Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


தெனாலிராமன் பட பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டது படம் , நாளை மறுநாள் திரைக்கு வருகிறது

Posted: 16 Apr 2014 05:24 AM PDT

சென்னை,

தெலுங்கு அமைப்புகளுடன் வடிவேல் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, 'தெனாலிராமன்' பட பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டது. படம், நாளை  மறுநாள் (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது.

'தெனாலிராமன்'

மோடியுடனான சந்திப்பு குறித்து நடிகர் விஜய் விளக்கம்

Posted: 16 Apr 2014 04:57 AM PDT

சென்னை,

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடியை நடிகர் விஜய் இன்று மாலை கோவையில் சந்திக்கிறார். இது குறித்து நடிகர் விஜய் கூறுகையில்;

நமது நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மோடி என்னை சந்திக்க விரும்பினார். அவரது அழைப்பை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக மட்டுமே அவரை சந்திக்கின்றேன். இந்த சந்திப்பு அரசியல் ரீதயானதல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் டெல்லியில் அறிவிப்பு

Posted: 16 Apr 2014 04:12 AM PDT

புதுடெல்லி,

சிறந்த திரைப்படங்களுக்கான 61 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில்,  சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஷிப் ஆப் திஷ்  பெற்றுள்ளது. தமிழ் படமான தங்கமீன்கள், சிறந்த பிராந்திய படத்திற்கான விருதை பெற்றுள்ளது. சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான விருது நா. முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா படமான "தலைமுறை" படத்துக்கும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.  தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படப்பிரிவில் தலைமுறைகள் படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
 

நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகர் விஜயும் நரேந்திர மோடியை சந்திக்கிறார்

Posted: 16 Apr 2014 01:36 AM PDT

சென்னை,

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்த பாரதீயஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார். ரஜினி வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த நிலையில் அடுத்து நடிகர் விஜய்யும் நரேந்திர மோடியை  சந்திக்கிறார். ரஜினியை சந்தித்த போதே விஜய்யையும் சந்திப்பதாக இருந்தது.ஆனால் விஜய் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் சந்திப்பு நிகழவில்லை.

முத்தக்காட்சியில் கதாநாயகனின் உதட்டை கடித்து காயப்படுத்திய நடிகை கங்கானா ரனாவத்

Posted: 16 Apr 2014 12:57 AM PDT

மும்பை

தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் உள்பட பல இந்தி  படங்களில் நடித்து உள்ளவர் கங்கானா ரனாவத். பிரபல பாலிவுட் இயக்குனர் சாய் கபீர் இயக்கத்தில்  ரிவால்வர் ராணி திரைப்படத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படம்  வரும் 25-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் கங்கனா ரனாவத், பியூஷ் மிஸ்ரா, வீர் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். கதநாயகிக்கு முக்கியத்தும உள்ளபடம் கங்கானா  ரனாவத்திற்கு இது திருப்பு முனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அமீர் கானின் பி.கே. திரைப்படம் டிசம்பர் 19ல் வெளியீடு

Posted: 15 Apr 2014 04:03 AM PDT

புதுடெல்லி,

நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியான படங்களில் தாரே ஜமீன் பர், 3 இடியட்ஸ் மற்றும் தூம் 3 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன.  இந்த படங்கள் டிசம்பரில் வெளிவந்தவை.  எனவே, அமீர் கானின் புதிய வரவாக தயாராகும் பி.கே. என்ற படத்தையும் டிசம்பரில் வெளியிடுவது என்று வினோத் சோப்ரா பிலிம்ஸ் மற்றும் ராஜ்குமார் ஹிராணி பிலிம்ஸ் ஆகியவை டிஸ்னி இந்தியாவுடன் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது.

ரூ.1.11 கோடிக்கு ஏலம் போன மர்லின் மன்றோவின் காதணி

Posted: 15 Apr 2014 03:38 AM PDT

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற ஹாலிவுட் பொருட்கள் ஏலத்தில், மறைந்த ஹாலிவுட் நடிகையான மர்லின் மன்றோவின் காதணி ரூ.1.11 கோடிக்கு விலை போனது.

வெள்ளி காதணி

கடந்த 1955ம் ஆண்டு தி ரோஸ் டாட்டூ என்ற பெயரிலான படம் திரைக்கு வந்தது.  டென்னஸ்ஸீ வில்லியம்ஸ் படைப்பில் உருவான கதையின் பெயரிலேயே திரைப்படமாக வெளிவந்த அதன் முதல் காட்சியில் மன்றோ இந்த காதணியை அணிந்து வந்தார்.

டுவிட்டரில் ரசிகர்களிடம் மருத்துவ ஆலோசனை கேட்டுள்ள நடிகர் ஹிருத்திக் ரோஷன்

Posted: 15 Apr 2014 03:26 AM PDT

மும்பை,

இந்தி திரைப்படங்களில் நடன காட்சிகளில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ஆடி மகிழ்வித்தவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.  இவர் கடந்த வருடம் மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்து திரும்பினார்.

இந்நிலையில், இவருக்கு ஷின் ஸ்பிளிண்ட்ஸ் என்ற மற்றொரு வியாதி தாக்கியுள்ளது.  இந்த வியாதியால் இவரது கால் மூட்டு பகுதியில் இருந்து பாத மூட்டு வரை வலி ஏற்படும்.  பொதுவாக ஓட்ட பந்தய வீரர்கள் மற்றும் நடனம் ஆடுபவர்களை அதிகம் தாக்கும் இந்த நோய்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online