Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


நிமிர்ந்து நில் இனி வீரநடை போடும்: ஜெயம் ரவி

Posted: 08 Mar 2014 05:40 AM PST

ஜெயம் ரவி-அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'நிமிர்ந்து நில்'. இப்படத்தை 'நாடோடிகள்' படத்தை இயக்கிய சமுத்திரகனி இயக்கியுள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தை வெளியிட முடியாமல் போனது. இதையடுத்து இன்று இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் மாலை 6.30 மணி முதல் வெளியாகும் என இப்படத்தை தயாரித்த வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் நாயகன் ஜெயம் ரவி படத்தை வெளியிட ஏற்பட்ட சிரமங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இது யாருக்குமே கடினமான ஒன்றுதான். எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் தங்கள் திரைவாழ்க்கையில் முக்கியமான படங்களை வெளியிடும் சமயத்தில் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படுவது சகஜம். நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். சிரமங்கள் கடினமாக செல்ல செல்ல நாம் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

பாகிஸ்தான் நடிகை சனா கான் கார் விபத்தில் பலி

Posted: 08 Mar 2014 05:05 AM PST

பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை சனா கான், ஐதராபாத் அருகே நடந்த கார் விபத்தில் பலியானார். சனா கானும் அவரது கணவர் பாபர் கானும் நேற்று கராச்சியில் இருந்து ஐதராபாத் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பாபர் கான் ஓட்டிச் சென்றுள்ளார். ஐதராபாத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் சனா கான் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பாபர், லியாகத் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இன்று மாலை 6.30 மணி முதல் திரையரங்குகளில் நிமிர்ந்து நில்

Posted: 08 Mar 2014 03:41 AM PST

சமுத்திர கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் 'நிமிர்ந்து நில்'. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும் ராகினி திவேதி, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நேற்று (07.03.2014) வெளியாவதாக இருந்தது. ஆனால், விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்குமிடையே ஒருசில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இப்படம் திட்டமிட்டபடி நேற்று வெளியாகவில்லை. நேற்று வெளியாகும் என்று திரையரங்குக்கு சென்ற ரசிகர்கள் படம் திரையிடப்படாததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

படம் ரிலீசாகாததால் தற்கொலை முயற்சியா?: சமுத்திரக்கனி விளக்கம்

Posted: 08 Mar 2014 01:40 AM PST

ஜெயம் ரவி, அமலா பால் ஜோடியாக நடித்த 'நிமிர்ந்து நில்' படம் நேற்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் நின்று போனது. தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட கடன் மற்றும் நிதி நெருக்கடி பிரச்சினைகள் காரணமாக படம் வரவில்லை என்று கூறப்பட்டது. இப்படத்தை ரிலீஸ் செய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார்.

கோச்சடையான் விழாவில் ரஜினி புது பட அறிவிப்பு

Posted: 08 Mar 2014 12:17 AM PST

ரஜினியின் கோச்சடையான் படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. அவதார், டின்டின் போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் எடுத்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தி நடிகர் ஷாருக்கான் பங்கேற்கிறார். இந்த விழாவில் ரஜினி தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுறிது. எந்திரன் படத்துக்கு பின்

கவர்ச்சியாக நடிப்பேன்: ஸ்ரீபிரியங்கா

Posted: 08 Mar 2014 12:05 AM PST

கங்காரு படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் ஸ்ரீபிரியங்கா. ஏற்கனவே அகடம் படத்திலும் நடித்துள்ளார். இவர் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் பெண். சினிமா அனுபவம் பற்றி ஸ்ரீபிரியங்கா சொல்கிறார். தமிழ் பெண்கள் நடிக்க விரும்புவது இல்லை. சினிமா பற்றிய தவறான எண்ணமே இதற்கு காரணம். இப்போது எல்லா துறைகளிலும் பெண்கள் வந்திருப்பது போல் சினிமாவுக்கும் வர ஆரம்பித்து விட்டனர். கங்காரு அண்ணன் தங்கை பாசம் பற்றிய படம்.

கலைக்கப்பட்ட அஜீத் ரசிகர் மன்றத்துக்கு மீண்டும் அனுமதியா?

Posted: 08 Mar 2014 12:00 AM PST

கலைக்கப்பட்ட ரசிகர் மன்றம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்குவது குறித்து அஜீத் ஆலோசிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அஜீத் தனது ரசிகர் மன்றங்களை 2011–ல் திடீரென கலைத்தார். அதற்கு முன்புவரை இந்த மன்றங்கள் மூலம் சமூக சேவை பணிகள் செய்தார். மரக்கன்றுகள் நடவைத்தார். ரத்த தானம், ஏழைகளுக்கு உதவிகளும் செய்ய வைத்தார். ஆனால் ரசிகர்கள் சிலர் மன்ற விதிகளை மீறி அரசியலில் ஈடுபட துவங்கினர். ரசிகர் மன்ற கொடிகளுடன் சென்று தேர்தலில் விரும்பிய

கவர்னருக்கு எதிராக விமர்சனம்: சர்ச்சையில் ரீமா கல்லிங்கல்

Posted: 07 Mar 2014 09:23 PM PST

கவர்னரை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் ரீமாகல்லிங்கல். இவர் தமிழில் யுவன் யுவதி படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். மலையாள டைரக்டர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கேரள கவர்னராக இருந்த நிகில்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய கவர்னராக ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்த வாரம் இவர் கேரள கவர்னராக

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online