Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தேர்தலை எதிர்த்து கலைப்புலி எஸ்.தாணு தாக்கல் செய்த அப்பீல் மனு தள்ளுபடி

Posted: 06 Mar 2014 11:09 AM PST

சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் (2013–2015–ம் ஆண்டுக்கான) நிர்வாகிகள் தேர்தல் கடந்த 7.9.2013 அன்று நடைபெற்றது. அந்த தேர்தலில் கேயார் என்ற கோதண்டராமையா தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான அணி தோல்வி அடைந்தது.

மாதுரி தீட்சித்தின் "குலாப் காங்" படத்திற்கான தடையை நீக்கியது ஐகோர்ட்டு

Posted: 06 Mar 2014 04:12 AM PST

புதுடெல்லி,

பெண்கள் உரிமைக்காக போராடிய குலாபி காங் கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மாதுரி தீட்சித்தின் "குலாப் காங்" திரைப்படம் நாளை திரையிடப்படுகிறது.

பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி, நரேந்திர மோடியுடன் சந்திப்பு

Posted: 06 Mar 2014 03:29 AM PST

காந்திநகர்,

பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை குஜராத்துக்கு சென்று சந்தித்தார். அப்போது அவர் கேரள மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நரேந்திர மோடிக்கு விளக்கினார். குறிப்பாக விழிஞ்சம் துறைமுக திட்டம், ரெயில்வே நவீனமயமாக்கல், தென்னிந்திய சினிமா தொழிலில் உள்ள பிரச்சினைகள் ஆகியவை குறித்து அவர் விளக்கியதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் ஆடியோ டிராக் லிஸ்ட் முழு விவரம்

Posted: 05 Mar 2014 10:19 PM PST

சென்னை,

ரஜினிகாந்த் தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் புதிய படம், 'கோச்சடையான்.' இந்த படத்தை அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்டு செய்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்துள்ளார்.

ரஜினிகாந்துடன், சரத்குமார், நாசர், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள். படம், 'மோஷன் கேப்சர்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் பிரமாண்டமான முறையில் தயாராகி இருக்கிறது.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் வருகிற 9–ந்தேதி காலை 10–30 மணிக்கு நடக்கிறது.

தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகையின் உடல் நிலையில் முன்னேற்றம்

Posted: 05 Mar 2014 07:05 PM PST

பெங்களூர்

பெங்களூர் காமாட்சிபாளையாவை சேர்ந்தவர் நடிகை விந்தியா. இவரது நெருங்கிய நண்பர் மஞ்சுநாத். அவர்கள் 2 பேரும் சேர்ந்து சிம்லாவுக்கு சுற்றுலா சென்று வந்தனர். விந்தியாவுக்கும், மஞ்சுநாத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நீரிழிவு மாத்திரைகளை சாப்பிட்டு நடிகை விந்தியா தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மயங்கி நிலையில் விந்தியாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online