Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


உன் சமையல் அறையில் ஆடியோ ஏப்ரல் 14-ல் வெளியீடு

Posted: 09 Apr 2014 05:51 AM PDT

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரகாஷ்ராஜ் இயக்கி தயாரித்து வரும் படம் 'உன் சமையல் அறையில்'. இப்படத்தில் பிரகாஷ் ராஜ் கதாநாயகனாகவும், சினேகா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் ஊர்வசி, ஐஸ்வர்யா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் மலையாளத்தில் ஹிட்டான 'சால்ட் அன்ட் பெப்பர்' என்ற படத்தின் ரீமேக்

ரஜினி படத்தில் நடிக்கிறேன்: சோனாக்ஷி சின்கா பேட்டி

Posted: 09 Apr 2014 04:04 AM PDT

ரஜினி-தீபிகா படுகோனே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'கோச்சடையான்' படத்தின் வெளியீட்டு தேதி முடிவாகியுள்ள நிலையில், ரஜினி அடுத்ததாக கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் குறித்தான தகவல்கள் இணையதளங்களில் கலக்கி வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ள படத்தில் ரஜினிக்கு இரண்டு நாயகிகள் உண்டு என்றும்

திருப்பதி கோவிலில் சினேகா, தீபிகா படுகோனே தரிசனம்

Posted: 09 Apr 2014 03:03 AM PDT

திருப்பதி கோவிலில் நடிகைகள் சினேகா, தீபிகா படுகோனே, ஜுகி சாவ்லா ஆகியோர் நேற்று சாமி தரிசனம் செய்தனர். காலையில் நடந்த சுப்ரபாத சேவையின்போது நடிகை சினேகா, ஜுகிசாவ்லா ஆகியோர் தனித்தனியாக தரிசனம் செய்தனர். நைவேத்திய இடைவெளியின் போது நடிகை தீபிகா படுகோனே சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஆலய நிர்வாகிகள் தரிசனத்துக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினார்கள். வெளியே வந்த அவர்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது. நடிகைகளுடன் கைகுலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

விஜய் படத்துக்கு ரூ.1 கோடியில் பிரம்மாண்ட அரங்கு

Posted: 09 Apr 2014 02:45 AM PDT

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் 'கத்தி' படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. துப்பாக்கி படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் என்பதால் 'துப்பாக்கி'யை விட பெரிய அளவில் ஹிட் கொடுக்கவேண்டும் என்ற முடிவில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தில்

விக்ரமின் ஐ பட விழாவில் அர்னால்டு?

Posted: 09 Apr 2014 01:28 AM PDT

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'ஐ' பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஷங்கர் இயக்குவதும் பெரிய பட்ஜெட் படங்களை எடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பதும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதும் இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்துள்ளது. இந்த படத்துக்காக விக்ரம் உடம்பை முறுக்கேற்றியும் ஒல்லியாக்கியும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். ஹாலிவுட் படசாயலில் பிரமாண்டமாக தாயராகியுள்ளது. இதில் நாயகியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். சுரேஷ்கோபி, சந்தானம் போன்றோரும் உள்ளனர். தமிழ், தெலுங்கு, மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட்

மே 1-ல் வெளியாகிறது கோச்சடையான்: 3,850 தியேட்டர்களில் ரிலீஸ்

Posted: 09 Apr 2014 12:46 AM PDT

ரஜினியின் 'கோச்சடையான்' படம் ரிலீசுக்கு தயாராகிறது. வருகிற 11–ந் தேதி இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலாலும், பிற படங்களுக்கு வழிவிடும் நோக்கோடும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மே 1–ந் தேதி படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா ஆகிய மொழிகளில் இப்படம் வருகிறது. ஐப்பானிய மொழியிலும் டப்பிங் செய்து வெளியீடுகின்றனர். உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 3 ஆயிரத்து 850 தியேட்டர்களில் இப்படத்தை திரையிடுகின்றனர். 'கோச்சடையான்' படம் 'அவதார்', 'டின்டின்' போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் அனிமேஷன் படமாகி

குறும்படம், டிஜிட்டல் படங்களுக்காக புதுபட அதிபர் சங்கம் உதயம்

Posted: 09 Apr 2014 12:19 AM PDT

தமிழ் இலக்க திரைப்பட குறும்பட மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர் நல சங்கம் என்ற பெயரில் புதுபட அதிபர்கள் சங்கம் உருவாகியுள்ளது. இச்சங்கத்தின் தலைவராக கலைப்புலி சேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர் கூறும்போது:– திரைப்படத்துறை டிஜிட்டல் மயமாகியுள்ளதால் பத்து லட்சம் ரூபாய்க்கும் படம் எடுக்க முடிகிறது. இப்படி எடுக்கப்படும் சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. தியேட்டர்களும் கிடைப்பது இல்லை. எனவே சிறு பட்ஜெட் மற்றும் குறும்படம் ஆவண பட தயாரிப்பாளர்கள் நலனுக்காக இச்சங்கம் துவங்கப்பட்டுள்ளது. குறும்பட ஆவண படங்களை இச்சங்கத்தில் பதிவு செய்யலாம்.

பாஸ் என்கிற பாஸ்கரன் 2–ம் பாகம்: ஆர்யா ஜோடி தமன்னா

Posted: 08 Apr 2014 11:55 PM PDT

'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2010 செப்டம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ஆர்யா–நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தனர். சந்தானம் காமெடியனாக வந்தார். ராஜேஷ் இயக்கினார். இதன் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு ரசிகர்களிடம் இருந்து வற்புறுத்தல்கள் வந்தன. ஆர்யாவும் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்பட்டார். இதையடுத்து படவேலைகள் துவங்கியுள்ளன. இதில் ஆர்யா ஜோடியாக நடிக்க நாயகி தேர்வு நடந்தது. நயன்தாராவையே நடிக்க வைக்கலாமா என பரீசிலிக்கப்பட்டது. தற்போது

நஸ்ரியாவின் கடைசி படத்தை வெளியிடும் உதயநிதி

Posted: 08 Apr 2014 11:38 PM PDT

'காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தன்னுடைய அடுத்த படமாக 'வாயை மூடி பேசவும்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. நஸ்ரியாவுக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் திருமண நிச்சயமாகியிருக்கிறது. ஆகவே, இப்படத்திற்கு பிறகு அவர் சினிமாவிற்கு முழுக்கு போடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இப்படமே இவருடைய கடைசி படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

நடிகை ஸ்ரீதேவியும் பிரசாரத்தில் குதித்தார்

Posted: 08 Apr 2014 10:57 PM PDT

வடமாநிலங்களில் நடிகர்– நடிகைகள் தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளனர். தற்போது நடிகை ஸ்ரீதேவியும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பதேப்பூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவர் அமர்சிங்கை ஆதரித்து திறந்த ஜீப்பில்

ஆஸ்பத்திரியில் இருந்து நடிகை மனோரமா வீடு திரும்பினார்

Posted: 08 Apr 2014 08:15 PM PDT

பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30-ந் தேதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். 6 நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டு இருந்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online