Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


கமலஹாசனின் உத்தம வில்லன் செப்டம்பர் 10-ந் தேதி ரிலீஸ் ஆகிறது

Posted: 23 Apr 2014 05:15 AM PDT

சென்னை

கமலஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் வரும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'விஸ்வரூபம் 2' படத்தை தொடர்ந்து கமலஹாசன் 'உத்தம வில்லன்' படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.  இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. 'விஸ்வரூபம் 2' படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.

தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் -காமசூத்ரா 3டி புகழ் ஷெர்லின் சோப்ரா

Posted: 23 Apr 2014 03:14 AM PDT

சென்னை

30 வயதாகும் ஷெர்லின் சோப்ரா இதுவரை 14 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் அவரது பெயர் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில்  யுனிவர்சிட்டி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஷெர்லின், மிஸ் ஆந்திரா பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிளே பாய் மற்றும் டுவிட்டரில் அரைநிர்வாண மற்றும் நிர்வாண படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை  ஏற்படுத்துபவர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online