Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகைக்கு தீவிர சிகிச்சை

Posted: 07 Mar 2014 04:07 AM PST

தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகை விந்தியா தொடர்ந்து மயக்க நிலையில் இருக்கிறார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கிறார்கள். விந்தியா பல கன்னட படங்களில் நடித்துள்ளார். பெங்களூரில் உள்ள காமாட்சி பாளையா பகுதியில் வசித்து வந்தார். இரு தினங்களுக்கு முன் மஞ்சுநாத் என்ற இளைஞருடன் சேர்ந்து சிம்லாவுக்கு சுற்றுலா சென்று வந்தார். அங்கு இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப் படுகிறது. இதனால் வீட்டில் மனம் உடைந்த நிலையில் இருந்த அவர் திடீரென அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். 70 தூக்க மாத்திரைகளை அவர் சாப்பிட்டதாக தெரிகிறது. மயங்கி விழுந்த அவரை பெங்களூரில் உள்ள தனியா

டைரக்டர் பாலா மீது மவுனிகா பாய்ச்சல்

Posted: 07 Mar 2014 03:55 AM PST

டைரக்டர் பாலா கருணை இல்லாதவர். என்னை அடிக்க ஆள் வைத்தார் என்று நடிகை மவுனிகா குற்றம் சாட்டியுள்ளார். இவர் டைரக்டர் பாலுமகேந்திராவின் இரண்டாவது மனைவி ஆவார். மவுனிகா கூறியதாவது:– டைரக்டர் பாலுமகேந்திரா படங்களில் நடித்த போது அவரை காதலித்தேன். முதலில் மறுத்தார். நான் வற்புறுத்தினேன். பிறகு அவர் என்னை விட்டு விலகி போகவில்லை. அவரோடு சேர்ந்து வாழ ஆரம்பித்தேன். நானாக அவரை தாலி கட்டும்படி வற்புறுத்தவில்லை. அவர் தான் ஒரு நாள் திடீரென சிவன் கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டினார். பாலுமகேந்திராவுக்கும் எனக்கும் 28 வருட பந்தம் இருக்கிறது. அவர் என்னை அன்புடன் பார்த்துக் கொண்டார். அப்

திரிஷ்யம் ரீமேக்கில் கமல் ஜோடி கவுதமி

Posted: 07 Mar 2014 03:19 AM PST

திரிஷ்யம் படம் ரீமேக்கில் கமல் ஜோடியாக கவுதமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்த இப்படத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து இருந்தனர். தற்போது இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் வெங்கடேசும், மீனாவும் நடிக்கினறனர். தமிழ் பதிப்பில் மோகன்லால் கேரக்டரில் கமல் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாவே நடிக்கப் போவதாக கூறப்பட்டது. பிறகு நதியா, சிம்ரன் போன்றோர் பெயர்கள் அடிபட்டது. திரிஷ்யம் ரீமேக்கில் கமலுடன் நடிக்கவில்லை என்று சிம்ரன் நேற்று அறிக்கை வெளியிட்டார். தற்போது கவுதமி நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. 'திரிஷ்யம்' படத்தை கவுதமி பார்த்து வெகுவாக பாராட்டினாராம்.

அதர்வாவுடன் காதல் இல்லை: ப்ரியா ஆனந்த்

Posted: 07 Mar 2014 03:01 AM PST

ப்ரியா ஆனந்தும், அதர்வாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் இரும்புக் குதிரை என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து ப்ரியா ஆனந்திடம் கேட்ட போது ஆவேசப்பட்டார். அதர்வாவையும், என்னையும் இணைத்து கதைகட்டி உள்ளனர். அதர்வா டீசன்டானவர் நான், அதர்வா மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் அமர்நாத் மூவரும் ஒன்றாக இருப்போம். நான் எதுவும் பேசமாட்டேன் என்று கருதி இதை கிளப்பிவிட்டுள்ளார்கள் என்றார்.

லொள்ளு சபா பாலாஜி திடீர் மரணம்

Posted: 06 Mar 2014 10:59 PM PST

காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43 டெலிவிஷனில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இவரை லொள்ளு சபா பாலாஜி என்றும் அழைத்தனர். டி.வி.யில் சூப்பர் டென் நிகழ்ச்சியிலும் வந்தார்.

ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படம் வெளியாவதில் சிக்கல்?

Posted: 06 Mar 2014 09:10 PM PST

சமுத்திர கனி இயக்கத்தில் 'ஜெயம் ரவி' நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிமிர்ந்து நில்'. இப்படத்தில் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் முடிவடைந்து இன்று உலகமெங்கும் வெளியாக ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், படத்தின் விநியோகம் சம்பந்தமான பிரச்சினையில் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே சிறு பிரச்சினை எழுந்துள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இருதரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online