Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


இந்தியில் தனுசுக்கு சிறந்த அறிமுக நாயகன் விருது

Posted: 28 Apr 2014 05:58 AM PDT

அமெரிக்காவில் உள்ள தாம்பா பே நகரில் 15-வது சர்வதேச திரைப்பட விழா நடிந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று சிறந்த நடிகர், நடிகையருக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்த இந்தி நடிகை தீபிகா படுகோனேவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், துணை நடிகைக்கான விருது 'பாஹ் மில்கா பாஹ்' என்ற படத்தில் நடித்ததற்காக திவ்யா தத்துவுக்கும் கிடைத்தது. டி டே படத்தில் வில்லனாக நடித்த ரிஷிகபூர் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

சினிமாவை உண்மையாக நேசிக்கிறேன்; அது என்னை கைவிடாது - நடிகர் காளி

Posted: 28 Apr 2014 04:30 AM PDT

என் குடும்பத்தாரின் ஒத்துழைப்பும், நண்பர்களின் அரவணைப்பும் இல்லை என்றால் நான் ஆசைப்பட்ட இந்த சினிமாவில் ஒரு துரும்பைகூட அசைத்துபார்த்திருக்க முடியாதுண்ணே.. பணத்தை சம்பாதிக்கிறேனோ இல்லையோ இந்த சினிமாவில் நல்ல நண்பர்களையும் புது சொந்தங்களையும் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேண்ணே, அது என்னை இந்த சினிமாவிலே கரை சேர்க்கும் அண்ணே என்று கண்கள் பனிக்க சொல்கிறார் நடிகர் காளி. 'பீட்சா 2', 'உதயம் NH4', 'விழா', 'தடையறத் தாக்க', 'தெகிடி', 'கேரள நாட்டிளம் பெண்களுடனே', 'வாயை மூடி பேசவும்' உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர, காமெடி வேடங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றவர்தான் இந்த காளி. அவர் அளித்த பேட்டியிலிருந்து... கோவில்பட்டி பக்கத்தில் குவளையத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் இருந்து வந்த எனக்கு எட்டு வருடத்திற்கும் மேலான போராட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாத்தாயின் செல்லப்பிள்ளைகளில் ஒருவனாக வலம் வரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கவர்ச்சி படங்களை வெளியிட்டவர் மீது சுருதிஹாசன் வழக்கு

Posted: 28 Apr 2014 02:59 AM PDT

தனது கவர்ச்சி படங்களை இன்டர்நெட்டில் பரவ விட்டவர் மீது வழக்கு தொடரப்போவதாக சுருதிஹாசன் அறிவித்து உள்ளார். சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். டி.டே இந்தி படத்தில் விலைமாது கேரக்டரில் வந்தார். படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

நடிகை ராதாவுடன் பைசூல் மோதல்: பெண் வக்கீல் புகாரில் சிறையில் அடைப்பு

Posted: 28 Apr 2014 02:51 AM PDT

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழில் அதிபர் பைசூல் மீது பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தன்னை காதலித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த பைசூல், திருமணம் செய்ய மறுப்பதாகவும், பணமோசடி செய்து விட்டதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பாக வட பழனி உதவி கமிஷனராக இருந்த ஜெயசுப்பிரமணியன் விசாரணை நடத்தினார்.

இந்திய சினிமாவில் கோச்சடையான் மைல்கல் படம்: லதா ரஜினிகாந்த் பேட்டி

Posted: 28 Apr 2014 02:42 AM PDT

ரஜினியின் கோச்சடையான் படம் அடுத்த மாதம் (மே) 9–ந்தேதி ரிலீசாகிறது. ஆறு மொழிகளில் இப்படம் வருகிறது. அவதார், டின்டின் ஹாலிவுட் படங்கள் சாயலில் இது எடுக்கப்பட்டு உள்ளது. கோச்சடையான் படம் குறித்து ரஜினி மனைவி லதா கூறியதாவது:– கோச்சடையான் படத்துக்கு நிதி நெருக்கடி உள்ள தென்றும் இதனால் ரிலீஸ் தாமதமாகும் என்றும் செய்திகள் பரவி உள்ளன. இது வதந்திதான். எல்லாம் சுமூகமாக போய்க் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும்

அமலாபாலுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாற மாட்டேன்: டைரக்டர் விஜய்

Posted: 28 Apr 2014 02:10 AM PDT

அமலாபாலுக்கும், டைரக்டர் விஜய்க்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இது காதல் திருமணம் ஆகும். விஜய் இயக்கிய 'தெய்வத்திருமகள்', 'தலைவா' படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். ஜூன் 7–ந் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும், 12–ந் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது என்றும் செய்திகள் வந்தன. ஆனால் விஜய் கூறும் போது, அமலாபால் படங்களில் பிசியாக நடிக்கிறார். எனக்கு 'சைவம்' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் முடிந்த பிறகு எங்கள் திருமணம் நடக்கும் என்றார். இந்த நிலையில் விஜய்யை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி அமலாபாலும், அவரது பெற்றோரும் வற்புறுத்துவதாக செய்திகள் வந்தன. அமலாபால்

பார்த்திபன் படத்தில் சிவகார்த்திகேயன் நடனம்

Posted: 28 Apr 2014 12:43 AM PDT

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். முதலில் புதுமுகங்களை வைத்து இப்படத்தை எடுக்கப் போவதாக அறிவித்த பார்த்திபன், இப்போது ஆர்யா, விஜய் சேதுபதி, அமலாபால், டாப்சி, நஸ்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே களத்தில் இறக்கியுள்ளார். அதோடு, இப்படத்திற்காக சிம்ரனை முதன்முறையாக ஒரு பாடலை பாடவைத்துள்ளார் பார்த்திபன். மேலும் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவை நடனமாட கேட்டுள்ளார். அவரும் ஆடி தருவதாக கூறியிருக்கிறார். ஆனால், தற்போது அவர் இந்தி படத்தில் பிசியாக இருப்பதால்

பாண்டிராஜ் படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஜோதிகா?

Posted: 28 Apr 2014 12:08 AM PDT

நடிகை ஜோதிகா மீண்டும் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ள ஜோதிகா நடிகர் சூர்யாவை மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். நிறைய படவாயப்புகள் வந்தும் நடிக்கவில்லை. தற்போது 'பசங்க' படத்தை எடுத்து பிரபலமான பாண்டிராஜ் குழந்தைகளுக்கான படமொன்றை இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபுவுடன் நடிக்க முடிவா?: குஷ்பு விளக்கம்

Posted: 27 Apr 2014 11:43 PM PDT

குஷ்புவும் பிரபுவும் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் 1990களில் பல படங்களில் இணைந்து நடித்தார்கள். ரசிகர்கள் மத்தியில் பொருத்தமான ஜோடி என்றும் பேசப்பட்டார்கள். 1991–ல் பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்து வெளியான 'சின்னதம்பி' மெகாஹிட் படமாக அமைந்தது. பி.வாசு இப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற 'போவோமா ஊர்கோலம்', 'துளியிலே ஆட வந்த', 'அட உச்சம் தல', 'அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்', 'குயில புடிச்சி', 'நீ எங்கே என் அன்பே' போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின. அதைத் தொடர்ந்து 'தர்மத்தின் தலைவன்', 'மைடியர் மார்த்தாண்டன்', 'சின்ன வாத்தியார்', 'கிழக்கு கரை' போன்ற படங்களிலும் சேர்ந்து நடித்தார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online