Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடபோவதில்லை: நடிகை பீரித்தி ஜிந்தா

Posted: 04 Mar 2014 11:24 PM PST

மும்பை,

வடக்கு மத்திய தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் பிரியா தத்தை எதிர்த்து நடிகை பீரிந்த ஜிந்தா போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.  இந்த நிலையில், டிவிட்டரில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை பீரித்தி ஜிந்தா,  நீங்கள் இதை எங்கே படித்தீர்கள். தயவு செய்து அந்த பேப்பரை கிழித்து எரியுங்கள். ஏனெனில் இது நூறு சதவீதம் உண்மைக்கு மாறானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நடிகையான பிரீத்தி ஜிந்தா, ஐபிஎல் கிரிக்கெட் அணி ஒன்றின் இணை உரிமையாளாரகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.
 

காதல் முறிவுக்கு பின் இணைந்து நடிக்கும் சிம்பு ஹன்சிகா

Posted: 04 Mar 2014 09:20 PM PST

சென்னை,

நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு, வேட்டை மன்னன்  படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும்  நெருக்கம் ஏற்பட்டு இருவருமே  காதலை    பகீரங்கமாக அறிவித்தார்கள். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு 'ஹன்சிகாவுடனான என்னுடைய உறவு முறிந்து விட்டது. இந்த உறவில் நான் போதும் என்ற அளவுக்கு அனுபவப்பட்டு விட்டேன். நன்றாக சிந்தித்த பிறகே இந்த முடிவுக்கு வந்து உள்ளேன். இனிமேல் ஹன்சிகாவுக்கும், எனக்கும் எதுவும் இல்லை. என  அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார்.

குடிபோதையில் போலீசாருடன் தகராறு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர் கைது

Posted: 04 Mar 2014 06:50 PM PST

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர் பாரத் நேற்று அதிகாலை குடிபோதையில் காரை ஓட்டி வந்தார். அப்போது மாதப்பூர் போலீசார் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

அப்போது போலீசாருடன் பாரத் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். இதனால், போலீசார் அவரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். உள்ளூர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். அங்கு அவர் ஜாமீன் பெற்று சென்றார்.

 

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online