Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


மீண்டும் பஞ்ச் வசனம் பேசும் அஜீத்

Posted: 27 Apr 2014 08:07 AM PDT

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் தனது 55-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் முதன்முதலாக கவுதம் மேனனுடன் கைகோர்த்திருக்கும் அஜீத் இப்படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வரவிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியுள்ளது. அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

தாமதமாகும் சிம்புவின் இது நம்ம ஆளு

Posted: 27 Apr 2014 07:04 AM PDT

சிம்பு, நயன்தாரா ஜோடி சேர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் 'இது நம்ம ஆளு' படத்தில் நடித்து வருகிறார்கள். இருவரும் 2006–ல் ரிலீசான வல்லவன் படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரையும்

சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா

Posted: 27 Apr 2014 06:11 AM PDT

சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் 'அஞ்சான்' படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியா சமந்தா நடிக்கிறார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை செய்து வருகிறார். 'அஞ்சான்'

மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

Posted: 27 Apr 2014 01:30 AM PDT

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த 13–ந் தேதி சென்னைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி தன்னை சந்தித்தது பற்றி ரஜினிகாந்திடம் கேட்ட போது, ''மோடி எனது நெருங்கிய நன்பர் அந்த வகையில் என்னை சந்தித்தார்'' என்று கூறினார். இது தொடர்பாக ரஜினிகாந்தின் மனைவி லதா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். ரஜினி-மோடி சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, ''நரேந்திரமோடி ரஜினியின் மிக நெருங்கிய நன்பராவார். ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மோடி நேரில் வந்து பார்த்தார்.

திரைப்பட வர்த்தக சபை தேர்தல்: போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

Posted: 27 Apr 2014 12:59 AM PDT

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தல் இன்று நடந்தது. இந்த அமைப்பின் தலைவராக உள்ள கல்யாண் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பொது தேர்தல் நடத்தப்பட்டது. ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் காலை 9 மணிக்கு ஒட்டுப் பதிவு தொடங்கியது. கேரளாவை சேர்ந்த சசிகுமார் தலைமையில் ஒரு அணியும், விஜயகுமார் தலைமையில் மற்றொரு அணியும் மோதின. தேர்தல் பார்வையாளராக ஆதிசேஷன் இருந்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 2085 பேர் ஓட்டுபோட தகுதி உள்ளவர்கள் ஆவார்கள். இதில் பெரும்பாலானோர் நேரில் வந்து ஓட்டு போட்டனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online