Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


61-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

Posted: 16 Apr 2014 07:08 AM PDT

61-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் சிறந்த படமாக ஷிப் ஆப் தீசிஸ் என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. ஷாகித் படத்தில் நடித்த ராஜ்குமார் ராவ் சிறந்த நடிகராகவும், அப்படத்தின் இயக்குனர் ஹன்சால் மேத்தா சிறந்த இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் குறும்படமான

ஜில்லா 100-வது நாள் விழா: விஜய் பங்கேற்பு

Posted: 16 Apr 2014 06:48 AM PDT

விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'ஜில்லா'. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். தமிழில் வெற்றியடைந்துள்ள ஜில்லா படம் தற்போது 100-வது நாளை எட்டியுள்ளது.

கிருஷ்ணாவிற்கு என் மீது வயிற்றெரிச்சல்: ரூபா மஞ்சரி

Posted: 16 Apr 2014 05:46 AM PDT

'அலிபாபா', 'கழுகு' போன்ற படத்தில் நடித்தவர் கிருஷ்ணா. இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் 'யாமிருக்க பயமே'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரூபா மஞ்சரி நடிக்கின்றார். கருணா, ஓவியா, மயில்சாமி, ஆதவ் கண்ணதாசன், அனஸ்வரா ஆகியோரும் நடிக்கிறார்கள். காமெடி திரில்லராக உருவாகிவரும் இப்படத்தை டி.கே இயக்குகிறார். இவர் கே.வி.ஆனந்திடம்

முஸ்லீம் மதத்துக்கு மாறினார் நடிகர் ஜெய்!

Posted: 16 Apr 2014 04:36 AM PDT

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறியதாக ஊடகங்கள் செய்தி பரவியது. இதை அவரும் வெளிப்படையாகவே அறிவித்தார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. நடிகர் ஜெய், 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'திருமணம் எனும் நிக்கா' படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவர் போன்று நடித்திருக்கிறார். இப்படத்தில்

61-வது தேசிய திரைப்பட விருது: சிறந்த தமிழ் படமாக ‘தங்கமீன்கள்’ தேர்வு

Posted: 16 Apr 2014 04:04 AM PDT

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில், 61-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், சிறந்த தமிழ் திரைப்படமாக ராம் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த 'தங்கமீன்கள்' படம் தேர்வாகியுள்ளது. இப்படம் ஏற்கெனவே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. மேலும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு இப்படத்தில் நடித்த சாதனா தேர்வாகியுள்ளார். சிறந்த பாடலாசிரியராக இப்படத்தில்

மோடியுடனான சந்திப்பு அரசியல் ரீதியானதல்ல: விஜய் கருத்து

Posted: 16 Apr 2014 03:09 AM PDT

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடியை நடிகர் விஜய் இன்று மாலை கோவையில் சந்திக்கிறார். இது குறித்து நடிகர் விஜய் கூறுகையில்; நமது நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மோடி என்னை சந்திக்க விரும்பினார்.

கோவையில் இன்று மாலை மோடியுடன் நடிகர் விஜய் சந்திப்பு

Posted: 16 Apr 2014 02:35 AM PDT

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நடிகர் விஜய் இன்று மாலை சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார். ரஜினி வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இதன் மூலம் பாரதீய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அடுத்து விஜய்யையும் நரேந்திர மோடி சந்திக்கிறார்.

மீண்டும் கௌதம் மேனனுடன் இணைந்த ஹாரீஸ் ஜெயராஜ்

Posted: 16 Apr 2014 02:26 AM PDT

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் தனது 55-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் முதன்முதலாக கௌதம் மேனனுடன் கைகோர்த்திருக்கும் அஜீத் இப்படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வரவிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியுள்ளது. கௌதம் மேனன் படத்தில் கதை எந்த அளவுக்கு பேசப்படுமோ அதேபோல் அவரது

பேச்சுவார்த்தையில் சுமூகம்: தெனாலி ராமன் திட்டமிட்டபடி ஏப்.18-ல் வெளியாகிறது

Posted: 16 Apr 2014 12:55 AM PDT

வடிவேலு இரு வேடங்களில் நடிக்கும் 'தெனாலிராமன்' படம் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்திருக்கும் இப்படத்திற்கு தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இப்படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தி காட்சிகள் வைத்துள்ளதாகவும் எனவே அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தெலுங்கு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. வடிவேலு வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.

சமந்தாவுக்கு படங்கள் குவிகிறது

Posted: 15 Apr 2014 11:58 PM PDT

சமந்தா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் 'பாணா காத்தாடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 'நான் ஈ' படம் மேலும் பிரபலபடுத்தியது. தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது தமிழில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. விஜய் ஜோடியாக 'கத்தி' படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இதை இயக்குகிறார். சூர்யா ஜோடியாக 'அஞ்சான்' படத்தில் நடிக்கிறார். லிங்குசாமி இதை இயக்குகிறார்.

ஜெனரேட்டர் நிறுவனம் மீது வழக்கு: ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

Posted: 15 Apr 2014 11:52 PM PDT

பிரபல தமிழ் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினியுடன் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். ரம்யா கிருஷ்ணன் ஜெனரேட்டர் நிறுவனம் ஒன்றின் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2010–ம் ஆண்டு ஜூலை மாதம் 23–ந்தேதி ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்துக்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏஜென்சியிடம் ஜெனரேட்டர் வாங்கியதாகவும் அது வாங்கிய

ஆர்யாவுக்கு பெண் தேடுகிறேன்: நடிகர் ஷாம்

Posted: 15 Apr 2014 09:03 PM PDT

ஆர்யாவும், ஷாமும் 'உள்ளம் கேட்குமே' என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். எஸ்.பி.ஜனநாதன் டைரக்ஷனில், 'புறம்போக்கு' என்ற படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இதில், இன்னொரு கதாநாயகனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார். 3 கதாநாயகர்கள் இணைந்து நடிப்பதில் உள்ள சவுகரியம், அசவுகரியம் பற்றி கேட்டதற்கு ஷாம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- ''இந்தி பட உலகில், நான்கு அல்லது ஐந்து கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ் பட உலகில் இப்போதுதான் அந்த கலாசாரம் ஆரம்பித்து இருக்கிறது. 'புறம்போக்கு' ஒரு புதுவிதமான கதை. டைரக்டர் ஜனநாதன் டைரக்ஷனில், 'இயற்கை' படத்தில் ஏற்கனவே நடித்து இருக்கிறேன். சமீபத்தில் அவர் என்னிடம் 6 கதைகள் சொன்னார். அதில் பிடித்த கதை இது. 'புறம்போக்கு' படத்தில், மூன்று பேருக்குமே சமமான கதாபாத்திரங்கள். எங்களுக்குள் போட்டி இருந்தாலும், அது ஆரோக்கியமான போட்டியாகவே இருக்கும். நானும், ஆர்யாவும் 'உள்ளம் கேட்குமே' படத்தில் ஏற்கனவே இணைந்து நடித்து இருக்கிறோம். இது, எங்களுக்கு இரண்டாவது படம். முதல் படத்தில் ஏற்பட்ட நட்பு, இன்னும் வளர்ந்து இருக்கிறது. ஆர்யா இப்போது இர

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online