Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்த பி.சுசீலா

Posted: 15 Apr 2014 03:05 AM PDT

எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இப்படம் சென்னையில் சத்யம், எஸ்கேப், ஆல்பர்ட் தியேட்டர்களில் 5–வது வாரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. தற்போது வேளச்சேரியில் பினிக்ஸ் மாலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள லக்ஸ் சினிமாஸ் தியேட்டரிலும் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்பட்டு உள்ளது.

சூர்யா-வெங்கட்பிரபு இணையும் புதிய பட பூஜை

Posted: 15 Apr 2014 01:02 AM PDT

சிங்கம்-2 படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 'அஞ்சான்' படத்தில் நடிக்க வருகிறார். இதில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆகஸ்டு மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இப்படத்துக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். இதன் படபூஜை தமிழ்ப் புத்தாண்டையொட்டி நேற்று நடந்தது. இதில் சூர்யா, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் இதனை தயாரிக்கிறது. மேலும் யுவன்

மீண்டும் வெளிவரும் அஜீத்தின் அமர்க்களம்

Posted: 14 Apr 2014 10:20 AM PDT

கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜீத்தின் 25-வது படமாக வெளிவந்த 'அமர்க்களம்' பாக்ஸ் ஆபீசில் பெரிய வரவேற்பைப் பெற்றது. சரணின் இயக்கத்திலும், பரத்வாஜின் இசையமைப்பிலும் வெளிவந்த இந்தப் படம் அஜீத்திற்கும் திரையுலகில் ஒரு திருப்புமுனையைத் தந்தது. இது நாள் வரை மென்மையான காதல் ஹீரோவாக காட்சி தந்த அஜீத்திற்கு இந்தப் படம் ஒரு வெகுஜன ஹீரோ தோற்றத்தை ஏற்படுத்தித் தந்தது. அது மட்டுமின்றி இந்தப் படத்தில் திரையில் தனக்கு ஜோடியாக வந்த ஷாலினியை நிஜ வாழ்விலும் பின்னர் அஜீத் கரம் பிடித்து தனது வாழ்க்கைத் துணையாக்கிக்கொண்டார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online