Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


வாலு படத்தில் நடிக்க மறுப்பு: ஹன்சிகா மீது நடவடிக்கை?

Posted: 14 Apr 2014 02:58 AM PDT

சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தனர். இதன் படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இருவருமே காதலை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால் சில வாரங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.காதலை முறித்து விட்டதாக அறிவித்தனர். இதனால் வாலு படம் முடிவடையாமல் நிற்கிறது. அந்த படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வருகிறார். இதையடுத்து ஹன்சிகா மீது வாலு பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

கனடாவில் விக்ரமின் ஐ பட பாடல் வெளியீடு

Posted: 14 Apr 2014 02:47 AM PDT

விக்ரமின் 'ஐ' பட பாடல்களை கனடாவில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த படம் விக்ரம்– எமிஜாக்சன் ஜோடியாக நடிக்க மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இதில் விக்ரம் தனது உடம்பை வித்தியாசமான தோற்றத்தில் உருமாற்றி கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார். ஷங்கர், விக்ரம் கூட்டணியில் 2005–ல் வந்த 'அந்நியன்' படம் வெற்றிகரமாக ஓடியது. அதுபோல் இந்த படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழாவை கனடாவில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய

பட வாய்ப்புகள் குறைந்ததால் நீச்சல் உடைக்கு மாறிய இலியானா

Posted: 14 Apr 2014 01:50 AM PDT

தமிழில் 'கேடி' விஜய் ஜோடியாக நண்பன் படங்களில் இலியானா நடித்தார். அதன் பிறகு தமிழ் படவாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார் அங்கும் இப்போது படங்கள் இல்லை. ஒரே ஒரு இந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறார். ஒன்றரை கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி நம்பர் 1 நடிகை இடத்தை எட்டி பிடிக்கும் நிலையில் இருந்த அவருக்கு எதிர்பாராமல் சரிவு ஏற்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு பட உலகில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

தெனாலிராமன் படத்தை எதிர்ப்பதா?: பாரதிராஜா கண்டனம்

Posted: 14 Apr 2014 12:26 AM PDT

வடிவேலுவின் தெனாலிராமன் படத்தை எதிர்ப்பவர்ளுக்கு டைரக்டர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சமீபகாலமாக தமிழ் திரைப்படத்துறை கலைஞர்களையும், தமிழ் திரைப்படத் துறையையும் சீண்டிப்பார்ப்பது என்பது வழக்கமாக உள்ளது. விஸ்வரூபம் திரைப்படம் தொடங்கி தெனாலிராமன் வரை பல தமிழ் படங்கள் தணிக்கை செய்யப்பட்டும்கூட ஏதோ ஒரு காரணத்தை கூறி எதிர்ப்பை கிளப்பி தமிழ் கலையையும், கலைஞர்களையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். உலக அரசியலில் பெரும் தலைவர்களையும் கிண்டல் கேலி செய்து கார்ட்டூன் வரைவதில்லையா? சர்வாதிகாரி ஹிட்லரையே கிண்டல் செய்து

அஜீத் 55–வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

Posted: 13 Apr 2014 09:36 PM PDT

அஜீத்தின் 55–வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்தை கவுதம்மேனன் இயக்குகிறார். வீரம் படத்தை தொடர்ந்து அஜீத் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த நிலையில் இதன் படபூஜை சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. தற்போது படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் படப்படிப்பு நடந்து வருகிறது. அஜீத், அனுஷ்கா நடிக்கும் காட்சிகளை கவுதம் மேனன்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிச் செருக்கு

Posted: 13 Apr 2014 10:36 AM PDT

பாட்டுக்கோட்டையார் என்றும், பட்டுக்கோட்டையார் என்றும் தமிழர்களால் அன்புடன் நினைவுக் கூரப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஒரு சிறந்த தமிழ் அறிஞராகவும், சிந்தனையாளராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும் திகழ்ந்தவராவார். இவரது பெரும்பாலான பாடல்கள் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி இயற்றப்பட்டவையாகும். இவருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், திராவிட இயக்கத்திலும், கம்யூனிச சித்தாந்தத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கவுரவாம்பாள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online