Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தங்களது தவறுகளை மறைக்க என்மீது குற்றஞ்சாட்டுவது வருத்தத்துக்குரியது: அமலாபால்

Posted: 30 Apr 2014 07:45 AM PDT

அமலா பாலுக்கு உற்சாகம் தரும் வகையில் பல்வேறு சூழ்நிலைகள் அமைந்துக் கொண்டு இருந்தாலும் சமீபத்தில் ஊடகங்களில் பரவி வரும் சர்ச்சை ஒன்று அவரை சங்கடபடுத்தி வருகிறது. குறிப்பிட்ட காலநேரத்தில் வரக்கூடிய, தொழில் பக்தி உள்ள நடிகை என பெயர் எடுத்த அமலா பால் மீது ஒரு தெலுங்கு பட நிறுவனம் ஒன்று அவர் தன்னுடைய திருமணத்தை பற்றி முன்னரே கூறவில்லை என்றும் அதனால் அவர் படத்தில்

வெளிவரும் முன்பே விருது வாங்கிய கோச்சடையான்

Posted: 30 Apr 2014 06:39 AM PDT

ரஜினி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் 'கோச்சடையான்'. மோஷன் கேப்சர்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கியுள்ளார். இதுவரை இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக மோஷன் கேப்சர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய படமாக்கிய சௌந்தர்யாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

எனக்கு இந்த வருடம் இரண்டு பிறந்த நாள்: நாசர் மகன் பெருமிதம்

Posted: 30 Apr 2014 06:21 AM PDT

'நான் இந்த வருடம் இருமுறை பிறந்த நாள் கொண்டாடுகிறேன்' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் நாசரின் மகனும் 'சைவம்' படத்தின் அறிமுக நாயகனுமான பாஷா என்று அழைக்கப்படும் லுதுஃபுதீன் பாஷா. 'சைவம்' படத்தின் இயக்குனர் விஜய் தன் படத்தில் அறிமுகமான பாஷாவை பற்றி மிக பெருமையாக அறிவித்தார். பாஷா

நாகிரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா: சென்னையில் நாளை நடைபெறுகிறது

Posted: 30 Apr 2014 06:08 AM PDT

விஜயா மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் 'திரு.பி.நாகிரெட்டி நினைவு திரைப்பட விருது' வழங்கும் விழா நாளை சென்னையில் காமராஜர் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் கலந்து கொள்கிறார். திரைப்பட நடிகர் சிவகுமார் சிறப்புரையாற்றுகிறார். கௌரவ

நார்வே திரைப்பட விழாவில் பரதேசி படத்திற்கு 4 விருதுகள்

Posted: 30 Apr 2014 04:52 AM PDT

பாலாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் 'பரதேசி'. இப்படத்தில் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன், உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் தமிழில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளது. இந்நிலையில், நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் இந்த படத்துக்கு

மது விருந்தில் நிர்வாண நடனம்: நடிகை சன்னி லியோன் கைது ஆவாரா?

Posted: 30 Apr 2014 02:35 AM PDT

மது விருந்தில் நிர்வாண நடனம் ஆடியதாக நடிகை சன்னிலியோன் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சன்னிலியோன் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் வடகறி படத்தில் ஜெய்வுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி உள்ளார். புனேயில் உள்ள வைர வியாபாரி வீட்டில் நடந்த மது விருந்தில் சன்னிலியோன் நிர்வாண நடனம் ஆடியதாக இண்டர் நெட்டில் படங்கள் வெளியாகி உள்ளது.

நல்ல கதைகளில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயார்: சமந்தா

Posted: 30 Apr 2014 01:32 AM PDT

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயார் என்று நடிகை சமந்தா அறிவித்தார். இவர் தற்போது விஜய் ஜோடியாக கத்தி படத்திலும் சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதால் சம்பளத்தை ரூ.1 கோடிக்கு உயர்த்திவிட்டதாக செய்திகள் பரவின. இது நயன்தாரா, அனுஷ்கா போன்றோர் வாங்கும் சம்பளத்துக்கு இணையானது ஆகும். அத்துடன் சிறு பட்ஜெட் படங்கள், புதுமுக நடிகர்கள் படங்களில் நடிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சமந்தா பதில் அளித்துள்ளார்.

திருமண அறிவிப்பால் அமலாபாலுக்கு படங்கள் குறைந்தன

Posted: 29 Apr 2014 11:46 PM PDT

திருமண அறிவிப்பால் நடிகை அமலாபாலுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. தற்போது தமிழில் தனுஷ் ஜோடியாக வேலை இல்லா பட்டதாரி மற்றும் பார்த்திபன் இயக்கும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படங்களில் நடிக்கிறார். ஒரு தெலுங்கு படம், ஒரு மலையான படமும் கைவசம் உள்ளன. மேலும் சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து

நாளை அனுஷ்காசர்மா பிறந்த நாள்: வீராட்கோலி பங்கேற்கிறார்

Posted: 29 Apr 2014 10:56 PM PDT

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனில் ஒருவர் வீராட் கோலி. ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்து தங்களது காதலை வெளிப்படுத்தி வந்தனர். அனுஷ்கா சர்மா தனது 26–வது பிறந்த நாள் விழாவை நாளை (மே1–ந்தேதி) கொண்டாடுகிறார். அவர் தற்போது ராஜஸ்தானில்

இந்த நூற்றாண்டின் இறுதியில் மாற்று சினிமா வந்து விடும்: வைரமுத்து

Posted: 29 Apr 2014 10:06 PM PDT

நடிகர்-டைரக்டர் மனோபாலா தயாரிப்பில், வினோத் டைரக்டு செய்துள்ள 'சதுரங்க வேட்டை' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. படத்தின் பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்து விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- ''மனோபாலாவை சுமார் 35 ஆண்டுகளுக்கு முன், பாரதிராஜா அலுவலகத்தில் சந்தித்தேன். இப்போதும் அவரது தோற்றத்தில் மாற்றம் இல்லை. அவரது குணமும், எடையும் இன்று வரைக்கும் மாறவில்லை. 3 தலைமுறை கலைஞர்களை ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கிற சாதனையை தன் படத்தின் மூலம் செய்திருக்கிறார். இதை எல்லோரும் செய்துவிட முடியாது. இந்த படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது இருந்த நெகிழ்ச்சியை விட, காட்சிகளைப் பார்த்து அடைந்த நெகிழ்ச்சி அதிகம். ஒரு படத்தின் முன்னோட்டம் பார்த்து, பாடல் காட்சிகளைப் பார்த்து, ஒட்டுமொத்த படத்தை எடை போட முடியாது. மொழி, நடிப்பு, அழகு, ஒலி, ஒளி, என காட்சி ஒவ்வொன்றும் தனித்தனியே அழகாக தெரியலாம். ஆனால் ஒட்டு மொத்த அழகே முக்கியம். ஒரு படத்தை முழுவதுமாக பார்த்து எடை போடும் தகுதி கட்டணம் கொடுத்துப் பார்க்கும் ரசிகனுக்கு மட்டுமே உண்டு. அவன்தான் க

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online