Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


நடிகர் ஜெய் உடன் புதிய படத்தில் இணையும் நடிகை ஆண்ட்ரியா

Posted: 17 Apr 2014 12:55 AM PDT

நடிகை ஆண்ட்ரியா விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  மேலும், அரண்மனை மற்றும் தரமணி ஆகிய திரைப்படங்களும் அவரது கைவசம் உள்ளன.  இந்நிலையில், அவர் நடிகர் ஜெய் உடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார்.  எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நகரத்து பெண்மணியாக நடிக்கிறார்.  இது குறித்து இயக்குனர் சரவணன் கூறும்போது, படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார்.  நகரத்து கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் ரசிகர்கள் அவரை ஸ்டைலிஷ் ஆன பெண்ணாக பார்ப்பார்கள்.

நடிகர் விஜய், நரேந்திர மோடியுடன் சந்திப்பு அரசியல் பேசவில்லை என்று பேட்டி

Posted: 16 Apr 2014 12:46 PM PDT

கோவை,

கோவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நடிகர் விஜய் சந்தித்தார்.

நடிகர் விஜய் சந்திப்பு

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 2-வது கட்ட பிரசாரத்தை தமிழகத்தில் நேற்று மேற்கொண்டார். கிருஷ்ணகிரியில் பேசிய அவர் பின்னர் சேலம் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு நேற்று இரவு கோவை பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக கோவை வந்தார்.

முன்னதாக நடிகர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை கோவை வந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online