Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


புதுமுக நடிகர் சித்தார்த்துடன் காதலா? ஹன்சிகா விளக்கம்

Posted: 29 Apr 2014 02:41 AM PDT

ஹன்சிகாவுக்கும் புதுமுக நடிகர் சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசுக்கள் பரவி உள்ளன. ஹன்சிகா ஏற்கனவே சிம்புவை விரும்பினார். இருவருமே காதலை பகிரங்கமாக அறிவித்தனர். ஆனால் திடீரென அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டது. ஹன்சிகாவை பிரிந்து விட்டதாக சிம்பு கூறினார். தற்போது பழைய காதலி நயன்தாராவை ஜோடியாக்கி இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார்

கத்தி படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா

Posted: 29 Apr 2014 02:24 AM PDT

சமந்தா தனது 27–வது பிறந்தநாளை 'கத்தி' படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு விஜய் மற்றும் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர். இருவரும் இப்படத்தில் முதன் முதலாக ஜோடியாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த படம் தவிர லிங்குசாமி இயக்கும் 'அஞ்சான்' படத்திலும் சூர்யா ஜோடியாக

பிரபுதேவா சம்பளம் ரூ.30 கோடி: இந்தி பட உலகம் அதிர்ச்சி

Posted: 29 Apr 2014 12:31 AM PDT

பிரபுதேவா சம்பளம் ரூ.30 கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்து அவர் இயக்கப்போகும் இந்தி படத்துக்குதான் இவ்வளவு தொகை வாங்குகிறாராம். இதனால் இந்திபட உலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேறு எந்த இந்தி இயக்குனரும் இவ்வளவு தொகை சம்பளம் வாங்கியதில்லையாம். இந்தி டைரக்டர் ரோஹித் ஷெட்டி வாங்கிய ரூ.20 கோடிதான் அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது. இப்போது அவரையும் பிரபுதேவா மிஞ்சி விட்டார். இவர் வாங்கும் சம்பளம் இந்தியில் முன்னணி கதாநாயகர்கள் சம்பளத்துக்கு இணையானது என்கின்றனர். தமிழ்ப்பட உலகின் முன்னணி கதாநாயகர்கள் இவ்வளவு தொகை சம்பளமாக வாங்கியது இல்லை.

ரஜினி நடிக்கும் புதுபடம் லிங்கா?: படப்பிடிப்பு துவங்கியது

Posted: 28 Apr 2014 11:30 PM PDT

ரஜினியின் 'கோச்சடையான்' படம் வருகிற 9–ந் தேதி ரிலீசாகிறது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்களான 'அவதார்', 'டின்டின்' சாயலில் இப்படத்தை எடுத்துள்ளனர். ஆறு மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி தொடர்ந்து நடிப்பாரா, மாட்டாரா? நடிப்பதாக இருந்தால் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பன போன்ற கேள்விகள் வந்த வண்ணம் இருந்தன. அதற்கு விடையாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்து நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்துக்கு 'லிங்கா' என்று பெயர் வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. லிங்கா என்பது ரஜினியின் பேரன் பெயர் ஆகும். படப்பிடிப்பு மைசூரில் துவங்கியுள்ளது. இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷால் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 28 Apr 2014 10:59 PM PDT

விஷால் கதாநாயகனாக நடிக்க, ஹரி டைரக்ட் செய்யும் 'பூஜை' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்திற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்த அரங்கில் விஷால் ஸ்டண்டு நடிகருடன் மோதும் சண்டைக்காட்சி நேற்று படமாக்கப்பட்டது.

ஆங்கில படத்துக்கு இணையாக உருவாகியுள்ள தாவணிக் காற்று

Posted: 28 Apr 2014 10:48 PM PDT

இயக்குனர் வி.ஆர்.பி.மனோகர் இயக்கத்தில் சஸ்பென்ஸ், திரில்லர் படமாக உருவாகி வரும் மே மாதம் முதல் தேதியில் வெளிவர காத்திருக்கும் படம் 'தாவணிக் காற்று'. இப்படத்தின் கதாநாயகனாக தமிழ், கதாநாயகியாக ஆராத்யா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், முரளி, ரேகா, சுரேஷ், ரவிக்குமார், ஷோகிப், பேபி ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர் வி.ஆர்.பி.மனோகரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, இன்றைய கால சினிமா ரசிகர்களை கவரும்படியான ஒரு சஸ்பென்ஸ், திரில்லரை படமாக இயக்கியிருக்கிறேன். இப்படம் இயல்பான தமிழ் படங்களைப் போல் அல்லாமல் ஆங்கிலப் படத்துக்கு இணையாக இருக்கும்.

கோச்சடையான் சிறப்புக் காட்சியை மோடி பார்க்க ஏற்பாடு

Posted: 28 Apr 2014 12:18 PM PDT

ரஜினியின் 'கோச்சடையான்' படப் பாடல்கள் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இணைய தளங்களில் டிரெய்லரை இதுவரை பல லட்சக் கணக்கானோர் பார்த்துள்ளனர். தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்ட 'கோச்சடையான்' 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 6

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online