Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


அரசியலுக்கு வருவது உறுதி ‘‘3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது’’; நடிகை நமீதா பேட்டி

Posted: 11 Mar 2014 03:11 PM PDT

சென்னை,

''நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது'' என்று நடிகை நமீதா கூறினார்.

பேட்டி

நடிகை நமீதா, 'தினத்தந்தி' நிருபருக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

''நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இப்போது அதுபற்றி அதிகமாக பேசமுடியாது. நல்ல விஷயம் நடக்கும் முன்பு, அதுபற்றி வெளியே எதுவும் பேசக்கூடாது'' என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள்.

இந்தி நடிகை ஷில்பாசெட்டி வீட்டில் தீ விபத்து

Posted: 11 Mar 2014 01:18 PM PDT

மும்பை,

மும்பை அந்தேரி மேற்கு பகுதி ஹரே ராம் ஹரே கிருஷ்ணா தெருவில் இந்தி நடிகை ஷில்பாசெட்டியின் பங்களா உள்ளது. நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஷில்பாசெட்டியின் பங்களாவில் மின் கசிவு காரணமாக முதல் மாடியில் உள்ள ஒரு அறை தீப்பிடித்து எரிந்தது.

அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த நடிகை ஷில்பாசெட்டியின் தந்தை எஸ்.பி. செட்டி அலறி அடித்துக் கொண்டு எழுந்தார். உடனே அவர் ஜுகு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

துணை கதாநாயகியாக மாற்றியதால் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இருந்து விலகி விட்டேன்’’ நடிகை மனிஷா யாதவ் பேட்டி

Posted: 11 Mar 2014 12:25 PM PDT

சென்னை,

''என்னை துணை கதாநாயகியாக மாற்றியதால், இடம் பொருள் ஏவல் படத்தில் இருந்து விலகி விட்டேன்'' என்று நடிகை மனிஷா யாதவ் கூறினார்.

கருத்து வேறுபாடு

டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் அவருடைய தம்பி என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கும் படம், 'இடம் பொருள் ஏவல்.' இந்த படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி ஜோடியாக மனிஷா யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். (இவர், 'வழக்கு எண் 18/9' படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.) விஷ்ணு ஜோடியாக நந்திதா நடித்து வந்தார். சீனுராமசாமி டைரக்டு செய்கிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online