Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


திருட்டுத்தனமாக வெளியான வாலு பாடல்கள்

Posted: 09 Mar 2014 01:53 AM PST

வாலு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்து வரும் படம் வாலு. விஜய் சந்தர் இயக்க, தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறியிருந்தனர். ஆனால் பல காரணங்களால் அன்று பாடல்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் படத்தின் அனைத்துப் பாடல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஆர்யாவை மீண்டும் இயக்கும் விஜய்

Posted: 09 Mar 2014 01:49 AM PST

முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த விஜய் முதல்முறையாக சைவம் என்ற படத்தை முன்னணி நடிகர்கள் இல்லாமல் உருவாக்கியுள்ளார். தெய்வத்திருமகள் சாராதான் இப்படத்தின் முக்கிய நட்சத்திரம்.

வெற்றிமாறன் படம் - விலகினார் துரை தயாநிதி

Posted: 09 Mar 2014 01:43 AM PST

ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷ், வெற்றிமாறன் இணையும் படத்தை துரை தயாநிதியின் கிளவுட் நைன் அல்லது மீகா நிறுவனம் தயாரிக்கும் என்றே கூறப்பட்டு வந்தது. திடீர் திருப்பமாக துரை தயாநிதிக்குப் பதில் தனுஷே இந்தப் புதிய படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளார்.

சாக்லெட் பாய்க்கு குட்பை

Posted: 09 Mar 2014 01:41 AM PST

தனது சாக்லெட் பாய் இமேஜ் ஜிகிர்தண்டா படத்தோடு காலாவதியாகிவிடும் என்று கூறினார் சித்தார்த்.கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியிருக்கும் ஜிகிர்தண்டாவில் இயக்குனராக நடித்துள்ளார் சித்தார்த். மதுரையின் நிஜ ரவுடிகளை அருகில் இருந்து கவனித்து படம் எடுக்க நினைக்கும் அவரது முயற்சி அவருக்கு ஆபத்தை தேடித்தருகிறது. அதிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்வதுதான் கதையாம்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online