Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


தேர்தலை கண்டு நடுங்கும் நடிகர்-நடிகைகள்

Posted: 07 Mar 2014 10:05 PM PST

தேர்தலுக்கும், சினிமா உலகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாக்காளர்களை கவர்வதற்காக பெரும்பாலான அரசியல் கட்சிகள் சினிமா பிரபலங்களை பயன்படுத்துகின்றன. அரசியல் தலைவர்கள், தங்கள் பிரசார கூட்டங்களில் மக்கள் கூட்டத்தை சேர்ப்பதற்காக பெருந்தொகை கொடுத்து நடிகர்&நடிகைகளை அழைத்து வருகின்றனர்.

கேரள கவர்னராக ஷீலா தீட்சித் நியமனம்: பேஸ்புக்கில் நடிகை ரீமா கல்லிங்கல் விமர்சனம்

Posted: 07 Mar 2014 01:20 AM PST

திருவனந்தபுரம்,

சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் முதல் மந்திரியாக இருந்த ஷீலாதீட்சித் தோல்வி அடைந்தார். காங்கிரசும் ஆட்சையை இழந்தது. இந்த நிலையில்  கேரள கவர்னராக முன்னாள் முதல்-மந்திரி  ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வருகிற 10-ந்தேதி கேரளா வருகிறார். 12 அல்லது 13-ந்தேதி கேரள கவர்னராக பொறுப்பேற்க உள்ளார்.

கேரளாவில் கவர்னர் பதவி வகிக்க ஆர்வமாக இருப்ப தாகவும், கேரளாவில் தங்கி இருப்பதில் மகிழ்ச்சி அடைந்த தாகவும் ஷீலா தீட்சித் தெரி வித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா பாலாஜி திடீர் மரணம்

Posted: 07 Mar 2014 01:06 AM PST

சென்னை,

சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நகைச்சுவை  நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43

டெலிவிஷனில் லொள்ளு சபாநிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இவரை லொள்ளு சபா பாலாஜி என்றும் அழைத்தனர்.

டி.வி.யில் சூப்பர் டென் நிகழ்ச்சியிலும் வந்தார். காமெடி நடிகர் சந்தானத்தை டி.வியில் அறிமுகப்படுத்தியவர் இவர்.சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு காமெடி வசனம் இவர் தான் எழுதினார். அனகாபுத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online