Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


மணல் புயலில் சிக்கிகொண்ட நடிகை அனுஷ்கா சர்மா படக்குழுவினர்

Posted: 18 Apr 2014 10:53 PM PDT

ஜோத்பூர்

பாம்பே வெல்வெட் என அழைக்கபடும் அனுஷ்கா சர்மா பாலிவுட்டில் நம்பர் ஒன் நாயகியாக இருந்துவருகிறார். இவர் முதல்முறையாக என்எச்10 NH10 என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் அவர் நவ்தீப் சிங் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனுஷ்கா மிதம் மிஞ்சிய கவர்ச்சியுடன் இந்த படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால்  இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரேந்திரமோடி - ரஜினிகாந்த் சந்திப்புக்கு பின் பாரதீய ஜனதாவின் செல்வாக்கு கூடி உள்ளது - ஹேமாமாலினி

Posted: 18 Apr 2014 10:30 PM PDT

மதுரா

முன்னாள் பாலிவுட் கனவுக்கன்னி ஹேமாமாலினி பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

சமீபத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ரஜினியை சந்தித்து பேசிய பின்னர், தமிழகத்தில் மட்டும் இன்றி நாட்டின் பல பகுதிகளில் பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக பேசியுள்ளார்..

‘‘எல்லா புது படங்களையும் பார்க்கிறேன்’’ புது டைரக்டர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்

Posted: 18 Apr 2014 11:29 AM PDT

சென்னை,

''நான் எல்லா புது படங்களையும் பார்க்கிறேன். அந்த வகையில், புது டைரக்டர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இரண்டரை மணி நேரத்தில் படத்தை முடித்து விடுங்கள்'' என்று நடிகர் விஜய் கேட்டுக்கொண்டார்.

'ஜில்லா' படவிழா

விஜய் நடித்து, சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆர்.டி.நேசன் டைரக்டு செய்த 'ஜில்லா' படத்தின் 100–வது நாள் விழா, சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. விழாவில் விஜய் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

சினிமாவின் மறுபக்கம் : 66. என் வசனத் தடாகத்தில் மறுபடியும் மலர்ந்த வண்ணத்தாமரை!

Posted: 18 Apr 2014 05:45 AM PDT

தனது புதிய படத்தில் நடிக்க கே.ஆர்.விஜயாவை ஒப்பந்தம் செய்ய தேவரண்ணன் சென்றார். கே.ஆர்.விஜயா வீட்டின் இரண்டாள் உயர கருப்புக் கிராதியில் தேவரண்ணன் நுழைந்தார்.

டைட்டானிக் சாதனையை முறியடித்த மோகன்லாலின் த்ரிஷ்யம்

Posted: 17 Apr 2014 11:17 PM PDT

அபுதாபி

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த  டிசம்பர் மாதம் வெளியான த்ரிஷ்யம் மலையாள சினிமா  டைட்டானிக் சாதனையை முறியடித்துள்ளது.

 ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள்கள் ஓடிய ஒரே படம் என்ற பெருமையை டைட்டானிக் திரைப்படம் தான் இதுவரை பெற்றிருந்தது. ஆனால் அந்த படத்தின் சாதனையை முறியடித்து தென்னிந்திய  படமான த்ரிஷ்யம் (மலையாளம்)  முறியடித்து உள்ளது.திரிஷ்யம்  கடந்த ஜனவரி மாதம் 2 ந்தேதி எல்டோரடோவில் வெளியானது  100-வது நாளை கடந்தும் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.

நடிகை சிம்ரனை பாடகியாக்கிய பார்த்திபன்

Posted: 17 Apr 2014 10:36 PM PDT

சென்னை

தமிழில்  துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பஞ்ச தந்திரம், உள்பட ஏராளமான படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்த சிம்ரன் 2003-ல் தீபக் என்பவரை  திருமணம்  செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு சில வருடங்கள் விலகியிருந்தார்.  

அதன்பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்ட ஆரம்பித்த சிம்ரன், சொந்தப்படம் எடுக்கப்போவதாக கூறப்பட்டது.  தற்போது சிம்ரன் பாடகியாக மாறி உள்ளார்.

நடிகை அமலாபால்- டைரக்டர் விஜய் திருமண நிச்சயதார்த்தம் அடுத்தமாதம் நடக்கிறது

Posted: 17 Apr 2014 10:18 PM PDT

சென்னை,

டைரகடர் விஜய்  இயக்கிய  தெய்வத்திருமகள் படத்தில் அமலாபால்  நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.  அதன் பிறகு விஜய்   இயக்கத்தில் விஜய் நடித்த  தலைவா படத்தில்  நடித்தார். இவர்களது  காதல் விவகாரம்  பற்றி ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன  அதை மறுத்து வந்தனர்.
 
இந்த நிலையில் டைரகடர் விஜய் வெளி நாட்டில் இருந்து  திரும்பியதும் எங்கள் எதிர்காலம் குறித்து அறிவிப்போம் என்று அறிக்கை வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online