Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


விருதுகள் தர மறுப்பு: திரிஷா வருத்தம்

Posted: 08 Apr 2014 03:43 AM PDT

தமிழ் சினிமாவில் 2002–ம் ஆண்டு திரிஷா கதாநாயகியாக அறிமுகமானார். பத்து வருடங்களாக சினிமாவில் நிலைத்து இருக்கிறார். கமல், விஜய், விக்ரம், அஜித், சூர்யா, விஷால், ஜெயம்ரவி, சிம்பு என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். இந்தி, தெலுங்கு, படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், தேசிய அளவில் இதுவரை அவருக்கு விருதுகள் கிடைக்கவில்லை. 'வர்ஷம்' தெலுங்கு படம் தேசிய அங்கீகாரத்தை பெற்று தரும் என எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. மாநில அளவில் மட்டுமே அவர் கவுரவிக்கப்பட்டு உள்ளார். வித்யாபாலன் இவருக்கு பிறகுதான் சினிமாவுக்கு வந்தார். அவருக்கு

காமெடி படங்கள் எடுப்பது கஷ்டம்: இயக்குனர் முருகதாஸ்

Posted: 08 Apr 2014 03:38 AM PDT

சிவகார்த்தியேன் ஹன்சிகா ஜோடியாக நடித்த மான்கராத்தே படம் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி வடபழனியில் நடந்தது. இதில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் பங்கேற்று பேசியதாவது:– இந்த படத்தின் கதையை நான் எழுதி என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் திருக்குமாரை டைரக்டு செய்ய வைத்தேன். காமெடி கதையம்சத்தில் வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் படம் வெற்றிகரமாக ஓடுகிறது. குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக பார்க்கிறார்கள். சிவகார்த்திகேயனை வைத்து சீரியஸ் படம் பண்ண முடியாது. இந்த படத்தின் கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருந்தார். திறமையான புதுடெக்னீஷியன்களை அறிமுகப்படுத்தவே படங்கள் எடுக்கிறேன். எனக்கு

எல்லோரும் ஓட்டு போடுங்கள்: நடிகர் மாதவன் வேண்டுகோள்

Posted: 08 Apr 2014 02:27 AM PDT

நடிகர் – நடிகைகள் பலர் தேர்தலில் பங்கெடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன், தேர்தல் கமிஷன் விளம்பர படத்தில் பங்கேற்று நடித்தார். வாக்காளர்கள் கண்டிப்பாக ஓட்டு போடவேண்டும் என்றும் ஓட்டுக்கு பணம் வாங்ககூடாது என்றும் வலியுறுத்தினார். நடிகர் மாதவனும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார். மும்பையில் அவரிடம் தேர்தல் குறித்து கேட்டபோது, இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் தேர்தலில் ஜனநாயக கடமை உள்ளது. நமது நாட்டை நேசிக்க வேண்டும். அதற்காக கண்டிப்பாக எல்லோரும் ஓட்டு போட வேண்டும். நம் தேச வரலாற்றில் இது முக்கியமான தேர்தல் ஆகும்.

தெலுங்கு படங்களில் சுருதிஹாசன் கவர்ச்சி

Posted: 08 Apr 2014 02:15 AM PDT

தெலுங்கு படங்களில் சுருதிஹாசன் கவர்ச்சியாக நடிக்கிறார். ஏற்கனவே 'டிடே' இந்தி படத்தில் அரைகுறை ஆடையில் விலைமாது கேரக்டரில் வந்தார். படுக்கையறை காட்சிகளிலும் நெருக்கமாக நடித்து இருந்தார். இந்த படங்கள் இண்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது தெலுங்கு படங்களிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டுகிறார். 'ஏவடு', 'ரேஸ்குராம்' ஆகிய இரு படங்களிலும் கவர்ச்சியாக நடித்துள்ளார். அரைகுறை அடையிலும் நடனம் ஆடி உள்ளார். இந்த படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. இப்படங்களை ரசிகர்கள் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.

தமிழ் மண்ணில் தமிழனை மிரட்டுவதா?: தெலுங்கு அமைப்புகளுக்கு இயக்குனர் வ.கௌதமன் கண்டனம்

Posted: 08 Apr 2014 12:40 AM PDT

நடிகர் வடிவேலு நடிக்கும் 'தெனாலி ராமன்' படத்துக்கு தெலுங்கு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் கிருஷ்ண தேவராயர் குறித்து தவறாகச் சொல்லப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தெலுங்கு அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். சீமானைத் தொடர்ந்து இயக்குனர் வ.கௌதமனும் தெலுங்கு அமைப்புகளுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ் திரையுலகில் என்.எஸ்.கிருஷ்ணன், 'டணால்' தங்கவேலு, கவுண்டமணி வரிசையில் நகைச்சுவையின் உச்சமான தமிழ் கலைஞன் வடிவேலு. அப்படிப்பட்ட ஒருவரை தமிழ் மண்ணில், அதுவும் அவரது வீட்டிற்கே வந்து ஒரு பெரும் கூட்டத்துடன் மிரட்டி விட்டு சென்றிருப்பது மிகவும் வேதனையளிப்பது மட்டுமின்றி மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் சீண்டிப் பார்க்கும் செயலாகும். இது மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த படமாக பரதேசி தேர்வு

Posted: 07 Apr 2014 11:32 PM PDT

நார்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக பாலா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'பரதேசி' படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த நடிகருக்கான விருதுக்கு 'பரதேசி' படத்தில் நடித்த அதர்வா தேர்வாகியிருக்கிறார். சிறந்த நடிகைக்கான விருது 'விடியும் முன்' படத்திற்காக பூஜாவுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த இயக்குனராக பாலாவும், சிறந்த

ஆசியாவின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ரஜினிக்கு 66-வது இடம்

Posted: 07 Apr 2014 10:56 PM PDT

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பால்சகூ என்பவர் நிறுவிய ஆசியன் அவார்ட்ஸ் என்ற அமைப்பு ஆண்டு தோறும் ஆசியாவில் செல்வாக்குமிக்க 100 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 63-வது இடம் பெற்றிருக்கிறார். தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி 66-வது இடத்தை பெற்றிருக்கிறார். இந்த பட்டியலில் சீன அதிபர் சீ ஜின்பிங் முதல் இடத்தை பிடித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2-வது இடத்தையும், பாரதீய

கோடை விடுமுறையில் 7 புதுபடங்கள் ரிலீஸ்

Posted: 07 Apr 2014 10:48 PM PDT

கோடையில் 7 புதுப்படங்கள் ரிலீசாகிறது. சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஜோடியாக நடித்த 'மான் கராத்தே' படம் கடந்த வாரம் வந்தது. தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்கள் வர இருக்கின்றன. ரஜினியின் 'கோச்சடையான்' படம் வருகிற 11–ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மே 1 அல்லது 16–ந் தேதி ரிலீசாகலாம் என தெரிகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்பட 6 மொழிகளில் இப்படம் வருகிறது. விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்துள்ள 'நான் சிகப்பு மனிதன்' படம் வருகிற 11–ந் தேதி ரிலீசாகிறது. தமிழ், புத்தாண்டையொட்டி இப்படம்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online