Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தாதாசாகேப் பால்கே விருதுக்கு பாடலாசிரியர் குல்சார் தேர்வு

Posted: 12 Apr 2014 04:20 AM PDT

2013-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது, இந்தி பாடலாசிரியர் குல்சாருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த 7 கலைஞர்கள் கொண்ட நடுவர் குழு தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, குல்சாரை இந்த விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்திருப்பதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக எக்ஸ் டி சினிமாவில் கோச்சடையான் டிரெய்லர்

Posted: 12 Apr 2014 03:11 AM PDT

திரையில் என்ன நடக்கிறதோ, அதனை திரையரங்கில் உணரும் விதமாக வடிவமைக்கப்பட்ட திரையரங்குதான் எக்ஸ் டி சினிமா. உதாரணத்திற்கு, திரையில் குதிரை ஒன்று ஓடுவதாக காட்டப்பட்டால், பாரவையாளர்கள் அமர்ந்து இருக்கும் இருக்கை குதிரை ஓடுவது போன்று முன்னும் பின்னும் ஆடும். திரையில் மின்னல் வெட்டினால், திரையரங்கில் வெளிச்சக் கீற்றுகள் கண்களை கூசச்செய்யும். எக்ஸ் டி சினிமா புத்தம் புதிய பார்க்கும் அனுபவத்தை நமக்கு வழங்குகிறது.

சிங்கப்பூரில் 40 நாள் சிகிச்சை முடிந்து நடிகர் அம்பரீஷ் பெங்களூர் திரும்பினார்

Posted: 12 Apr 2014 02:55 AM PDT

பிரபல நடிகரும், கர்நாடக மந்திரியுமான நடிகர் அம்பரீஷ் உடல்நலக்கோளாறு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார். மூச்சுத் திணறலால் பெங்களூரில் சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக அங்கு கொண்டு செவ்லப்பட்டார். சிங்கபூரில் 40 நாட்கள் சிகிச்சை முடிந்து அம்பரீஷ் மனைவி நடிகை சுமலதா வுடன் பெங்களூர் திரும்பினார். விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள், ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது வீட்டில் சில

வாலு படத்தில் நடிக்க மறுப்பா?: படஅதிபர் புகாருக்கு ஹன்சிகா பதில்

Posted: 12 Apr 2014 02:44 AM PDT

சிம்புவும், ஹன்சிகாவும் வாலு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். விஜய்சந்தர் இயக்குகிறார். இப்படத்தின் வசன காட்சிகள் முடிவடைந்துவிட்டன. பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி உள்ளது. இந்த பாடல்காட்சியில் நடித்து கொடுக்க ஹன்சிகா மறுப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 'வாலு' படத்தில் நடித்தபோதுதான் சிம்பு– ஹன்சிகா இடையே காதல் மலர்ந்தது. பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இதனால்தான் சிம்புவுடன் பாடல் காட்சியில் நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யாவை அவமதிக்கவில்லை: கரீனாகபூர் விளக்கம்

Posted: 12 Apr 2014 12:23 AM PDT

நடிகர் சூர்யாவை அவமதிக்கவில்லை என்று கரீனா கபூர் விளக்கம் அளித்துள்ளார். சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்தில் இந்தி நடிகை கரீனா கபூர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போவதாக செய்திகள் வந்தன. இது குறித்து மும்பையில் கரீனாகபூரிடம் நிருபர்கள் கேட்டபோது இதைா மறுத்தார். சூர்யாவை யார் என்றே எனக்கு தெரியாது என்றும், இந்தி தவிர வேறு மொழி படங்களில் நடிக்கமாட்டேன் என்றும் அவர் கூறியதாக செய்திகள் வெளியானது.

மனிஷா கொய்ராலா வாழ்க்கை படமாகிறது

Posted: 11 Apr 2014 11:23 PM PDT

மனிஷா கொய்ராலா 1989–ல் சினிமாவுக்கு வந்தார். தமிழில் பம்பாய் படம் மூலம் அறிமுகமானார். 1995–ல் இப்படம் வந்தது, முதல்வன், பாபா, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தார். மனிஷா கொய்ராலாவுக்கும் சாம்ராட் தஹால் என்ற தொழில் அதிபருக்கும் 2010–ல் திருமணம் நடந்தது. 2012–ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்தும்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online