Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


சண்டைக்காட்சியில் நடித்தபோது விபத்து நடிகர் விஷால் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 28 Apr 2014 07:16 AM PDT

சென்னை,

சண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகர் விஷால் கைவிரலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்தார். ஆஸ்பத்திரியில் அவருடைய கைவிரலில் 14 தையல்கள் போடப்பட்டன.

விஷால் கதாநாயகனாக நடித்த, ஹரி டைரக்ட் செய்யும் பூஜை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்திற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.அந்த அரங்கில் விஷால் ஸ்டண்டு நடிகருடன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. ஸ்டண்டு மாஸ்டர் கனல் கண்ணன் அந்த சண்டைக்காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்.

இந்திய சினிமாவில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும் .-லதா ரஜினிகாந்த்

Posted: 28 Apr 2014 01:27 AM PDT

சென்னை

ரஜினியின் கோச்சடையான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற 11-ந் தேதி இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலாலும், பிற படங்களுக்கு வழிவிடும் நோக்கோடும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 16-ம் தேதி அன்று 'கோச்சடையான்' படத்தினை வெளியிடலாமா என குழப்பம் இருந்த நிலையில், கோச்சடையான் மே 9 -ந்தேதி உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் வெளியாகிறது என்று படத்தின் இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ரஜினிகாந்த் சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

எனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று எனக்கே தெரியவில்லை டி.என்.ஏ மூலம் தான் அறிய வேண்டும் நடிகை சொல்கிறார்

Posted: 27 Apr 2014 11:05 PM PDT

வாஷிங்டன்

சிங்கப்பூரை பூர்வீகமாக கொண்ட நடிகை டிலா டெக்குய்லா இவர்  தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் வாழ்ந்து வருகிறார். 33 வயதான டிலா டெக்குலா நடிகை மட்டுமின்றி நல்ல பாடகியும் ஆவார். இவர் கடந்த 18 ந்தேதி  சமூக வலைத்தளத்தில்  தன்னுடைய மேடான வயிற்றுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டு, தான் 10 வாரகால கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

வசூலில் சாதனை படைக்கும் சோனாக்ஷி

Posted: 27 Apr 2014 10:38 PM PDT

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்காவின் மகள் சோனாக்ஷி சின்கா இந்தி திரைஉலகில் மிக வேகமாக வளர்ந்து வருகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்து வெற்றிபடமான 'தபாங்–2' வில் திருமணமான குடும்பப் பெண் வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றுள்ளார்.

அவரிடம் சில கேள்விகள்...

திருமணமான பெண்ணாக நடித்தபோது அந்த உணர்வு எப்படி இருந்தது?

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் இயக்குனரானார் பிரபு தேவா

Posted: 27 Apr 2014 10:35 PM PDT

தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற பிரபுதேவா அடுத்த படத்தை இயக்க ரூ. 30 கோடி சமபளம் நிர்ணயம் செய்யபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனமூலம் பாலிவுட்டில் மிக அதிகம் சம்பளம் வாங்கிய இயக்குனர் ரோஹித் ஷெட்டியை பிரபுதேவா
முந்திவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்திய இயக்குனர் ஒருவர் இவ்வளவு பெரிய தொகை சம்பளம் பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.

நிஜ காதலில் தோற்கும் ‘காதல் மன்னன்’

Posted: 27 Apr 2014 10:26 PM PDT

ருசிகரம் அல்ல சோகம்

'இந்தி பட உலகின் காதல் மன்னன் என்று போற்றப்படும் சல்மான்கான், ஏன் நிஜவாழ்க்கை காதலில் வெற்றி பெற முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்'– என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அவரும் விடாமல் துரத்தி துரத்தி நடிகைகளை காதலிக்கிறார். 'காதல் கனிந்து கல்யாணத்தில் முடியும்' என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு காதல் முறிந்துவிட்டது என்ற கசப்பான செய்திதான் மீண்டும் மீண்டும் கிடைக்கிறது.

முக அழகு மட்டும் போதாது... – ஆயுஸ்மான் குரானா

Posted: 27 Apr 2014 10:12 PM PDT

மாடலிங் உலகில் இருந்து சினிமாவுக்கு வருகிறவர்கள் மிக அதிகம். ஆனால் ரேடியோவில் இருந்து டெலிவிஷனுக்கு வந்து, அங்கிருந்து சினிமாவுக்கு வருகிறவர்கள் மிக குறைவு. அந்த அரிதான வாய்ப்பு வழியாக இந்தி சினிமாவிற்குள் நுழைந்து கலக்கிக்கொண்டிருக்கிறார், நடிகர் ஆயுஸ்மான் குரானா. 'விக்கி டோனா' என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், இப்போதும் நன்றி மறவாமல் ரேடியோ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.

சினி சிப்ஸ்

Posted: 27 Apr 2014 10:00 PM PDT

நடிப்பில், அதிக கவனம்!

இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, இசைப்பணியை கொஞ்சம் குறைத்துக்கொண்டு நடிப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். வீட்டிலேயே நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.

அவருடைய நடிப்பில் 'சலீம்,' 'இந்தியா–பாகிஸ்தான்' என அடுத்தடுத்து படங்கள் வர இருக்கின்றன!

5 மொழி படங்களில், சத்யராஜ்!

நடிகர் சத்ருகன் சின்காவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது

Posted: 27 Apr 2014 08:28 PM PDT

தம்பா பே (அமெரிக்கா),

அமெரிக்காவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்காவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சர்வதேச திரைப்பட விழா

அமெரிக்காவில் உள்ள தம்பா பே நகரில் 15–வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 'பறக்கும் சீக்கியர்' என்று வர்ணிக்கப்படும் பிரபல முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கும் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online