Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


தாதா சாகேப் விருது பெறும் குல்சாருக்கு, கவிஞர் வைரமுத்து வாழ்த்து

Posted: 12 Apr 2014 09:30 AM PDT

சென்னை,

தாதா சாகேப் விருது பெறும் குல்சாருக்கு, கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருது

தாதா சாகேப் பால்கே விருது பெறும் குல்சாருக்கு, கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–

கவிஞர், பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குநர் என்று பன்முக படைப்பாளியாக விளங்கும் குல்சார், தாதா சாகேப் பால்கே விருது பெறுவது குறித்து ஒரு சமகாலப் படைப்பாளி என்ற முறையில் மகிழ்ச்சி அடைகிறேன், வாழ்த்துகிறேன். அவர் கவிதைகளைப் போலவே அவரும் மென்மையானவர்.

சினிமாவின் மறுபக்கம் : 65. நான் ஒரு‘பீனிக்ஸ்’ பறவை!

Posted: 12 Apr 2014 06:48 AM PDT

அரேபிய பாலைவனத்தில் 600 ஆண்டுகள் வாழ்ந்து, பின்னர் 'மறுபிறவி' எடுப்பதற்காக தன்னையே எரித்துக்கொண்ட ஒரு பெரிய பறவையின் பெயர் 'பீனிக்ஸ்.' அதன் சாம்பலில் இருந்து, அது மீண்டும் 'பீனிக்ஸ்' பறவையாக புனர்ஜன்மம் எடுத்து வந்ததாக எனது மாணவப் பருவத்தில் ஒரு அரேபிய நூலில் படித்திருக்கிறேன்.

அப்படி, துப்பாக்கியினால் சுடப்பட்டு தப்பிப்பிழைத்து உயிரோடு மீண்ட எம்.ஜி.ஆரை ஒரு 'பீனிக்ஸ்' பறவையாகக் கூறலாம்.

ஒற்றுமையாக இருக்கும் மக்கள் இடையே ‘‘மொழி சண்டையை இழுத்து விடாதீர்கள்’’ நடிகர் வடிவேல் உருக்கமான பேட்டி

Posted: 12 Apr 2014 04:27 AM PDT

சென்னை,

''தமிழ்நாட்டில் ஒற்றுமையாக இருக்கும் மக்கள் இடையே மொழி சண்டையை இழுத்து விடாதீர்கள்'' என்று நகைச்சுவை நடிகர் வடிவேல் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

'தெனாலிராமன்'

வடிவேல் கதாநாயகனாக நடித்து, விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், 'தெனாலிராமன்.' இந்த படத்தில் வடிவேல் தெனாலிராமனாகவும், அரசனாகவும் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி தீக்ஷித் நடித்துள்ளார். யுவராஜ் தயாளன் டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

நடிகர் சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் ஸ்ருதி ஹாசன்!

Posted: 12 Apr 2014 02:17 AM PDT

சென்னை,

நடிகர் சூர்யாவுடன் ஸ்ருதி ஹாசன் மீண்டும் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனேவே நடித்துள்ள 7-ம் அறிவு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா-ஸ்ருதி ஹாசன் இரண்டாவது முறையாக ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் பூஜை விழா ஏப்ரல் 14-ம் தேதி  நகரம் ஸ்டூடியோவில் நடைபெற இருக்கிறது. படபிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

நடிகர் சூர்யா குறித்து நான் எதுவும் கூறவில்லை நடிகை கரீனா கபூர் மறுப்பு

Posted: 11 Apr 2014 09:54 PM PDT

சென்னை,

சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் இந்தி நடிகை கரீனாகபூர் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கேட்டதாகவும் அதற்கு கரீனா கபூர்  சூர்யாவை யார் என்றே தனக்கு தெரியாது என்றும், இந்தி தவிர வேறு மொழி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியதாக செய்திகள் வெளியானது. இதனால் சூர்யா ரசிகர்கள் கோபமடைந்தனர். சோஷியல் மீடியாக்களில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளனர் .

இதை தொடர்ந்து கரீனா கபூர்  கூறியதாவது:-

இது போன்ற ஆதாரமற்ற கதைகள் எங்கிருந்து வருகிறது என்று  எனக்கு தெரியவில்லை.

நாகூர் தர்கா கந்தூரி விழாவில் கூட்டு பிரார்த்தனை ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு

Posted: 11 Apr 2014 04:09 AM PDT

நாகப்பட்டினம்,

நாகூர் தர்கா கந்தூரி விழாவில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.

கந்தூரி விழா

வாக்களிப்பது நமது கடமை; பணத்திற்காக விலைபோகக்கூடாது நடிகர் ஜெயம் ரவி பேச்சு

Posted: 11 Apr 2014 03:58 AM PDT

சென்னை,

வேட்பாளர்களை மனசாட்சிப்படி தேர்ந்தெடுங்கள் என்றும், வாக்களிப்பது நமது கடமை, பணத்திற்காக விலைபோகக்கூடாது என்றும் நடிகர் ஜெயம் ரவி பேசினார்.

விழிப்புணர்வு கண்காட்சி

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, புதிய வாக்காளர்களை கவர்வதற்காகவும், வாக்களிப்பதின் அவசியத்தை எடுத்துக்கூறுவதற்காகவும் சென்னை மாநகராட்சி தேர்தல் பிரிவு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி

Posted: 11 Apr 2014 03:35 AM PDT

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கே.பாலசந்தரின் தயாரிப்பில் 555 ஹீரோ பரத் நடிக்கவிருக்கின்றார். இதற்கு முன் 2008 ஆம் ஆண்டில் பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் திருவண்ணாமலை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் தற்போது பாலசந்தரின் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க பரத் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online