Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஷங்கரின் உதவியாளர் இயக்கும் கப்பல்

Posted: 23 Apr 2014 06:06 AM PDT

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் திரையுலகில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவரது பாசறையில் இருந்து மற்றொரு உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகிறார். அவரின் பெயர் கார்த்திக் ஜி.கிரிஷ். ஷங்கரிடம் 'சிவாஜி', 'எந்திரன்' ஆகிய படங்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இவர் இப்போது கப்பல் என்ற படத்தை இயக்குகிறார். இன்று இப்படத்தின் லோகோவை

அஜீத்துக்கு வில்லியாகும் தன்ஷிகா

Posted: 23 Apr 2014 03:35 AM PDT

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் தனது 55-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜீத்துக்கு வில்லன்களாக அருண் விஜய்யும், ஆதியும் மோதுகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு வில்லியை சேர்க்கவுள்ளார்

இயக்குனராக அவதாரம் எடுக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமார்

Posted: 23 Apr 2014 02:51 AM PDT

திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் 'அட்டக்கத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்', 'வில்லா-2', 'தெகிடி' ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவருடைய தயாரிப்பில் 'முண்டாசு பட்டி', 'லூசியா' உள்ளிட்ட சில படங்கள் வெளிவர உள்ளன. தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற சி.வி.குமார் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள்

ஓட்டு போட தயாராகும் நடிகர்–நடிகைகள்

Posted: 23 Apr 2014 02:08 AM PDT

பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. நடிகர் – நடிகைகள் வாக்குப் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்ற தயாராகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த், போயஸ்கார்டன் அருகில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நாளை காலை 10 மணிக்கு ஓட்டு போடுகிறார். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னையில் பிரசாரத்துக்கு வந்தபோது ரஜினியை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது மோடி, சிறந்த நிர்வாகி, திறமையானவர் அவர் எண்ணம் நிறைவேற வேண்டும் என்று ரஜினி பேட்டி அளித்தார். கமலஹாசன் பெங்களூரில் 'உத்தமவில்லன்' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். ஓட்டு போடுவதற்காக இன்று படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு

வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்திய நடிகர் ஆதி

Posted: 23 Apr 2014 01:27 AM PDT

லெட்ஜ் பிரிட்ஜ் (Lets Bridge) என்ற தொண்டு நிறுவனத்தை நடிகர் ஆதி தொடங்கியுள்ளார். சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கியுள்ள இந்த தொண்டு நிறுவனம் மூலம் பல இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் 'முத்திரை முகாம்' என்ற பெயரில் விழிப்புணர்ச்சி முகாம்களை நடத்தியுள்ளார். இதற்காக ஒரு நிமிடம் ஓடக்கூடிய விழிப்புணர்வு பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பாடகி சின்மயிக்கு மே 6–ல் திருமணம்: நடிகர் ராகுல் ரவீந்தரை மணக்கிறார்

Posted: 22 Apr 2014 11:43 PM PDT

பாடகி சின்மயி 'மையா மையா', 'சரசர சாரைக்காற்று', 'சகானா சாரல் தூவுதோ', 'கிளிமாஞ்சாரோ', 'ஒரு தெய்வம் தந்த பூவே' உள்பட ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். சின்மயிக்கும் நடிகர் ராகுல் ரவீந்தருக்கும் காதல் மலர்ந்தது. ராகுல் ரவீந்தர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இருவீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து திருமணத் தேதி முடிவாகியுள்ளது.

நட்பை ஆழமாக சொல்ல வரும் மேல்

Posted: 22 Apr 2014 11:12 PM PDT

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் 'மேல்' படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் சினிமா பிரபலங்களை வரவழைத்துத்தான் ஆடியோவை வெளியிடுவார்கள். ஆனால், இந்த படத்தின் இசை வெளியீட்டை இப்படத்தில் இசையமைத்த இசைக் கலைஞர்களை வைத்து வெளியிட்டுள்ளனர். இப்படவிழாவில் படக்குழுவினர் மற்றும் ஜே.கே.பிலிம்ஸ் சதீஷ், இயக்குனர் ஸ்டான்லி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். படத்தின் இயக்குனர் அருள் பேசும்போது, புதிய தொழில்நுட்பங்களை உபயோகிக்காமல் முழுக்க முழுக்க இசைக்கலைஞர்களை வைத்தே நேரிடையாக இசையமைத்துள்ளோம். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அப்புக்குட்டி

பட விழா புறக்கணிப்பு: நயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல்

Posted: 22 Apr 2014 09:53 PM PDT

நயன்தாரா மீது அனாமிகா படக்குழுவினர் ஆத்திரத்தில் உள்ளனர். இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஒடிய 'கஹானி' படமே தெலுங்கில் 'அனாமிகா' பெயரில் தயாராகியுள்ளது. வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். சேகர் கம்முலு இயக்கியுள்ளார். இந்த படம் தமிழிலும் 'நீ எங்கே என் அன்பே' என்ற பெயரில் வர இருக்கிறது. 'அனாமிகா' தெலுங்கு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் தவறாது பங்கேற்கும்படி நயன்தாராவுக்கு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் அழைப்பு விடுத்து இருந்தனர். ஆனால் விழாவுக்கு நயன்தாரா போகாமல் புறக்கணித்துவிட்டார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online