான் சிகப்பு மனிதன் என்ற படத்தை தயாரித்துள்ளன. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதையட்டி நடிகர் விஷால், நடிகை லட்சுமி மேனன் ஆகிய இருவரும் சென்னையில் இன்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது விஷால் கூறியதாவது:

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online